தோல் தடிப்பு நிவாரணம் பெறலாமா?
வியர்வை சுரப்பிகள் அடைபடுவதால் வரும் தோல் தடிப்புக்கு மருத்துவப் பெயர் மிலேரியா. ஈரப்பசை குறைவாக இருப்பதால், வியர்வை நிறைய வருகிறது. அதிகப்படியான வியர்வை, வியர்வை நாளங்களை அடைக்கிறது. வியர்வை தோலில் வந்து தங்குகிறது. தோல் தடிப்புகள் (RASHES) அக்குள், கழுத்து, மேல் மார்பு, இடுப்பு போன்ற பகுதிகளில் வருகிறது. அவைகள் நமக்கு வேதனையாகவும், பார்ப்பதற்கு அருவருப்பாகவும் இருக்கிறது.
இதனிடமிருந்து நிவாரணம் பெற சில சிகிச்சை முறைகள்.
1) ஹெர்பல் டால்கம் பவுடரை ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு தடவை உபயோகித்து, தோலை ஈரப்பசை உள்ளதாகவும், வியர்வை இல்லாமலும் வைத்துக் கொள்ளலாம்.
2) தோலை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் நல்லது. ஒரு நாளைக்கு குறைந்ததுஇரண்டு தடவையாவது குளிக்கலாம்.
குளிக்கும்பொழுது பேகிங் சோடா அல்லது நன்றாக அரைக்கப்பட்ட ஓட் மீல் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரில் நம்முடைய தோல் பாகம் ஊறி இருக்க வேண்டும். இப்படி செய்தால் தோல் தடிப்பின் எரிச்சலும், அரிப்பும் வெகுவாக குறையும்.
மற்றொரு சிகிச்சை : தண்ணீருடன் கலந்த பிசான் அல்லது சிக் பீ கூழை தோல் தடிப்பின் மேல் தடவுவது ஒரு பழங்கால சிகிச்சை மெதுவாக அந்த கூழை தடிப்பின் மேல் தேய்த்த பிறகு 10 நிமிடம் விட்டு விடவும். பிறகு குளிர்ந்த தண்ணீரால் கழுவி விடவும்.
தோல் தடிப்பு வந்தால், தோலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிக அவசியம். ஏனென்றால் தோல் தடிப்பு இன்னும் மோசமாக போகாமலும், இன்னும் பரவாமல் இருப்பதற்கு இது உதவியாக இருக்கும். எந்த இடத்தில் தடிப்பு இருக்கிறதோ, அங்கே மூன்று மணிக்கொரு தடவை ஐஸ் பாக்கை 10 நிமிடம் வைத்துக் கொண்டாலும் நிவாரணம் கிடைக்கும்.
ஆலிவோராவின் மருத்துவ குணத்தினால், ஆலிவோராவை தோல் தடிப்பின் மேல் மெதுவாக தடவுவது நன்மை தரும். புதிய ஆலிவோரா கிடைக்கவில்லை என்றால், ஆலிவோரா கூழ்மம் (நிமீறீ) உபயோகிக்கலாம்.
மேற்சொன்ன சிகிச்சை குறிப்புகளை கையாண்டால், தோல் தடிப்பிலிருந்து விடை கிடைக்குமே, செய்து பாருங்கள்.