குறட்டை காரணமும் நிவாரணமும் குறட்டை ஏன் வருகிறது?

Spread the love

குறட்டை ஏன் வருகிறது?

நாம் தூங்கும் பொழுது குறட்டை விடுவதை அறிய முடியாது. மற்றவர்கள் கூறித்தான் தெரிய வரும். நம் அருகில் படுத்திருக்கும் மனைவியோ, குழந்தையோ “நீங்கள் குறட்டை விடுவதனால் என்னால் தூங்க முடியவில்லை” என்று அவர்கள் புகார் சொல்லும் பொது தான் உணர முடியும். குறட்டை விடுதலால் ஏற்படும் சத்தம் எந்த ஒரு மனிதனையும் தூங்க விடாது.

குறட்டை ஏன் ஏற்படுகிறது?

தூங்கும் போது வாய் திறந்து இருக்குமாயின் நாம் உட்கொண்டு வெளித் தள்ளும் காற்று மேல் வாயில் படுவதால் குறு குறுவென சத்தம் கேட்கிறது. ஜல தோஷத்தால் சவ்வுகள் அலர்ஜி அடைந்திருத்தலும் ஓரோர் சமயங்களில் குறட்டைக்குக் காரணமாகும். குறட்டை விடுவது ஒருவர் இன்ன காரணத்தினால் தான் என்று கூறுவது எளிதான காரியமல்ல.

குறட்டையினை எவ்வாறு தடுக்கலாம்?

தூங்கும் பொழுது, முகவாய்க் கட்டை இறங்காதபடிக்கு தோளில் லேசாய்ப் படும் வகையில் பிடரிக்கு கீழே ஒரு தலையணையைக் கொடுக்க வேண்டும்.வாயைத் திறவாதபடி முகவாய்க் கட்டையின் கீழே ஒரு துணியைக் கொடுத்து தலையைச் சுற்றிக் கட்டி விடலாம். சிறிய பஞ்சை தண்ணீரில் நனைத்து, வாய் அல்லது தொண்டையில் வைத்து இறுத்தலாம்.இதன் மூலம் குறட்டை விடுவதை நிறுத்துவதுடன் பின்பு இரவு முழுவதும் விடாத படிக்கு தடுக்கவும் இயலும்.

குறட்டை விடும் பழக்கத்தில் உள்ளவர்கள், மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுத்தல் வேண்டும். பெண்களை விட ஆண்களே அதிகம் குறட்டை விடுவார்கள். ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள எடின்பரோ பல்கலைக் கழகப் பேராசியரான பெர்ஜர் என்பவர், குறட்டை விடுபவர்களுக்கு அந்த நேரத்தில் கனவுகள் தோன்றும் எனறு நிரூபித்து இருக்கிறார். ஆனாலும் குறட்டை விடுபவரின் மனம் கனவில் ஒரு நிலைப்பட்டு லயித்து இருக்கும்.அதனால் தொண்டையின் ஒலித்தசை நார்கள் இறுகும்.

கனவு காணும் பொழுது குறட்டை நின்று விடும் என்று சிலர் கருதுகிறார்கள்.வயதானவர்கள் விசயத்தில் குறட்டை விடுவதற்குக்  காரணம், இவர்களுடைய மெல்லண்ணத் தசை நார்கள் இறுக்கம் குறைந்தவையாக இருப்பதனால் தான். உடல் பருமனாக இருப்பது, அளவுக்கு மீறி புகைப் பிடிப்பது, அதிகமாக மது அருந்துவது, எரிச்சல் உண்டாக்கும் காரமான, அமிலம் சம்பந்தமான உணவை உட்கொள்வது, இனிப்புப் பொருட்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக் போன்ற ஸ்டார்ச்சுள்ள உணவுப் பொருட்களை இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடுவதால் குறட்டை எழுப்பக் காரணமாகிறது என்று ஒரு சில மருத்துவர்கள் கூறுகிறார்கள்.


Spread the love