பழமையான ஊட்டச்சத்து ஸ்பைருலினா

Spread the love


ஒரு செல் புரதம் கொண்ட சுருள் வடிவிலான நீலப் பச்சைப் பாசி ஊட்டச்சத்து நிறைந்தது. 65 முதல் 70 சதவீதம் இதில் புரதச் சத்துள்ளது. பீட்டா கரோட்டீன் உள்ளிட்ட தாது உப்புக்கள் மற்றும் உயிர்ச் சத்துக்கள் உள்ளது. மனிதனுக்கு அவசியமான அமினோ அமிலங்களில் எட்டு வகைகள் ஸ்பைருலினாவில் சரியான விகித அளவுகளில் உள்ளது. நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் சிலவற்றை நமது உடலே தயாரித்துக் கொள்ளும். ஆனால், அமினோ அமிலங்களைத் தயாரித்துக் கொள்ள இயலாது. இவை அனைத்தும் எளிதில் ஜீரணம் ஆகும் வகையில் ஸ்பைருலினாவால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.


இது உடல் வளர்ச்சிக்கு முக்கியமானது. மற்ற உணவுப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, ஸ்பைருலினாவில் உள்ள புரதம் எளிதில் ஜீரணிக்கும் தன்மையுடையது. இதைப் பதப்படுத்தி, மாவு போல் அரைத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து அருந்தி வரலாம். மாத்திரை, அவல், பொடி வடிவில் ஸ்பைருலினா உணவாகக் கிடைக்கிறது. ஸ்பைருலினா சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய பழமையான தாவரமாகும். இப்பாசி இனம் தான் ஒளிச்சேர்க்கை செய்த முதல் பாசி இனமாகும். அன்று இருந்த கார்பன்-டை-ஆக்ஸைடை சிறப்பாக பயன்படுத்தி ஆகிஸிஜனை உற்பத்தி செய்தது.
1927ஆம் ஆண்டு ஒரு ஜெர்மானிய அறிஞரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. இந்த புராதன உயிரினத்தில் உள்ள ஊட்டச் சத்துக்கள் மனித உடலில் உள்ள செல்களால் எளிதில் உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்த பாசியைத் தான் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். மீன் உணவுகளில் புரதச் சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்வதே காரணம். 80 சதவீதம் காரத் தன்மையும், 20 சதவீதம் அமிலத் தன்மையும் சேர்ந்த சமச்சீரான உணவு, பழங்கள், காய்கறிகள், பாசிகளில் உள்ளன. 20 சதவீத அமில உணவு இறைச்சி, கடல் உணவுகள், கோதுமை போன்றவையாகும்.


ஒரு கிலோ ஸ்பைருலினாவில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அடிப்படையில் 1000 கிலோ காய்கறிகளுக்குச் சமமாக உள்ளது. வைட்டமின் ஏ, பி16, பி12, இரும்பு, அமினோ, கார்போஹைட்ரேட், தாது உப்பு, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ளது. நமது உடலில் உள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாக சோடியம் சூப்பர் ஆக்சைடு டிஸ்முடோஸ் என்ற என்சைம்கள் உதவுகிறது. இந்த என்ஸைம் ஸ்பைருலினாவில் உள்ளது. இதன் மூலம் நூறாண்டுகள் ஆரோக்கியமாக வாழ ஸ்பைருலினா உதவுகிறது. புற்று நோய் மற்றும் குடல் நோய் (அல்சர்) வராது தடுக்கிறது. உடலில் அலர்ஜிகளை சமன்படுத்தி சரி செய்கிறது.

ஸ்பைருலினாவின் மருத்துவப் பயன்கள்

 1. உடலில் சர்க்கரை அளவை சமன்படுத்தி சர்க்கரை வியாதியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது.
 2. உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை வெளியேற்றி இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துகிறது.
 3. இதில் உள்ள பீட்டா கரோட்டீன், பச்சையம் மற்றும் ஜி.எல்.ஏ. உடலில் கொழுப்பைக் கரைத்து உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது.
 4. இதில் உள்ள பைக்கோசையனின் என்ற மூலப் பொருள் புற்று நோயைக் கட்டுப்படுத்தி ஆரம்ப நிலையில் காணப்படும் கேன்சர் செல்களை அழிக்கிறது.
 5. ஃபோலிக் அமிலம் மற்றும் பி12 மூளையின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதுடன் நினைவாற்றலை, புத்திக் கூர்மையை அதிகப்படுத்துகின்றன.
 6. மன அழுத்தம் குறைக்க உதவுகிறது.
 7. இளைய வயதினரிட்டையே காணப்படும் மெண்டல் டிப்ரஷனை குறைக்கிறது.
 8. கண் காட்ராக்ட் குறைபாடுகளை நீக்குகிறது.
 9. நீரிழிவினால் ஏற்படும் கண் விழித்திரை சேதம், நரம்பு சார்ந்த விழித்திரை சேதம், கண் விழித்திரை இரத்த நாளம் கடினமாதல் போன்றவை வராமல் தடுக்கிறது.
 10. இதில் உள்ள சிஸ்டின் மற்றும் அமினோ அமிலங்கள் இரைப்பை மற்றும் சிறுகுடல் அல்சரை (புண்களை) விரைவாகக் குணப்படுத்துகிறது. எச்.ஐ.வி./எயிட்ஸ் துணை வியாதிகளை மிகவும் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
 11. கர்ப்பகால மலச்சிக்கல், இரத்தசோகை பிரச்சனைகளை நீக்கி சுகப்பிரசவம் அமைய உதவுகிறது.
 12. தோலை மிருது படுத்தும் ஸ்கின் டோனராக, முகத்தில் தோன்றும் கருவளையங்களை நீக்கி முகத்தின் அழகினை அதிகரிக்க உதவுகிறது.
 13. சருமம் சார்ந்த நோய்கள் வருவதில்லை.
 14. முடி சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது.
 15. தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் நீரில் சர்க்கரை, எலுமிச்சம் பழச் சாறுடன் இரண்டு கிராம் ஸ்பைருலினா பொடியை கலந்து அருந்தி வர, ஊட்டச்சத்துக் குறைபாடு நீங்கி, உடல் பலம் பெறும். மூன்று வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.
 16. பெரியவர்களுக்கு தினசரி 4 முதல் 6 கிராம் அளவிலும், 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு 1 முதல் 2 கிராம் அளவிலும் எடுத்துக் கொள்ளலாம்.
 17. பொடி மற்றும் கேப்சூல் வடிவில் கடைகளில் கிடைக்கிறது.
 18. எலுமிச்சைச் சாறு, கரும்புச் சாறு, அன்னாசிச் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றில் கலந்து அருந்துவது நல்லது. வெறும் வயிற்றிலும் சாப்பிடலாம்.
  ஸ்பைருலினாவில் உள்ள எட்டு அமிலங்களும், அவற்றின் செயல்பாடுகளும்
  ஐஸோலியூசின் – இது முறையான உடல் வளர்ச்சிக்கும், புத்திக்கூர்மைக்கும் அவசியமானதாகும்.
  லியூசின் – மூளை வேலை செய்வதை தூண்டி விடுகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
  லைசின் – இது இரத்தத்தில் ஆண்டி பாடிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், இரத்த ஓட்ட மண்டலத்தைச் சீராக்குவதற்கும், உடலில் செல்கள் இயல்பாக வளரவும் உதவுகிறது.
 19. மெத்தியோனின் – இது ஈரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நரம்பு மண்டலத்தில் எவ்வித அழுத்தமும் (ஸ்ட்ரெஸ்) ஏற்படாமல் தடுத்து நரம்புகள் இயல்பான நிலையில் இருக்கவும், செயல்படவும் செய்கிறது.
  ஃபினைலலினின் – மனித உடலில் தைராய்டு சுரப்பியில், தைராக்ஸின் என்னும் திரவத்தைச் சுரக்கவும், அதனால் வளர்சிதை மாற்றம் ஏற்படவும் வழிவகுக்கிறது.
  திரியோனின் – சிறுகுடல் தனது வேலையை ஒழுங்காகச் செய்யவும் அதாவது உணவு சரியாக ஜீரணமாகவும், அதன் பயன்கள் உடலில் சேரவும் உதவுகின்றது.
  ட்ரிப்டோஃபேன் – வைட்டமின் பி-ஐப் பெரிதும் பயன்படுத்துகிறது. நரம்பு மண்டலத்தை, ஆரோக்கியத்துடன் வைத்திருந்து, தேவையற்ற உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்த்து, அமைதியைத் தருகின்றது.
  வேலைன் – மூளையைத் திறம்படச் செய்து, செயல்பட வைக்கிறது. உடல் திசுக்கள் இணைந்து செயல்படவும் உதவுகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love