சோடியத்தின் பயன்கள்

Spread the love

உடலின் உயிரணுக்களின் (செல்கள்) உள்ளும் புறமும் உள்ள நீர்மச்சத்து திரவங்களில் சோடியமும், பொட்டாசி யமும் முக்கியமான உட்பொருட்களாகும். இந்த தாதுப்பொருட்கள் சமநிலையில் இருந்தால் தான் செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

நமது உடலில் உள்ள திரவங்கள் அனைத்திலும் சோடியம் காணப்படுகிறது. உடலில் உள்ள நீர்மச்சத்துக்களின் சமநிலையை பராமரிக்கவும். நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடுகளுக்கும் சோடியம் உதவுகிறது.

சோடியத்தின் மற்றொரு பணி உணவுக்கு சுவை கூட்டுவது. இதை சோடியம் குளோரைட், அதாவது சமையல் உப்பாக செயல்படுகிறது. “உப்பில்லா பண்டம் குப்பையிலே” – ஆனால் உப்பு அதிகமானால் பல பிரச்சனைகள் ஏற்படும். ரத்த அழுத்தம் அதிகமாகும். பாதங்களில் நீர் சேர்ந்து வீக்கம் (Oedema) ஏற்படலாம். எனவே சோடியம் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம்.

சோடியமும் அதன் ஜோடியான பொட்டாசியமும் கிட்டத்தட்ட எல்லா வகை உணவுகளிலும் காணப்படுகின்றன. தாவிர உணவுகளில் சோடியத்தை விட பொட்டாசியம் 10 லிருந்து 50 மடங்கு அதிகம் காணப்படுகிறது.

அதிக சோடியம் நம் உடலை விட்டு சிறுநீராக, வியர்வையாக வெளியேறி விடுகிறது. இதனால் சிறிதளவாவது தனியாக, உப்பாக எடுத்துக் கொள்ளும் தேவை உண்டாகலாம். சோடியம் குறைந்தால் தலைவலி, பிரட்டல், உடல் வளர்ச்சியில் குறைபாடு, தசை பலவீனம் முதலியன உண்டாகலாம்.

சோடியம் அதிகமானால் ரத்த அழுத்தம் ஏறிவிடும். எனவே உணவில் சோடியத்தின் அளவை கட்டுப்படுத்தியே வைப்பது நல்லது. அதிக சோடியத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம்.

சோடியத்தின் ஒரு நாள் தேவை இன்னும் சரிவர வரையறுக்கப்படவில்லை. சராசரியாக 8 லிருந்து 10 கிராம் போதுமªன்கிறது இந்திய ஊட்டச்சத்து ஸ்தாபனம். வெய்யில் காலத்தில் சிறிது அதிகம் தேவைப்படலாம்.


Spread the love
error: Content is protected !!