உணவை எடுக்கும் நேரத்திற்கும் உடல் எடைக்கும் சம்மந்தம் இருக்கின்றது என லண்டன் கிங்ஸ் கல்லூரி ஊட்டச்சத்து அறிவியல் துறையில் இருந்து, ஒரு ஆய்வின் தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக மனிதர்கள் காலை உணவை 6௦-ல் இருந்து 7௦%, மதியம் 7௦-ல் இருந்து 8௦%, இரவில் 3௦-ல் இருந்து 5௦%, உண்ண வேண்டும். அதாவது மற்ற நேரத்தை விட இரவில் குறைவாக தான் உண்ண வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் காலை உணவை அலட்சியப்படுத்துகிறார்கள். இதனால் உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்தும், கலோரிகளும், கிடைக்காமல் போய்விடுகிறது. இதனால் உடல் எடை குறைவதாக சொல்லப்படுகிறது.
அதே மாதிரி, மதிய உணவை மிகவும் விரைவில் உண்பவர்களின் உடல் எடை அவர்கள் உயரத்திற்கு ஏற்ற மாதிரியாக இருக்காது. அவர்களுக்கும் எடை குறைவதாக இந்த ஆய்வு கூறுகின்றது. உயரத்திற்கு ஏற்ற மாதிரியாக உடல் எடையை கூட்டவும், சீராக வைக்கவும் காலை உணவில், ஓட்ஸ், முட்டை, சாக்லெட், பால், பட்டர், சான்வெஞ், பாதாம் சான்வெஞ், அரிசி வடித்த தண்ணீர், வாழைப்பழம், வெண்ணெய், புரோட்டீன் நிறைந்த உணவுகள் இவையனைத்தும் உட்கொள்ளலாம். ஒரு கப் அவோகடா பழத்தில் 234 கலோரிகள் இருக்கின்றது.
இதை துண்டாக வெட்டி அதில் முட்டை சேர்த்து காலை உணவு உட்கொள்ளலாம். புரோட்டீன் நிறைந்த சான்வெஞ் தயார் செய்து, அதில் ஒரு கப் குளிர்ச்சியான பாலையும், சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையான கலோரிகள் கிடைப்பதோடு மெலிந்த உடல், பருமனாக தொடங்கும்.