தொண்டைப் புண்ணுக்கு தீர்வு வெங்காயம்

Spread the love

வெங்காயம் காய்கறி வகைகளில் சிறந்த ஒன்று. நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டதாகவும் இருக்கிறது.

இதன் மருத்துவக் குணங்கள்

வெங்காயப் பூவை கசக்கி அதன் இரசத்தைக் கண்களில் சில துளிகள் விட கண் மங்கல் நீங்கும். வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்துண்ண, குளிர்க் காய்ச்சல் குணமாகும்.

வெங்காயத்தை உப்புடன் குடிநீரிட்டுக் குடிக்க நீரெரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு உடையும்.

வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி உண்ண உடல் அனல் உடனே தணியும்.

வெங்காயப் பூவை சமைத்தோ, குடிநீராகவோ அல்லது நிழலில் உலர்த்திப் பொடியாக்கி தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட நீர்க்கடுப்பு, உடல் சூடு, குளிர்க் காய்ச்சல் குணமாகும்.

வெங்காயத்தை சாறு பிழிந்து முகர மூர்ச்சையும், மயக்கமும் தெளியும்.

வெங்காயச் சாறு  2 துளி காதில் விட காது நோய் குணமாகும்.

வெங்காயச் சாறுடன் சிறிது காபி சேர்த்து 3 வேளை தொடர்ந்து குடித்து வர தொண்டைப் புண் குணமாகும்.

வெங்காயச் சாறு 50 மில்லியளவு எடுத்து 1 டம்ளர் காபியுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி 3 வேளை குடிக்க காமாலை, வயிற்று வலி, ஈரல் வளர்ச்சி ஒழியும்.

வெங்காயச் சாறு 50 மில்லியளவுடன் 100 மில்லி கடுகு எண்ணெயுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி மேற்பூச்சாகப் பூசி வர கீல் வாதம் குணமாகும்.

வெங்காயச் சாறு 50 மில்லியளவு குடிக்க புகையிலையினால் ஏற்பட்ட நஞ்சு மாறும்.

வெங்காய விதையை உலர்த்திப் பொடி செய்து 50 கிராம் எடுத்து 100 கிராம் பனை வெல்லத்துடன் கலந்து 20 கிராம் வீதம் 3 வேளை 1 டம்ளர் பாலுடன் குடித்து வர உடல் வலுவடையும், ஆண்மை உண்டாகும். குன்மம் தணியும்.

வெங்காயத் தாளை உணவாக சமைத்து உண்ண தாகம், மூலச்சூடு, உடல் வெப்பம் தணியும். மலக்கட்டு நீங்கும். சூதகக் கட்டு நீங்கும். சூதகக் காலத்தில்  ஏற்படும் வயிற்று வலி உடனே நீங்கி விடும். தொடர்ந்து உண்டு வந்தால் கண் பார்வைக் கோளாறு நீங்கும் பெண்கள் பேறு காலத்தில் கூட உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.


Spread the love