கேள்வி: சிறிதளவு மது அருந்துவது தவறில்லை. இதனால் உடலுக்கு நல்லது என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா?
பதில்: தமிழகம் மட்டுமல்ல.. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படும் இவ்வேளையில் பதில் தருவது பொருத்தமானதாக அமையும் என எண்ணுகிறேன்.
பொதுவாக குறிப்பிட்ட விழா நாட்களில், விசேஷ நிகழ்ச்சிகளில் ஓரளவு மது அருந்துவது தவறில்லை. தினசரி மது அருந்துவது, அதிக அளவு மது அருந்துவது தான் தவறாகும். கடின உழைப்பாளிகள் தங்கள் உடல் வலியை நீக்குவதற்காக மது அருந்துகிறார்கள்.
மனித உடலுக்கு ஆல்ஹகால் குறிப்பிட்ட அளவு அவசியம் தேவை தான். அதன் அளவு தெரிந்து அருந்தினால் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். தினசரி உணவு உட்கொண்ட பின்பு 50 மி.லி. முதல் 100 மி.லி. அளவுக்குள் மது அருந்துவதால் உடலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. இந்த அளவை விட அதிகம் அருந்த ஆரம்பித்தால் உடலுக்கு சிக்கல் ஏற்படுகிறது. ஒயின், விஸ்கி போன்ற இரகங்களை உணவு உட்கொண்ட பின்பு தான் அருந்த வேண்டும். ஏதேனும் ஒரு பழச்சாற்றுடன் தான் கலந்து அருந்த வேண்டும். இல்லையெனில் மலச்சிக்கல், கொலஸ்ட்ரால் அளவு அதிரித்தல், உயர் இரத்த அழுத்தம், வயிற்று உப்புசம், ஈரலில் பாதிப்பு, உடல் வீக்கம் போன்றவை ஏற்படும். ஓய்வு நேரத்தில் அல்லது பணிக்குச் சென்று வீடு திரும்பிய பின்பு இரவு நேரங்களில் மது அருந்துவது தான் சிறந்தது. மதுவில் விஸ்கியானது தானியங்களால் தயாரிக்கப்படுவதாகும். ஒரு பெக் விஸ்கியில் 65 கலோரிகள் உள்ளன. கொழுப்புகள் அளவே இல்லை. விஸ்கியில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் இருப்பதால், அவை புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். இதில் எலாஜிக் அமிலம் இருப்பதால் இவை டி.என்.ஏ.வை புற்றுநோயை ஏற்படுத்தும் பொருட்களில் இருந்து பாதுகாப்பு அளித்து புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது.
காய்ச்சல் சளி, தொண்டை கரகரப்பா..? விஸ்கியுடன் சுடுநீர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு சிறிய அளவு 20 முதல் 40 மி.லி. வரை (அரை முதல் 1 பெக் வரை) அருந்தலாம்.
இதயத்திற்கு வலிமை தரும் விஸ்கி
இரத்தத்தில் உள்ள லிப்போ-புரோட்டினின் அடர்த்தியை விஸ்கியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் குறைக்கச் செய்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதயத் தமனிகளில் இரத்தம் உறைந்து, பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து, தமனிகளில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மன அழுத்தம், மன இறுக்கம் குறைக்கச் செய்து நீண்ட ஆயுள் தரும். விஸ்கியில் கலோரிகள் குறைவாகவும், கொழுப்புகள் இன்றியும் காணப்படுவதால், செரிமான இயக்கத்தை சீராக செயல்பட செய்து உடல் எடையை பராமரிக்கலாம்.
ஓயின், விஸ்கி மதுவகைகள் நமது உடல் நலன் கருதி தேவையான அளவு மட்டும் அருந்தி வர எவ்வித பிரச்சனையுமில்லை. அளவுக்கு மீறி அருந்தும் எவ்வித பானமும் (மதுவும் சேர்த்துதான்) நமது உடலைக் கெடுத்துவிடும். வெறும் வயிற்றில் நீங்கள் மது அருந்திய அரை மணி நேரத்திற்குள்ளேயே உங்கள் இரத்தத்தில் மதுபான அளவு உச்சக்கட்டத்தை எட்டிவிடுகிறது.
காபி குடித்தால் போதை குறையுமா?
காபி குடித்தால், சுத்தமான காற்றைச் சுவாசித்தால், உடற்பயிற்சி செய்தால் போதையைக் குறைக்கும் என்று ஒரு சிலர் நினைக்கிறார்கள். அது தவறானது. நேரம் போக, போக, போகத்தான் போதையைக் குறைக்க இயலும். கர்ப்பிணிகள் கர்ப்பகாலத்தில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். மீறி மது அருந்துவதால் முழுவளர்ச்சி பெறாத அல்லது குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க நேரிடும். அளவுக்கு மீறிப் பயன்படுத்துகின்ற எந்த போதைப் பொருளையும் விட மதுபானமே கருவில் வளரும் சிசுவை மிக அதிகமாகப் பாதிக்கிறது. தாங்கள் அருந்தும் மது பானம் தாய்ப்பாலில் தேங்கி விடுகிறது என்பதை குழந்தைக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப் போனால் இரத்தத்தை விட தாய்ப்பாலிலேயே மதுவானது அதிகமாகத் தேங்கி விடுகிறது. ஏனெனில் இரத்தத்தை விட பாலில் தான் அதிகளவு தண்ணீர் கலந்து இருக்கிறது. அது மதுவினை உறிஞ்சிக் கொள்கிறது. ஒருவருடைய வயது, மருத்துவ பின்னணி, உடலமைப்பு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் மது அருந்தும் அளவை குறைக்கச் சொல்ல இயலும்.