ஸ்லீப் அப்னியா

Spread the love

 நீரிழிவு நோய் மற்றும் அதிக ரத்த அழுத்தத்தைகட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிடும். தாங்க முடியாத குறட்டையினால் தம்பதிகள் விவாகரத்துக்கு மனு போடுகிறார்கள் என்ற நிலை நிலவி வருகிறது.

பலர் வாழ்க்கையில் தூக்கமில்லாத தன்மை என்பது துரதிருஷ்டவசமாகும்.தூசி அல்லது வைரஸால் ஏற்படும் மூக்கழற்சி ஒவ்வாமை தற்காலிகமாக தூக்கமின்மை கோளாறுகளை ஏற்படுத்தலாம். இரவுதூங்காமல் இருப்பதற்கு நீரிழிவு, அதிக ,  மூட்டுவலி அல்லது வேறு ஏதாவது மருத்துவப் பிரச்சினைகள் காரணமாகஇருக்கலாம்.

கவலை போன்ற மற்ற காரணங்களும் அதாவது, சப்தம், அதிக நேரம் வேலை செய்வது, தவறான சாப்பாட்டுப் பழக்கங்கள், குடிப்பதும் போன்றவை ஒருவரின் தூக்கத்தைக் கலைக்கிறது. ரொம்ப தூர பிரயாணம் நம்முடைய வாகத்திலேயே தூங்கும்படியாகச் செய்கிறது. வீடியோ விளையாட்டுகள், இணையதளம் போன்றவை ஒளியின் காரணத்தினால், நம்முடைய மூளையைப் பாதிக்கிறது. மிலோடானின் என்கிற ஹார்மோன் நாம் தூங்குவதற்கு உதவியாக இருக்கிறது. ஆனால், அந்த ஹார்மோன் சுரப்பதற்கு இருட்டு தேவையாக இருக்கிறது.

Type A பகுதியைச் சார்ந்தவர்கள் & இந்த வேலையை முடித்துவிட்டுத்தான் தூங்குவேன் என்று கூறுபவர்கள் தூக்கச் சீர் குலைவினால் அவதிப்படுகிறார்கள் என்பது ஒரு கருத்து. ஆனால், இந்தப் பிரச்சினை நிரந்தரமல்ல. பொதுஅறிவு கொண்டு சமாளித்து விடலாம். 2 வாரம் தூக்கம் வரவில்லையென்றால், டாக்டரைப் பார்க்க வேண்டும்.

தூக்க மாத்திரைகள் சாப்பிடுகிறீர்களா? தூக்க மாத்திரைகள் நிவாரணம் அல்ல. மன சோர்வு(Depression) உள்ள நோயாளிகளுக்கு இது உதவாது ஏனென்றால், மன சோர்வுக்கு காரணத்தை கண்டுபிடிக்க வேண்டுமேயழிய, தூக்க மாத்திரைகள் இங்கு பயன்படாது. டாக்டர் மூலம் மனசோர்வுக்கு காரணத்தை அறிய வேண்டும்.

நாம் குறைந்தது 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது டாக்டர் கருத்து. குறித்த காலத்திலே சாப்பிட வேண்டும். மதியம் 3 மணிக்கு மேல் குட்டித்தூக்கம் போடக் கூடாது. படிப்பதற்கோ, டி.வி. பார்ப்பதற்கோ, கம்ப்யூட்டர் வேலைக்கோ, நாற்காலியைப் பயன்படுத்த வேண்டும். தியானமும், மூச்சுப் பயிற்சியும் செய்ய வேண்டும். வயதான காலத்தில் தூங்கும் அமைவு மாறுபடுகின்றது. சும்மா இருப்பதை விட, நடத்தல், சினேகிதர்களைப் பார்ப்பது, தோட்ட வேலை, குழந்தைகளோடு இருத்தல் தன் இஷ்டமுள்ள காரியத்தில் ஈடுபடுதல் (volînteeing) மற்றும் Hobby ல் ஈடுபடுதல் போன்றவை நன்மை பயக்கும்.

90 விழுக்காட்டுக்கு மேலான தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சிகிச்சை பெறாமலேயே இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி, இந்தவிதமான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம்.


Spread the love