புடலங்காய் துவையல்

Spread the love

தேவையான பொருட்கள்

பொடியாக நறுக்கிய புடலங்காய் துண்டுகள்-1/2 கப்

தேங்காய் துருவல்    –3 டே.ஸ்பூன்

புளி                  – சிறு நெல்லிக்காய் அளவு

மிளகாய் வற்றல்      –4

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு -தலா 1 டே.ஸ்பூன்

பெருங்காயத்தூள்      –1 டீஸ்பூன்

கறிவேப்பிலை         -சிறிது

இஞ்சி                 -சிறு துண்டு

எண்ணெய்             –1 டே.ஸ்பூன்

உப்பு                  -தேவையான அளவு

செய்முறை

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, பெருங்காயத்தூள், இஞ்சி, கடைசியாகப் புடலங்காய் துண்டுகள் என வரிசையாக ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்து, ஆறியவுடன் அதனுடன் புளி, தேங்காய் துருவல், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து எடுக்கவும். புடலங்காய் துவையல் ரெடி.

மல்டி பயறு அடை

தேவையான பொருட்கள்

பச்சரிசி, புழுங்கலரிசி-தலா 1 கப்

பாசிப்பயறு, கொத்துக்கடலை,

தட்டைப்பயறு, பச்சைப்பட்டாணி-தலா 1/2 கப்

மிளகாய் வற்றல்   –8

உப்பு               -தேவையான அளவு

இஞ்சி              -சிறு துண்டு

பெருங்காயத்தூள்   –1 டீஸ்பூன்

மஞ்சள் தூள்       –1 டீஸ்பூன்

கறிவேப்பிலை     -சிறிது

எண்ணெய்         -வார்க்க

செய்முறை

அரிசி, பயறு வகைகளைத் தனித்தனியே தண்ணீர் விட்டு ஊற வைத்து, நன்றாக ஊறியதும் அதனுடன் மிளகாய் வற்றல், உப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை போட்டுக் கரகரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்த மாவை அடைகளாக வார்த்து எடுக்கவும்.

ஸ்பெஷல் பால் பாயசம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி       –100 கிராம்

ஜீனி          –300 கிராம்

பால்          –11/2 லிட்டர்

ஏலக்காய் தூள்-1/2 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு-15

கிஸ்மிஸ்பழம்-15

நெய்         –1டே.ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்துப் பாலை ஊற்றவும். கொதி வர ஆரம்பித்ததும், அரிசியை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொதிக்கும் பாலில் போடவும். நன்றாக வேக விடவும். நன்கு வெந்தவுடன் ஜீனியைப் போடவும். நன்றாகக் கரைந்ததும், ஏலக்காய் தூளைப் போட்டுக் கலக்கவும். அடுப்பை அனைத்து விடவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் போட்டுப் பரிமாறவும். இதில் பால் சுண்டக் காய்வதால், பாயசம் பால்கோவாவின் ருசியுடன் நன்றாக இருக்கும்.

உணவு நலம் ஜனவரி 2011

புடலங்காய், துவையல், செய்முறை, மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, புடலங்காய் துண்டுகள், மல்டி பயறு அடை, செய்முறை, அரிசி, பயறு, மிளகாய் வற்றல், உப்பு, இஞ்சி, ஸ்பெஷல் பால் பாயசம், செய்முறை, பால், அரிசி, ஜீனி, ஏலக்காய், முந்திரிப் பருப்பு,


Spread the love