உடலுக்கு ஒய்வு தேவை. ஒய்வெடுக்க உறக்கம் தேவை. நல்ல ஆழ்ந்த தூக்கம் மக்களுக்கு இன்பத்தையும், ஆயுளையும் உண்டாக்கும் என்கிறது சரகசம்ஹிதை.
ஒரு வளர்ந்த மனிதனுக்கு தினமும் 71/2 மணி (அ) 9 மணி நேர தூக்கம் அவசியம். சராசரியாக பார்த்தால் 7 (அ) 8 மணி நேரம் தூங்குவதாக சொல்பவர்கள் 6 மணி நேரம் தான் தூங்குகின்றனர்.
தூக்கம் வராமல் போவதற்கு காரணங்கள்
கவலைகள் – இல்லற, அலுவலக பிரச்சனைகளை முதல் காரணமாக பணமின்மை, படுக்கையில் படுத்து இந்த கவலைகளை நினைத்துக் கொண்டிருந்தால், தூக்கம் எப்படி வரும்?
ஆரோக்கிய குறைபாடுகளும் தூக்கத்தை பாதிக்கும். நீரிழிவு, ஆர்த்தரைடீஸ் அல்சர், இதய நோய்களால் தூக்கம் கெடும்.
சரியாக உறங்காமல் தூக்கத்தை கெடுத்துக் கொள்வது நாமே நமக்கு செய்து கொள்ளும் ஒரு கெடுதி. வருடம் 365 நாளும் இன்டர்நெட், டி.வி. இவற்றில் நிகழும் நடு இரவு பொழுது போக்கு அம்சங்களுக்கு நாம் அடிமை ஆகிவிட்டோம். நடு இரவு முழுவதும் கண் விழித்திருப்பதால் உடலுக்கு ஒய்வு கிடைக்காது.
புகைபிடித்தல், மது அருந்தும் பழக்கம் இவைகள் தூக்கத்திற்கு எதிரிகள். காபியும், டீயும் தூக்கத்தை கெடுக்கும். படுக்கைக்கு செல்வதற்கு 3 மணி நேரம் முன்னதாகவே டீ, காப்பியை தவிர்க்கவும்.
குறட்டை விடுவதற்கு காரணமான ஷிறீமீமீஜீ கிஜீஸீஷீமீணீ எனும் மூச்சு விடுதலின் பாதிப்புகள் தூக்கத்தை கெடுக்கும்.
ஸிமீstறீமீss லிமீரீ ஷிஹ்ஸீபீக்ஷீஷீனீமீ எனும் காலாட்டும் பழக்கமும் தூக்கத்தை பாதிக்கும்.
தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள்
போதிய தூக்கம் இல்லாவிட்டால் ஏற்படும் முதல் பாதிப்பு – களைப்பு, எந்நேரமும் ஆயாசம். இந்த நீடித்த களைப்பினால் மற்றவர்கள் மேல் எரிந்து விழுவது, ஞாபக மறதி, கோபம், பரபரப்பு முதலியன ஏற்படும். வேலையில் / படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இந்த நிலை தூக்கமின்மையால் ஏற்பட்ட விளைவுகள் என்பது யாருக்கு தெரிவதில்லை.
நாட்பட்ட தூக்கமின்மை மனச்சோர்வை (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) உண்டாக்கலாம். பசியின்மை, பார்வை குறைபாடுகள் முதலியவற்றை உண்டாக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு, இதர மனநோய்கள் உருவாகலாம். எனவே தொடர்ந்து தூக்கம் வராமல் அவதிப்பட்டால் டாக்டரிடம் போவது உசிதம்.
தற்காலிக தூக்கமிழப்பினால் தலைவலி, அஜீரணம், முதுகுவலி, ஜலதோஷம் முதலியன ஏற்படும்.
இரவு தூக்கம் கெடுவதால் பகலில் அரை குறை தூக்க நிலை ஏற்படும். வேலைகள், செய்யும் பணிகள் பாதிக்கப்படும். உங்களை அறியாமலே, சில நிமிடங்கள் தூங்கிவிடுவீர்கள்!
தினமும் 8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 6 மணி நேரம் தூங்குபவர்களுக்கு ஜலதோஷம், ஃப்ளு ஜுரம் போன்ற வைரஸ் கிருமிகளை தடுக்கும் சக்தி 50% குறைந்து விடுகிறது. தவிர 7 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்கள், 8 மணி நேரம் தூங்குபவர்களை விட, 3 மடங்கு அதிகமாக ஜலதோஷத்திற்கு ஆளாகிறார்கள். இவை ஆய்வுகளின் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள்.
தூக்கமின்மை மூளையிலும், வயிற்றிலும் உள்ள, பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களின் சுரப்பை குறைக்கிறது. எனவே தூங்காதவர்கள் அதிகமாக ‘கன்ட்ரோல்’ இல்லாமல் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை கூடும்.
நீரிழிவு நோய் இல்லாதவர்கள், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டால் நீரிழிவு வரும் நிலையை அடையலாம். இதற்கு காரணம் தூக்கமின்மை மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்பது தான் என்கின்றனர் நிபுணர்கள். நரம்பு மண்டல பாதிப்பு கணையத்தின் இன்சுலீன் சுரப்பை குறைக்கும்.
தூங்கும் போது மெலாடோனின், கார்டிசால் எனும் வேதிப்பொருட்கள் உருவாகி புற்றுநோயை எதிர்க்கும். தூக்கம் குறைந்தால் இந்த எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடும்.
தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களின் குணாதிசயங்கள் மாறிவிடும். ஞாபக சக்தி, சிந்திக்கும் திறன் முதலியன குறைந்து விடும்.
சரியான தூக்கம் வர
நன்றாக 8 மணி நேரம் தூக்க பயிலுங்கள். அதற்கு காலை குறிப்பிட்ட நேரத்தில், (அலாரம் கடிகாரத்தை உபயோகிக்காமல்) எழுந்திருக்க பழகுங்கள். அதே போல குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க செல்லுங்கள்.
படுக்கை அறையை படுப்பதற்கு மாத்திரம் உபயோகிக்க வேண்டும். படுக்கையில் சாப்பிடுவது, படுத்துக் கொண்டு டி.வி. பார்ப்பதை தவிர்க்கவும்.
சாயங்காலம் அல்லது படுக்க போகுமுன் சில இலகுவான உடற்பயிற்சிகள் செய்யலாம். இல்லை வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
படுக்கை அறையை குளிர்ச்சியாகவும், இருட்டாகவும் வைக்கவும்.
படுத்தவுடன் 15 நிமிடம் வரை தூக்கம் வராவிட்டால் எழுந்து நடக்கவும்.
படுக்கும் முன்பு 1 கப் பால் குடிக்கவும். ஒரு கோப்பைக்கு மேல் வேண்டாம். படுக்க முன் அதிகமாக திரவங்களை குடித்தால், நடு இரவில் எழுந்திருக்க நேரிடும்.
நீங்கள் வேறு நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளால் தூக்கம் வராமல் போகலாம். உங்கள் டாக்டரை கேட்கவும்.
வயிற்றை பாதிக்கும் உணவுகளை இரவில் தவிர்க்கவும்.