சிறிய வெங்காயம் தான்… பெரிய விஷயங்கள் கொட்டிக் கிடக்குது…

Spread the love

வெங்காயம் சேர்க்காத உணவுகள் எதுவுமே கிடையாது என்று கூறும் அளவுக்கு இந்திய உணவுகளில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. காலையில் தேங்காய் சட்னி அரைக்கணுமா? வெங்காயம் போட்டு தாளிச்ச சட்னி டேஸ்ட்டை பாருங்கஞ் மதியம் கமகமக்கும் சாம்பார் வாசனை பக்கத்து வீட்டுக்காரரின் பசியைத் துலீண்டிவிடும். சமையலுக்கு பயன்படும் வெங்காயம் மனிதனுக்கு பல வகையான வியாதிகளுக்கு, உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்? வெங்காயம் இதயத்தின் நண்பன் என்று கூறலாம். இதில் அமைந்துள்ள வேதிப் பொருட்கள், மனித உடலில் இரத்தத்தில் கொழுப்பு சேருவதை கரைத்து, சீரான இரத்த ஓட்டத்திற்கு பயன்படுகிறது.

வெங்காயமானது பைப்ஜீனோவிசின் என்ற பொருளை சுரந்து, கொழுப்பு உணவுகள் மூலமாக இரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்புகளை கரைந்து விடுகிறது.

செலீனியம் என்ற சத்துக் குறைவாக உள்ளவர்கள் பொதுவாக களைப்பு, மன இறுக்கம், அதிகம் கவலைப்படுவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு வெங்காயம், பூண்டு போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், தேவையான செலீனியம் கிடைத்து குணம் பெற இயலும். ஆண்கள் போல அல்லாமல் சுற்றுப்புறச் சூழல், தகுந்த இடம் இன்மை காரணத்தினால் பெண்கள் அதிக நேரம் சிறுநீரைக் கழிக்காமல் அடக்கி வைத்து விடுவதால், சிறுநீரில் தோன்றும் நுண்ணுயிரிகளின் பெருக்கம் காரணமாக, நோய் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தாரைத் தொற்று என்று கூறுவார்கள். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளும் பொழுது, நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்களைக் கரைத்து அழற்சி, வலியினைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியேற்றி விடும். இதன் காரணமாக சிறுநீர்த் தொற்றுப் பிரச்சனையும் குறையும். அது போல சிறுநீரகப் பையில் யு+ரிக் அமிலம் அதிகரிப்பின் காரணமாக சிறு சிறு கற்கள் உருவாகும். சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிந்தால் அதிக அளவு வெங்காயம் சாப்பிட்டு வாருங்கள். கற்கள் கரைந்து விடும். வெயிலில் அதிகமாக இருக்கும் சமயங்களில் வெளியே பணி நிமித்தம் அலைய நேரிடும். அப்போது ஏற்படும் வெப்பத் தாக்குதல்களிலிருந்து தப்ப வேண்டுமா? சிறு வெங்காயத்தினை எடுத்து நசுக்கி உள்ளங்கை, கன்னம், வயிறு, குதிகால் போன்ற பகுதிகளில் தடவிக் கொள்ள வேண்டும். முகச் சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை குணப்படுத்த வெங்காயத்தில் உள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. பருவ கால மாற்றங்களினால் ஒரு சிலருக்கு, சளி, இருமல், நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் ஒழுகுதல் போன்றவை ஏற்படும். இதனைச் சரி செய்ய வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு உடல் எடையைக் குறைக்கவும் உதவும். வெளியில் காணப்படும் அசுத்தமான காற்று, மாசு, புகைப் பிடித்தலினால் தோன்றும் புகை, மன அழுத்தம் போன்ற காரணங்களினால் செல் இறப்புகள், செல் சிதைவுகள் ஏற்படுகிறது. இதனை சரி செய்ய நாம் வெங்காயத்தினை அதிக அளவு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வராமலும் நீக்குகிறது. புற்று நோயைத் தடுக்கிறது. வயதாவதன் காரணமாக ஏற்படும் மூட்டு அழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்துகிறது. கடுகு எண்ணெயுடன் வெங்காயத்தையும் சேர்த்து மூட்டுவலி உள்ள இடத்தில் தடவ வலி குறையும். சிறிய குளவியோ, தேனியோ கொட்டி விட்டால் வெங்காயத்தை எடுத்து கொட்டிய இடத்தில் தேய்த்து விடுங்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம் உடலில் வலியையும் அழற்சியையும் தோற்றுவிக்கும் பிராஸ்டாகிளான்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை அழித்து விஷத்தை போக்குகிறது. வெங்காயத்தை பச்சையாக அல்லது சமைத்து சூப் அல்லது சாலட் ஆக்கி சாப்பிட்டு வர, நீண்ட கால ஆரோக்கியம் பெறலாம்.

என்ன வகை வெங்காயம் சிறந்தது?

வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏற்க்குறைய ஒரே பலன்களைத் தான் தருகிறது. மருத்துவத்தில் சின்ன வெங்காயம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மெடிசன் வெங்காயம் என்று கூறுவர்.

செக்ஸில் ஆர்வம் இல்லையா?

இயற்கையான வயாகிரா என்றால் அது வெங்காயம் தான். பாலுணர்வை அதிகம் து£ண்டக்கூடிய வெங்காயத்தில் ஒரு சில வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளன. தினமும் வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து உண்டு வர, செக்ஸில் ஆர்வம், அதிக நேரம் உடலுறவு கொள்ளும் திறன் அதிகரிக்கிறது.

பக்க விளைவும் பயமும் இல்லாத வயாகிரா பக்கத்தில் இருக்குதுங்க:

இப்போதுள்ள கணினி யுகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் விரும்பிய ஒவ்வொன்றும் கிடைத்து சந்தோஷம் ஏற்படுகிறது. ஆனால், செக்ஸ் என்று வந்து விட்டால் திருமணத்திற்கு முன்பும் சரிஞ் திருமணம் ஆன பின்பும் சரிஞ் ஆண் பெண் இருவருக்கும் முழு திருப்தி கிடைப்பதில்லை. சலிப்புணர்வு ஏற்பட்டு விடுகிறது. இதற்கு என்ன காரணம்? வாழ்க்கைச் சூழலில், உணவு உட்கொள்வதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மன அழுத்தம், வேளைப்பளு, துலீக்கம் இன்மை, நீரிழிவு, உடல் பருமன் போன்றவைகளினால் பாதிக்கப்பட்ட ஆண்மகன் பிரச்சனை ஒரு பக்கம் பெண்களின் பிரச்சனை ஒரு பக்கம். உடலுறவு கொள்ளும் முன்னரே விந்து வெளியேறி விடுதல், உடலுறவு செய்யும் பொழுதே விரைவில் விந்து வெளியேறி விடுதல், ஆண் உறுப்பு எழுச்சி அடையாது தொங்கிக் காணப்படுதல், நீண்ட நேரம் உடலுறவு கொள்ள இயலாமை காரணமாக ஒரு ஆண்மகன் பெண்ணை திருப்தி செய்ய இயலாமல் போக முடிவில் செக்ஸில் விருப்பம் குறைதல், மனதில் குழப்பம், மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. ஏதாவது வயாகரா போன்று மருந்து சாப்பிட்டு சரி செய்து கொள்ளலாம் என்றால் பக்க விளைவுகள் இதனால் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? உடல் கெட்டு விடுமோ? வேறு எதுவும் ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம் ஏற்படுகிறது. இதற்கு நாம் எவ்வாறு தீர்வு காணலாம்?

இந்திய மருத்துவத்தில் சித்த, ஆயுர்வேதம், யுனானி மருத்துவ முறைகளில் வயாகரா போன்ற செக்ஸ் உணர்வை து£ண்டக்கூடிய ஆனால் பக்க விளைவுகள் ஏதுமில்லாத மருந்துகள் ஏராளம் உள்ளன. மருத்துவர் ஆலோசனைப் படி அத்தகைய மருந்துகளை சாப்பிட்டு, மகிழ்ச்சி பெறலாம். அமுக்கிராக் கிழங்கு என்ற மூலிகைச் செடியின் கிழங்கை பாலில் வேக வைத்து எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து இடித்து து£ள் செய்து சிறிது தேன் கலந்து தினம் தோறும் அருந்தி வர, ஆண்களுக்கு செக்ஸ் வாழக்;கையில் அதிகமான பலத்தையும் இன்பத்தையும் அள்ளிக் கொடுக்கு;. மேலும், அமுக்கிராச் சூரணம், மாத்திரை மற்றும் அமுக்கிரா கிழங்கை வைத்து மூலப் பொருளாக வைத்து மற்ற மூலிகைகளுடன் சேர்ந்து அசுவகந்தா லேகியம் என்று நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அசுவகந்தா லேகியம் தினசரி இரவு ஒரு வேளை பாலுடன் கலந்து சாப்பிட, பலவிதமான ஆண்மைக் குறைவாடுகளை நீக்கி விடும். செக்ஸில் ஆர்வத்தை அதிகமாகத் துலீண்டும்.

காலையில் இஞ்சி, பகலில் சுக்கு, மாலையில் கடுக்காயை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர கிழவனும் தன்னிடம் உள்ள கைத்தடியை துலீக்கி வீசி விட்டு குமரனைப் போல குலுங்கி நடப்பான் என்று தேரையர் கூறுகிறார். துஜீரிபலா சூரணம் என்பது நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் இடித்து ஒன்றாக்கிய (து£ள்) பவுடர் ஆகும். இச்சூரணத்தை இரவில் மட்டும் பனங்கற்கண்டு சேர்த்து, சாப்பிட்டு பின் பசும்பால் உண்டு வர, 21 நாட்களில் வீரியமான ஆண்மைச் சக்தியைப் பெறலாம்.

கரும்வேலம் பிசினை எடுத்து சுத்தம் செய்து பொடித்து நெய்யில் பொரித்து எடுத்துச் சாப்பிட்டு வர விந்து இறுகும். ஆலம்பிசின், முள் இலவம் பிசின், முருங்கையின் பிசின் போன்றவைகளும் மேற்கூறிய சக்தியினை அளிக்கிறது. மேற்கூறிய மூன்று வகை பிசின்களை சேர்த்து, குறிப்பிட்ட அளவு நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து பின்னர் வடிகட்டி அந்நீரை அருந்தி வரவும்.


Spread the love