சுட்டெரிக்கும் வெய்யிலில் அவதிப்படுபவர்கள் உடனடி தாகத்தை தணிக்க நாடுவது பாட்டில் குளிர்பானங்கள். சுலபமாக எங்கும் கிடைக்கின்றன. ஆனால் இவை சுற்றுப்புற சூழ்நிலையின் நச்சுகளை பரப்பும் பானமாகலாம்.
இந்த குளிர்பானங்களில் உள்ளவற்றில் முக்கியமானது நீண்ட நாள்
பானம் கெடாமலிருக்க பயன்படுத்தப்படும் பொருட்கள். தவிர சுவைக்காக சேர்க்கப்படும் செயற்கை வேதிப்பொருட்கள். இவையெல்லாம் இயற்கைப் பொருட்களல்ல. செயற்கை இராசாயன பொருட்கள். ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.
முதலில் இவற்றில் உள்ள சர்க்கரை அளவு விஷக்கிருமிகளை உண்டாக்கும் அளவாக அதிகமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்தி கலோரிகளை குறைக்க, சில பானங்களில் செயற்கை சர்க்கரை சேர்க்கப்படுகிறது. செயற்கை சர்க்கரையும் உடலுக்கு நல்லதல்ல. அரசாங்க ஆணைகளின் படி தயாரிக்கப்படும் உணவுகளில் குளிர்பானங்கள் உட்பட மூலப்பொருட்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களே இருக்க வேண்டும். மாறாக குளிர்பானங்களில் செயற்கை வேதிப்பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, சுவை, மணத்திற்காக ‘காஃபின்’ சேர்க்கப்படுகிறது. உங்களுக்கு தெரியும் காப்பியில் உள்ள ஒரு நச்சுப் பொருள் ‘காஃபின்’. இதை உண்பதால் பரபரப்பு, எரிச்சல், டிப்ரெஷன், வேகமான செயல்பாடுகள் போன்றவை உண்டாகலாம்.
சர்க்கரைக்கு பதிலாக குளிர்பானங்களில் சேர்க்கப்படும் ஆஸ்பார்டம் என்ற செயற்கை சர்க்கரை, புற்றுநோயை உண்டாக்கலாம்.
பென்சீன் என்ற பொருளும் குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது வாகனப் புகை, நிலக்கரி, எண்ணை இவற்றை எரித்தால் எழும்பும் நச்சுப்புகை, குளிர்பானங்களில் உள்ள பென்சோட் உப்புகள் மற்றும் விட்டமின் சி இவைகள் குளிர்பானங்கள் வெளிச்சம் மற்றும் சூட்டினால் பாதிப்படையும் போது பென்சீனாக மாறும்.
எனவே முடிந்த மட்டும் குளிர்பானங்களை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.
