நவ தானியங்களில் ஒன்றாக இருக்க கூடிய சோளம் செரிமானத்திற்கு மிகவும்முக்கியமான உணவு. ஒரு நாளைக்கு நமக்கு தேவையாக இருக்க கூடிய நார்சத்து ஒரு கப் சோளத்தில்48% அடங்கியுள்ளது. அதனால் இது செரிமானத்தை ஊக்குவிக்கும். இதனால் வாயு,மலச்சிக்கல், டயரியா போன்ற பிரட்சனைகள் தடுக்கப்படுகின்றது. இரண்டாவதாக சோளத்தில் புற்றுநோயை தடுக்க கூடிய ஆண்டி-ஆக்சிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் Anti-carcinogenic, சிறந்த கேன்சர் எதிர்ப்பு மட்டுமின்றி நோய்கிருமிகளை வெளியேற்றவும்செய்கின்றது. இதனால் செல்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கின்றது.
சோளத்தில் இருக்கும் நார்சத்து உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கின்றது. இதனால் இரத்தத்திலும், தமனிகளிலும்கொழுப்பு சேராமல் இருக்கும். எனவே இரத்தத்திற்கு எந்த தீங்கும் ஏற்படுவதில்லை.சோளத்தில் அதிசிறந்த டானின் என்ற என்சைம் வழங்ககூடிய பொருள் உள்ளது. இதுஇரத்தத்தில் இருக்கும் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவை சீராக்க முயற்சிசெய்யும். அதனால் சர்க்கரை நோய் வராது. அதோடு டையாபெட்டிக் உள்ளவர்களுக்கும் இதுநல்ல உணவு.
சோளத்தில் மெக்னீஷியம் ஒரு மேஜர் நியூட்ரியேஷனாக இருக்கின்றது. இது கால்சியத்தின்செயல்பாட்டை ஊக்குவிக்கும். சோளம் சாப்பிடுவதனால் எலும்புகளையும் வலிமையாக வைக்கலாம். சோளத்தில் அதிகளவில் மினரல்ஸ் உள்ளது. அதனால் மெக்னீஷியம் எப்படி கால்சியத்தை Boost செய்கின்றதோ அதே மாதிரி இதில் இருக்கும் காப்பர், இரும்புசத்தையும் Boost செய்கின்றது. இந்த இரும்பு சத்து நமது இரத்தத்தில் Oxidization-னை குறைவில்லாமல் பாதுகாக்கின்றது.அதனால் நம்முடைய தசைகள் வலிமையாகவும், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.மற்றொரு விஷயம்.
இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி இரத்த சோகையும் ஏற்படாது. அதோடு செல்கள் அழிவதும் தடுக்கப்படுகின்றது. சோளத்தில் வைட்டமின் பி,உள்ளது. இது நமது உடலிற்கு நல்ல ஆற்றலை வழங்கும். அதனால் சோளத்தை அடிக்கடி சாப்பிட்டு வருவதனால் உடலிற்கு களைப்பு ஏற்படாமல் பார்க்கலாம். அதனால் படிக்கிறவர்களுக்கும், வளரும் குழந்தைகளுக்கும் சோளம் அத்தியாவசியமான உணவு.