சரும பாதிப்புகள் பலவிதம்

Spread the love

நமது சருமத்தின் மேற்பரப்பில் பல நுண்ணுயிர்கள் இருந்து கொண்டே உள்ளன. இவை தோலின் உள்பரப்புக்குள் நுழையாமல் தடுப்பதற்கு, சருமம் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். சரும முடிகளும் நுண்ணுயிரிகள் உள்ளே நுழைய விடாமல் தடுக்க உதவுகின்றன. சருமத்தின் செல்கள் 30 நாட்களுக்கு ஒரு முறை இறந்து போய் புது செல்கள் உண்டாவதும், செபேசியஸ் சுரப்பில் சுரக்கும் சரும் எண்ணெய் “சீபம்” மூலமும் நுண்ணுயிரிகள், பேக்டிரியாக் கிருமிகளை அகற்ற முடிகிறது. அமில, கார அலகு அமிலத்தன்மையின் அளவு அதிகரிப்பதன் மூலமும் பல கிருமிகள் தோலில் படிந்து வளர்ச்சி அடைய இயலாது.

சருமம் எதனால் பாதிப்படைகிறது?

1. அரிப்பு (Itching ):

தொற்று இல்லாத கரப்பான், சினைப்பு (Non – Injectious Rashes ), பொதுவான அரிப்பு, டெர்மடைசீஸ் சோரியாசிஸ் முதலியன.

2. முகப்பரு.

3. அழுத்தம் காரணமாக ஏற்படும் புண்கள் (Pressure Sores)

4. வியர்வை பிரச்சனைகள்.

5. நிறமூட்டி (Pigments) கோளாறுகள். இதில் அல்பினிஸம் (Albinism), விடிலிகோ, மெலாஸ்மா இவை அடங்கும்.

6. பாக்டீரியாவினால் ஏற்படுபவை:

இதில் சீழ் கொப்புளங்கள் (Impetigo Contagiosa), ஃபர்ன்ஸ்கிலஸ் (Furnuncles), பாலிக்குலைடீஸ் (Foliculities), தோல் கட்டிகள், கொப்புளங்கள், செல்லுலீலைட்ஸ் (Cellutites) முதலியவை அடங்கும்.

7. பூஞ்சையினால் ஏற்படுபவை (Fungus Infections):

படர் தாமரை, கான்டிடிடாஸிஸ் (Candiditasis) முதலியன. புல்லுருவிகளால்

(Parasit/Protozoa) சொறி, சிரங்கு, பேன் தொல்லை முதலியன.

8. வைரஸால் ஏற்படுபவை (Viral Infections):

மரு, பாலுண்ணிகள், ஹெர்பஸ் தொற்று போன்றவை.

9. சூரிய வெப்பத்தால் ஏற்படுபவை.

10. வயது காரணமாக ஏற்படுபவை.

அரிப்பும், உலர்ந்த தோலும்:

இதில் சருமத்தின் தோல் உலர்ந்தும், செதில் செதில்களாக உரியும். எல்லா வயதினருக்கும் ஏற்படும், 60 வயது மேல் உள்ளவர்களுக்கு எண்ணெய்ப் பசைக் குறைவால் தோல் அரிப்பு ஏற்படும். குளிர் காலத்தில் இது அதிகமாக இருக்கும். உலர்ந்த சரும நிலையை Xerosis என்பர். இந்த “வறட்சி” தோல் மீதும் ஏற்படும். சரிரத்தின் உடபுறத்திலும் உண்டாகும். சருமத்தின் மேல் ஏற்படும் வறட்சியால் உடம்பெங்கும் சாம்பல் தடவியது போலிருக்கும். தேமல்கள் தோன்றும். சொறிந்தால் சாம்பல் நிற துகள்கள் உதிரும்.

காரணங்கள்:

1. எக்சிமா போன்ற சரும நோய்கள், கல்லீரல், சிறு நீரக பாதிப்புகள்.

2. சுற்றுப்புற காற்றில் ஈரப்பசை குறைவு.

3. அடிக்கடி குளிப்பது, கடினமான சோப்புகளை உபயோகிப்பது.

உலர்ந்த சருமத்தைப் பற்றிய மேலும் விவரங்கள் குளிர்கால சரும பாதுகாப்பு பகுதியில் தரப்பட்டுள்ளன.

விளைவுகள் என்ன?

சொறிந்த இடங்களில் கோடுகள் தோன்றும். மொத்தத்தில் அரிப்பு, சொரியும் உபாதைகள் ஏற்படும். உடம்புக்குள் கடுமையான மலச்சிக்கல் ஏற்படும். சாதாரண மருந்துகளுக்கு கேட்காத அளவு மலச்சிக்கல் இருக்கும்.

நிவாரணங்கள் என்ன?

1. நாட்டு மருந்து கடைகளில் பிண்ட தைலம் என்னும் தைலம் கிடைக்கும். தைலத்தை சிறிது சூடாக்கி, உடம்பு முழுவதும் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்த பின்பு, பயத்தம் மாவினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். சருமத்தின் வறட்சி நீங்க, எண்ணெய்ப் பசை தெரியும் வரை இந்த குளியலை தொடரவும்.

2. அருகம்புல் தைலத்தையும், பிண்டத் தைலத்திற்குப் பதில் உபயோகிக்கலாம்.

3. சோப்பை உபயோகிக்க வேண்டாம்.

4. சரும வறட்சி உள்ளவர்கள், நீர் நிறைந்த தக்காளி, புடலங்காய், பூசணி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மட்டன் சூப்பும் நல்லது. எள்ளுச் சோறு, தேங்காய் சாதம், நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, திராட்சை நிறைந்த பால்பாயாசம் உடலில் எண்ணெய் பசையை உண்டாக்கும்.

5. வேலமரத்துப் பட்டை, மாமரத்துப் பட்டை இவற்றை தலா 25 கிராம் அளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் காய்ச்சவும். எழும் ஆவியில் துணியைக் காட்டி அல்லது நீரில் நனைத்து, அரிப்புள்ள இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும்.

6. பாகற்காய் சாற்றை அரிப்புகளின் மேல் தடவலாம்;.

அரிப்பும், தொற்று இல்லா சினைப்புகளும் (Non – Infectious Rashes ):

உடலில் அரிப்பு ஏற்படுவது சகஜம். உடலின் நோய் தடுக்கும்ஃஎதிர்க்கும் சக்தியின் பிரதிபலிப்பாக கூட அரிப்புகள் ஏற்படும். அரிப்பைத் தவிர சுயளாநள எனப்படும் சினப்புகளில் சில சிறுவர்களுக்கும், வயது வந்தவர்களுக்கும் கூட இரத்தப் பரிசோதனையால் காரணம் தெரியாமல் போகலாம். சில காரணங்களை பார்ப்போம்.

அறிகுறிகள்                           காரணங்கள்

மி. சிவந்த, செதில்கள் உதிரும்         1. வறண்ட சருமம் (Xerisis)

சரும அரிப்பு                          2. அடோபிக் டெர்மடைடீஸ்

                                     3. பூஞ்சன தொற்று

                                     4. சோரியாசிஸ்

மிமி. புடைத்த, சிவந்த தழும்புகள்,      1. அலர்ஜி

விளர்கள் (Welts ), சீழ் பிடித்த                 2. அர்டிகேரியா/ ஹைவ்ஸ்

வீக்கங்கள்                             (Orticoria/Hives)

                                     3. பூச்சிக் கடி அலர்ஜி

மி.மிமி. புதுத் துணி, நகைகள், விஷச் செடிகள்,

புதிய உணவு, மருந்து இவற்றில் ஏற்படும் சினப்புகள்.

மிக்ஷி. எரித்துமா பாதிப்புகள் காரணமாக சிவந்த புடைப்புகள் ( உடல் முழுவதும் தோன்றும் ) தவிர தோல் அடியில் அழற்சி ஏற்பட்டு, கெண்டை சதையிலும் ( முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே ) சினப்புகள் தோன்றும். சில சமயங்களில் கை, புஜங்களில் தோன்றும்.


Spread the love
error: Content is protected !!