வெள்ளரிக்காய் சூப்
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – 300 மி.லி.
கிரீம் – 2 டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
செய்முறை
வெள்ளரிக்காயை துருவிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சூடாக்கி அதில் வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கவும், பிறகு துருவிய வெள்ளரிக்காயையும் 2 நிமிடம் வதக்கவும். பின்பு கார்ன் ப்ளாரையும் போட்டு கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கவும். அதன் பின்பு தண்ணீரைச் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், கிரீமைச் சேர்த்து சூடாகப் பறிமாறவும்.
பாகற்காய் சூப்
தேவையான பொருட்கள்
பாகற்காய் – 100 கிராம்
தண்ணீர் – 250 மி.லி.
தக்காளி – 1
வெங்காயம் – 1
புதினா, கொத்தமல்லி – சிறிது
மிளகு, சீரகத்தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாகற்காயை கழுவி நறுக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் தக்காளி, வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும் மசித்து சூப்பை மட்டும் வடிகட்டவும். பின் உப்பு, மிளகு, சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
பூசணிக்காய் சூப்
தேவையான பொருட்கள்
பூசணிக்காய் – 1 கீற்று
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 1 கப்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள், உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை
பூசணிக்காயின் தோலைச்சீவி சிறு, சிறு துண்டுகளாக்கி வேகவைத்துக் கொள்ளவும். பூசணிக்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய் விட்டு மாவைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். சூடான பால், பூசணிக்காய் விழுது, உப்புத்தூள், ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்க விடவும். மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி பரிமாறவும்.