பல வருடங்களுக்கு முன்பெல்லாம் கொழுக்கொழு என்று இருந்தால் தான் அழகு என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், தற்போது ஒல்லியாக இருப்பதுதான் அழகு என்று பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை நினைகிறார்கள். சிலர் பார்பதற்கு அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்கள் இடுப்பின் எடை அதிகமாக உள்ளதால், தங்களை தாழ்த்தி நினைத்துக் கொள்கிறார்கள். இதனால் பலருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.
முதலில் உடல் எடை பின்பு இடை எடை
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் நினைகின்றனர். இவ்வாறு நினைப்பவர்கள் இரு வகையாக உள்ளனர். சிலர், எந்த உணவையும் உண்ணாமல் தவிர்கின்றனர். சிலர், எந்த உணவை சாப்பிடுவது என்று தெரியாமல் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடுகின்றனர். இந்த இரு காரணங்களினால் உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிக்க உணவு மட்டும் காரணம் அல்ல. நாம் வாழும் நவ நாகரீக உலகத்தில் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடி அனைத்து வேலைகளையும் செய்கிறோம். அதுமட்டும் அல்லாமல் பொருட்கள் வாங்க கூட வெளியில் செல்லாமல் இருந்த இடத்தில் இருந்து இணையதளத்தின் (online) உதவியுடன் எல்லாவற்றையும் வாங்கி விடுகிறோம். இதன் காரணமாகவும் உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இடை எடையும் அதிகரிக்கும். அதனால் நம் வேலைகளை நாமே செய்து வர வேண்டும். ஓடி, ஆடி வேலைகளை செய்து வந்தாலே உங்களின் எடை குறைந்து விடும்.
இடையின் எடையை குறைக்க எளிய வழிகள்
· கலோரி குறைவான உணவை தினமும் உணவில் எடுத்து கொள்ள வேண்டும். அதுமட்டும் அல்லாமல் இடைக்கு அதிக அழுத்தம் தரக் கூடிய பயிற்சிகளை செய்து வரலாம்.
· தினமும் எழுந்த உடனே அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.
· தினமும் உடற்பயிற்சிகளை மேற்க்கொள்ளலாம்.
· நிறைய தண்ணீர் குடிக்கலாம்.
· இனிப்பு பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
· வறுத்த மற்றும் எண்ணெயில் பொறித்த பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
· ஒருவேளை உணவில் கோதுமையை சேர்த்துக் கொள்ளலாம்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
· ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
· தினமும் உண்ணும் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இருபது பூண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் இயற்கையாக எடுக்கப்பட்ட தேனில் ஊற வைக்க வேண்டும். ஒரு மாதம் கழித்து பார்த்தால், அது நன்றாக ஊறி இருக்கும். பின்பு, தினமும் அதிலிருந்து இரண்டு பூண்டை சாப்பிட்டு வந்ததால் இடையின் எடை குறையும். குறிப்பு: எந்த காரணத்தை கொண்டும் பூண்டை பச்சையாக சாப்பிட வேண்டாம்.
· தினமும் எலுமிச்சை சாறு குடித்து வர வேண்டும். அதன் மூலம் உடல் சுறுசுறுப்பு அடைகிறது. அது மட்டும்மல்லாமல் இடையின் எடையும் குறைகிறது.
· சர்க்கரையை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை, தேன், அதிமதுரச்சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
· ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சிக்கு பதிலாக, மீனை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
· சமைக்கும் உணவில் இஞ்சியை சேர்ப்பது நல்லது. அதுமட்டும் அல்லாமல் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சியை அரைத்து குடிப்பதன் மூலம் இடையின் எடை குறையும்.
· பசும் தேநீர் (நிக்ஷீமீமீஸீ tமீணீ) தொடர்ந்து குடிப்பதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.
· தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
· தினமும் காலை அல்லது மதியம் சிறுதானிய உணவுகளை உண்பதன் மூலம் உடலில் உள்ள தொப்பை குறைகிறது.
ஜோ.கி