இயற்கை உரம் இட்டு விளைந்த பொருட்களினால் உடல் ஆரோக்கியம் பெறலாம். இரசாயனம் உரமிட்டு பெறப்பட்ட உணவுகள், தயாரிக்கப்பட்ட உணவுகள், வாழ்க்கைச் சூழல் மாற்றம் அனைத்துமே இப்போது மக்களை புதுப்புது வியாதிகளுக்குள் தள்ளி விட்டது. அதிலும் இளம் வயதினர் முதல் முதுமையடைந்தவர் வரை ஆண்களுக்கு தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருக்க வேண்டுமென்று பெரும்பாலானவர்கள் ஆசைப்படுகிறார்கள். இளநரையோ, முடி உதிர்தலோ, வழுக்கைத் தலையாக மாறுவதோ அவர்களை பாடாய்ப்படுத்துகிறது. வழுக்கையை மறைக்க விக்குகள் கிடைத்தாலும் அவையெல்லாம் லட்சத்தில், கோடியில் ஒருவர் தான், மேல்தட்டு மக்கள் தான் பொருத்திக் கொள்வர்.
தலைவழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. தலையில் முடி வளர்வதற்கும் முடி உதிர்தலுக்கும் உரிய செயல்கள் எவ்வாறு நடைபெறுகிறது என்று முதலில் தெரிந்து கொள்வோம். அதன் பின்பு வழுக்கைக்கு காரணங்களையும், அதற்கான மருத்துவ சிகிச்சைகளையும் அறியலாம்.
தலையின் மேல் பக்கத்தில் டெர்மீஸ் பகுதியின் அடித் தளத்தில் சிறு சிறு பள்ளங்கள்உள்ளன. இந்தப் பள்ளங்களை பாலிகிள்ஸ் அதாவது முடி உறைகள் என்று அழைப்பர். முடி உறையில் அடிப்பகுதியில் (வேரில்) பேபில்லா என்ற பகுதியில் இரத்த நாளங்கள் இருக்கின்றன. இதனால் முடிகளுக்கு இங்கிருந்து தேவையான ஊட்டச் சத்துக்கள், ஹார்மோன்கள் கிடைக்கின்றன. முடியின் வேர்ப்பகுதி பாதிக்கப்பட்டால் முடி வளர்வது நின்று விடும். மறுபடியும் வளராது. முடி உறையின் இயக்கம், அளவு இவைதான் ஒருவருக்கு முடி எப்படி இருக்க வேண்டும்? எவ்வளவு நீளம் வளரும் என்பதையெல்லாம் முடிவு செய்கிறது.
பாலிகிள்ஸ்களுக்கு தேவையான இரத்த ஓட்டமிருக்குமானால், முடி வேகமாக வளரும். இதன் வளர்ச்சியை எதுவும் தடுக்க இயலாது. ஒரு முடி உதிர்ந்தாலும், அந்த இடத்தில் மீண்டும் முடி புதிதாக முளைக்கும். தலை முடிக்கு வேண்டிய சத்தை நாம் நேரிடையாகக்கொடுக்க முடியாது. நம் உடலிலுள்ள இரத்தத்தினால் தான் வழங்குகிறது. சிரசாசனம் செய்வதால்தலைக்கு வேண்டிய அளவு இரத்தம் பாய்கிறது. பிட்யூட்டரி சுரப்பிக்கு வலிமை ஏற்படுகிறது. இதனால் ஹார்மோன்கள் போதிய அளவு இரத்தத்தில் கலக்கின்றன. மயிர்க் கால்கள், வேர்கள், பைகள் வலுவாக இருக்கும். இது தலை முடிக்கு நேரும் தளர்ச்சிகளை நீக்குவதுடன் முடிவளரவும் காரணமாகிறது.
தலை முடியின் சராசரி வயது இரண்டாண்டுகள் தான். இரண்டாண்டுகள் கழித்து அது உதிர்ந்து விடும். உதிர்ந்த இடத்தில் புதிதாக மீண்டும் ஒன்று முளைக்கும். ஹார்மோன்கள் இரத்தத்தின் மூலமாக மயிர்க் கால்களின் பைகளுக்கும் செல்ல வேண்டும். மயிர்க் கால்களில் உள்ள பை தான் முடிக்கு ஆதாரமானது. இது வறண்டு போய் விட்டால், அந்த இடத்தில் முடி உதிர ஆரம்பிக்கும். உதிர்ந்த முடி மீண்டும் அந்த இடத்தில் வளரும் சக்தியை இழந்து விடுகிறது. ஹார்மோன்கள் மயிர்க் கால்களில் உள்ள இப்பைகளுக்குப் பாய்ந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் சக்தியை பை இழந்து விடுகிறது. அடிவேரை இழந்த மரம் வீழ்ந்து விட்டால், மீண்டும் முளைப்பதில்லை அது போல வறண்ட பை ஏற்பட்ட இடத்தில் முடி மீண்டும் முளைப்பதில்லை. இதைத் தான் நாம் வழுக்கை என்கிறோம்.
உடலில் இரத்த சோகை ஏற்படுவதாலும், ஹார்மோன் குறைப்பாடுகளினாலும் முடி வளர்ச்சி குன்றி வழுக்கை ஏற்படக் காரணமாகிறது. மயிர்க் காம்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாததால், மயிர்க் காம்புகள் பலவீனம் அடைகின்றன. மயிர்க் கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் நச்சுப் பொருட்கள் சேர்ந்தாலும் முடியின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
தலையில் ஏற்படும் சரும வியாதிகள் காரணமாகவும், தலையில் பொடுகு அதிகமாக தேக்கமடைவதாலும், ஒரு சில வியாதிகளாலும் வழுக்கை ஏற்படும். உடல் அதிக சூட்டோடு இருந்தால், மயிர்க் கால்கள் பாதிக்கப்பட்டு முடி உதிர ஆரம்பிக்கும். புழு வெட்டு காரணமாகவும், குடும்ப பரம்பரைத் தன்மை காரணமாகவும் வழுக்கை ஏற்படவாய்ப்புகள் உள்ளது.
மேலே கூறிய குறைபாடுகளை நாம் தவிர்த்தால் / குணப்படுத்தினால் வழுக்கை ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மலச்சிக்கல் ஏற்பட்டால், போதிய வைட்டமின் சத்துக்கள் இல்லாததானல், இரத்தத்தில் நச்சு நீர்கள் கலந்துமயிர்க் கால்களுக்குச் செல்லும் சிறிய இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுகின்றன. அவ்வாறு மயிர்க்காம்புகள் பலவீனம் அடையும் பொழுது, முடிகள் உதிர ஆரம்பிக்கின்றன. ஒரு சில தொழில் சம்பந்தமான இடங்களில், உதாரணத்திற்கு சுண்ணாம்பு கூடை தூக்குவோர், சலவை சோடா தொழிலாளிகள் கார, அமிலங்களினால் சாயத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளிகளும்இவ்விதம் பாதிப்பு அடைகிறார்கள்.
டைபாயிடு, இன்ஃபுளுயன்சா, சிபிலிஸ் போன்ற பால்வினை நோய்களாலும், மயிர்க் காம்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் விஷ வாயுக்கள் ஏற்பட்டு முடி வளர்ச்சி குறைந்து விடும். தலைப் பகுதிக்கு கிடைக்க வேண்டிய சுத்தமான காற்று தலைப் பாகை, தொப்பி, குல்லாய், தலைக்கவசம் போன்றவைகளை அணிவதால், தலைக்கு / தலைமுடிக்கு கிடைப்பதில்லை. மயிர்க் கால்களுக்கு வேர்வைப் புழுக்கத்தினாலும், சுத்தமான காற்றுகிடைக்காததாலும் இரத்த ஓட்டம் தடைபட்டு முடி உதிர ஆரம்ப்பிக்கிறது.
அஜீரணம், மலச்சிக்கல், நரம்பு மண்டல நோய்கள் இவற்றாலும் முடி உதிரலாம். பாதத்திலிருந்து தலைவரை செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் முடி உதிரலாம். உடலில் கொழுப்பு அதிகமானால், இரத்த ஓட்டம் சீராக நடைபெறாமல், பாதிக்கப்பட்டு முடிக்கு போஷாக்கு செல்லாமல் போகும். இதனாலும் முடி இழப்பு ஏற்படுகிறது.
வழுக்கையைப் போக்க என்ன செய்யலாம்.?
தினசரி காலை எழுந்தவுடன் 15 நிமிடங்களுக்கு விரல் நுனிகளால் தலையை நன்றாக மசாஜ் செய்யவும். இது வேர்க் கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். வேர்க்கால்கள் பலஹீனத்தை போக்கும் நெல்லிக்காய்ச் சேர்ந்த தேங்காய் எண்ணையில் தயாரிக்கப்பட்ட கேசத் தைலத்தை உபயோகப்படுத்தலாம். இது முடி உதிர்வை தடுப்பதுடன், முடிக்குத் தேவையான வைட்டமின் சி சத்துகளை அளிக்கும்.முடி வளர்ச்சிக்குத் தேவையான தாது உப்புகளில் கால்சியமும் ஒன்று.
தலை வழுக்கை ஏற்படுவதற்கு முன் சில அறிகுறிகள் தென்படும். முடி கட்டையாகும். அடிக்கடி தலைமுடி வார வேண்டியிருக்கும். சிறிதும் சந்தேகிக்கக் கூடாத ஏதாவது ஒர் உணர்வினால் வழுக்கை ஏற்படும். பொதுவாக சீதோஷ்ண மாறுபாட்டாலும் பாதிக்கப்படலாம். தலை முடி பாகத்தில் அழுக்கோ, தோற்று நோய்க் கிருமிகளோ இல்லாமல் அடிக்கடி சுத்தப்படுத்தினால் நல்லது. தொற்று நோய்கள் வராமலிருக்க, ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். தலைக்கு குளித்தவுடன் எண்ணை தடவிக் கொள்ள வேண்டும். தலைமுடி உலர்ந்து போகாமல் இருக்க எண்ணை பூச வேண்டும். தலைக்கு சோப்பு போட்டு குளிக்கக் கூடாது.
வழுக்கைத் தலைக்கு யுனானி வைத்திய முறையில் தீர்வு ஒன்று உண்டு. கோழி முட்டையின் வெண் கருவை தனியாக எடுத்து இரண்டு சிறிய நாட்டு வெங்காயத்தை அரைத்து வெண் கருவுடன் சேர்த்து வழுக்கையுள்ள பகுதியில் வைத்து நன்றாக தேய்த்து வர வேண்டும். அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்