புண்களால் வரும் தொல்லை

Spread the love

முகப்பரு (Acne):

முகப்பருக்கள் பற்றி தனியாக விவரிக்கப்பட்டுள்ளது.

அழுத்த புண்கள்/படுக்கைப் புண்கள் ((Pressure sores/Bed Sores):

படுத்தப்படுக்கையாக இருப்பவர்கள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் படுக்கைப் புண்கள் இதில் அடங்கும். வலியும், வேதனைகளும் தீவிர பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதால் இவைகளை அலட்சியப் படுத்த வேண்டாம்.

காரணம் என்ன?

தோலின் அடுக்குகளுக்கு ஆக்ஸிஜன் தேவை. அதை சப்ளை செய்வது இரத்தம். தோலுக்கு அதிக இரத்தம் பாயும் படியாகவே தோல் அடுக்குகள் அமைந்துள்ளன. இரண்டு அல்லது மூன்று மணி நேரம் இரத்தம் பாயவில்லையெனில் சருமம் இறந்து விடும். முதலில் புறத் தோல் இறந்து விடும். இறந்து ஒடிந்து விடுவதால் புண்கள், இரணங்கள் ஏற்படும். இந்த திறந்த புண்களின் வழியே பாக்டீரியா உடலுள்ளே நுழையும். ஒரே இடத்தில் மணிக்கணக்காக படுத்திருப்பது, உடகார்ந்து இருப்பது போன்ற நடவடிக்கைகள் சரும அழுத்தத்தை உண்டாக்கும். பொதுவாக நார்மலாக இருக்கும் மனிதர்கள் தூங்கும் போது கூட படுக்கும் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் பக்கவாதம் வந்தவர்கள், கோமா போன்ற மயக்க நிலையில் இருப்பவர்கள் மற்றவர்கள் உதவியின்றி படுக்கைஃஉட்காரும் நிலையை மாற்ற முடியாத இவர்களுக்கு படுக்கைப் புண்கள் ஏற்படும்.

அதிகப்படியான ஈரப்பசையும், சரும அழுத்த புண்களை உருவாக்கும். படுக்கையில் சிறு நீர் கழித்து, அது தெரியாமல் பல மணி நேரம் இருந்தாலும் படுக்கைப் புண்கள் ஏற்படும். உராய்வுகள், ஊட்டச்சத்து இன்றி உடல் பலவீனம் அடைவதாலும் படுக்கைப் புண்கள் ஏற்படலாம்.

படுக்கைப் புண்களை வருமுன் தடுப்பது தான் சிறந்தது. படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளை சரிவரக் கவனித்து, தோலில் சிவப்பாக ஏதும் திட்டுக்கள் தோன்றினால், படுக்கை நிலையை மாற்ற வேண்டும். சருமத்தை ஈரப்பசையின்றி வைப்பது அவசியம். அழுத்தப் புண்களுக்கான சிகிச்சை ஆன்டிபயாடிக் மருந்துகள், புரதம் சொறிந்த உணவு, விட்டமின்கள், தாதுப் பொருட்கள் பரிந்துரைக்கப்படுகின்றன

4. வியர்வை பிரச்சனைகள்.

5. நிறமூட்டி கோளாறுகள்.

6. பாக்டீரியாவினால் ஏற்படுபவை:

பாக்டீரியா இனத்தை சேர்ந்தது ஸ்டாபைலோகோஸ் (Staphylocous) என்ற பாக்டீரியாவானது திராட்சைக் கொத்து போல கூட்டமாக இருக்கும். இந்த இனத்தின் ஒரு பிரிவான Staphylococus Aureus  பாக்டீரியாவானது சருமத்தில் அதிகம் காணப்படும். இதனால் பல தோல் தொற்று வியாதிகள் ஏற்படுகின்றன. இவைகளில் முக்கியமானவை சீழ் கொப்புளங்கள், முடிக்கால் உறைகளின் அழற்சி, தோல் கட்டிகள் செல்லுலீலைடீஸ், ஈஸ்ட் பாதிப்புகள் போன்றவைகளாகும்.

சீழ் கொப்புளங்கள் (Impetigo Contagiosa):

குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் அதிகம் பாதிப்பைத் தருகிறது. குழந்தைகள் மண், புழுதிகளில் விளையாடுவதனால் எளிதில் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். சிவப்பு நிற பாகங்களாக முதலில் தோன்றி, பிறகு வேகமாக உடல் எங்கும் பரவும். பிறகு சீழுடன் கூடிய கொப்புளங்களாக உருவாகி வெடித்து சீழ் கசியும். இதில் ஒரு வகை தழும்பு, வடுக்கள் இன்றி மறையும். ஒரு வகை வடுக்களை உண்டாக்கி விட்டு மறையும். அரிப்பு, சிறிதளவு வலியும் இருக்கும்.

முடிக்கால் உறைகளின் அழற்சி (Foliculites):

சாதாரணமாக எல்லோருக்கும் வரும் இந்த அழற்சி, சருமத்தை பல பிரிவுகளாக பாதிக்கிறது. முடிக்கால் உறைகள் (Folicles) பாதிக்கப்பட்டு, முடி இழப்பு ஏற்படும். முடி வளரும் நுண்ணிய உறைகளைச் சுற்றி வெள்ளை நிற சிறிய கட்டிகளாக தோன்றி அரிப்பை உண்டாக்கும். சில சமயம் வலியும் இருக்கும். ஒரு சிலருக்கு இந்த தொற்று தோன்றி தானாகவே மறையலாம். ஆழமாக பாதிப்பு ஏற்பட்டிருந்தால், திரும்பவும் தோன்றும். இதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இந்த அழற்சியினை இரண்டு வகைகளாக கூறலாம். அவை,

1. மேலெழுந்த வாரியான முடி அழற்சி (Superficial Folliculitis):

இதில் Staphylococus பாக்டீரியா உண்டாக்கும் தொற்றால் அரிப்புடன் கூடிய கட்டிகள், உடலில் எங்கெங்கு முடிகள் உள்ளதோ அங்கெல்லாம் தோன்றலாம். ஆண்களின் தாடைப் பிரதேசத்தை தாக்கும் போது சவர அரிப்பு எனப்படும். சிலருக்கு முகச் சவரத்திற்குப் பின் தாடையில் உள்ள முடிகள் வளைந்து, தான் தோன்றிய துவாரத்திற்குள்ளேயே நுழைந்து விடும். இதனால் எரிச்சல் உண்டாகும்.

2. ஆழமான முடி அழற்சி (Deep Folliculitis):

முகப் பருக்களுக்கு எடுத்துக் கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்த தொற்றை உண்டாக்கலாம். ஆழமான முடி அழற்சியானது முடியை முழுமையாக பாதிக்கும். வலி, கட்டிகள், தழும்புகள் ( கட்டிகள் மறைந்த பின் ) முதலியன இதன் அறிகுறிகள் ஆகும்.

தோல் கட்டிகள் (Furuncls):

இவை உடலில் எங்கு வேண்டுமானாலும் உண்டாகும். சீழ் பிடித்து வலியையும், வேதனையையும் தருபவை. தோல் அடியில் உள்ள தந்துகிகள், நரம்பு நுனிகள் இவற்றையும் பாதிப்பதால் வலி இருக்கும். சில சமயம் ஜுரமும் இருக்கும்.

தோன்றும் காரணங்கள்:

1. பாக்டீரியா (Staphylococus) – இது வேர்வை சுரப்பிகளையும், முடிக்கால் உறைகளையும் தாக்கும். உடலில் முடிக்கால்கள் வழியாக அல்லது தோலில் ஏற்படும் வெடிப்பு, காயங்களின் வழியே உள் நுழையும்.

2. இரத்தத்தில் மாசு, அசுத்தங்கள் படிவது.

3. பாக்டீரியா தோல் அடியில் சேர்ந்து பெருகும். அப்போது சில நச்சுப் பொருட்கள் உருவாகும். இதன் காரணமாக அழற்சியும், வீக்கமும் ஏற்படும்.

4. இந்த நச்சுப் பொருட்களை தாக்குவதற்காக, ரத்த வெள்ளை அணுக்கள் ஓடி வரும். இதனால் சீழ்ப் பை உருவாகும். இந்த ‘பை’ கட்டியின் நடுப்பாகம் ஆகும்.

அறிகுறிகள்:

கால், தோள்கள், கழுத்துக்கும் இடுப்புக்கும் நடுவிலுள்ள பாகம் இவற்றை தாக்கும். சிவந்த, சிறு கட்டிகளாக எழும். பிறகு சீழ் படிந்து மஞ்சள் நிறமாகி, வலியும் வீக்கமும் அதிகமாகும். ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள் ராஜ பிளவை (Carbuncle) எனப்படும்.

செல்லுலீலைடீஸ் (Cellulitis):

இது சருமத்தையும், அதன் கீழ் உள்ள திசுக்களையும் பாதிக்கும் பாக்டிரியா தொற்று ஆகும். இதை உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர் Streptococus Pyogene ஆகும். பொதுவாக இது கால்களில் காணப்படும். பாதிக்கப்பட்ட இடத்தில் தோல் சிறிது வீங்கி, ஆரஞ்சு பழத்தோல் போன்றிருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. நீர் நிறைந்த சிறிய அல்லது பெரிய கொப்புளங்கள் தோலின் மீது தோன்றும். இதன் ஒரு பிரிவு Erysipelas  ஆகும். இதில் சருமம் சிவப்பாகி வீங்கி இருக்கும். குளிர் ஜுரம், வலி, தலைவலி முதலியன தோன்றலாம். உடல் பலவீனமானவர்களை சுலபமாகத் தாக்கும்.

ஈஸ்ட் (Yeast) பாதிப்புகள்:

Candida  என்னும் பூஞ்சன ஈஸ்ட் வாய், ஜீரண மண்டலம் மற்றும் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் சாதாரணமாக குடியிருக்கும். சில காரணங்களால், இந்த பூஞ்சனம் ஈரமுள்ள உடல் உறுப்புகளை பாதிக்கத் தொடங்கும். வெயில் காலம், புழுக்கம், சுகாதார குறைவு, இறுக்கமான நைலான் உள்ளாடைகள் அணிவதன் காரணமாக ஏற்படும். தோல் இடுக்குகளில் சிவந்த சினைப்புகள், சொறி, கரப்பான்கள் ஏற்படும். குதம், பெண்களின் பிறப்புறுப்பு, அக்குள், வாய், மார்பகங்களின் கீழே, வயிறு, தசை மடிப்புகள் இந்த பிரதேசங்களில் இந்த பூஞ்சன ஈஸ்ட் Candida- தாக்கும். ஆணுறுப்பிலும் ஏற்படலாம். இதன் பாதிப்பை Candidiasis என்று கூறுவர். இதில் உள்ள ஆச்சரியம் என்னவெனில், ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த தொற்று நோய் எளிதில் பிடிக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகள், வை கட்டுப்பாட்டில் வைக்கும் பாக்டீரியாக்களை அழித்து விடும்.

7. ஃபங்கஸ் (Fungus) காரணமாக ஏற்படுபவை:

பூஞ்சனம் (Fungus), பூஞ்சைத் தொற்றுகள் உடலில் ஈரமான பகுதிகளில் ஏற்படுகின்றன. கால் விரல்களில் நடுவே, மார்பகங்களின் கீழே (தோலுடன் உராயும் இடங்களில்) பிறப்பு உறுப்புகளைச் சுற்றி, பூஞ்சனத் தொற்று ஏற்படும். வட்ட வடிவத்தில் தோன்றும். குண்டாக இருப்பவர்கள், நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பூஞ்சன தொற்று தாக்குதலுக்கு எளிதாக, அதிகமான அளவில் ஆளாகின்றனர். இந்த பூஞ்சனம் ஒரு இடத்தில் குடியிருந்து வேறு இடங்களில் சினைப்பையும், அரிப்பையும் உண்டாக்கும். காலில் ஏற்படும் தொற்றினால், கை விரல்களில் அரிப்பு உண்டாகலாம். சுத்தம், சுகாதாரக் குறைவினாலும் ஏற்படலாம்.

வண்ணான் படை (Dhobys Itch), ரிங்வோர்ம் (Ring worm) படை, படர் தாமரை என்று மற்றவர்களால் அழைக்கப்படும் சருமப்பற்று அல்லது பூஞ்சைத் தொற்று ட்ரைக்கோ பைட்டான் ரூப்ரம் (Trichophyton Rubrum) என்னும் ஒரு வகைப் பூஞ்சையால் (Fungi) ஏற்படுகின்றது.

சருமத்தில் தொற்று நோய் உண்டாக்குகின்ற நுண்ணுயிரிகளில், பூஞ்சைகள் முதலிடம் பெறுகின்றன. ஒட்டுண்ணி (Parasites) வகையைச் சேர்ந்த இந்த பூஞ்சைகள் உருவத்திலும் வடிவமைப்பிலும் பல வகைப்பட்டவையாக உள்ளன.

காவி அல்லது சற்று பழுப்பு நிறத்தில் திட்டுத் திட்டாக (Parasites) தோன்றும் இப்படையானது மேல் தொடையின் உட்புறங்கள், பிறப்புறுப்புக்கும் ஆசன வாய்ப் பகுதிக்கும் இடைப்பட்ட பெரினியம் (Perineum) எனப்படும் பகுதி, ஆணுறுப்பில் விரைகளின் இடங்களிலும், தொடைகளின் முடிவுகளிலுள்ள சில சிறு மடிப்புகளிலும் ஏற்படக் கூடியது. இதனால் மேற்சொன்ன இடங்களில் அரிப்பு, நமைச்சல், தடிப்பு, எரிச்சல் தொடர்ந்து ஏற்பட்டு, நாட்பட்டுப் போகும் போது, அரித்துச் சொரிந்த இடமானது புண்ணாகி விடுவதுடன், நீர் போன்ற சிறு கசிவும்  அந்த இடங்களில் ஏற்படும்.

சொறி சிரங்குகள் (Scabies):

மிகச் சிறிய பூச்சியான (Sarcoptes Scabiei) அரிப்பு பூச்சியின் (Itch mite) மூலம் சொறி, சிரங்குகள் ஏற்படுகின்றன. வீட்டில் ஒருவருக்கு இந்த தொற்று வந்தால் கூட அனைவருக்கும் பரவி வரும். இந்த வகை பெண் பூச்சி, புறத் தோலில் ஒரு சுரங்கப் பாதையைத் தோண்டி, அதில் தனது முட்டைகளை இட்டு சில நாட்களில் குஞ்சுகளாக பொரித்து விடுகிறது.

அறிகுறிகள்:

முக்கியமான அறிகுறி அரிப்பு ஏற்படுவதுடன். தாங்க முடியாத அரிப்பு இரவு நேரத்தில் அதிகமாக இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் அல்லது வீட்டில் உள்ள அனைவருக்கும் சிகிச்சை தர வேண்டும். படுக்கை, போர்வைகள், இதர துணிமணிகள் இவற்றை நன்றாக தோய்த்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

8. வைரஸ் தொற்று நோய்கள்:

அ. மரு, பாலுண்ணி என்று நாம் சொல்லும் கட்டிகள் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகின்றன. ஆங்கிலத்தில் Warts என அழைக்கப்படும் மருக்கள் எந்த வயதிலும் வரலாம். பெரியவர்களை விட சிறுவர்களுக்கு அதிகம் ஏற்படும். தேகத்தில் ஒரே ஒரு மரு தோன்றலாம். நுலீற்றுக்கணக்கிலும் தோன்றலாம். முக்கால் வாசி மருக்கள் ஆபத்தில்லாதவை. பிறப்புறுப்புகளில் தோன்றும் மருக்கள் தான் அபாயமானவை. மருக்கள் அவற்றின் வடிவமைப்பு மற்றும் தோன்றும் இடங்களை வைத்துப் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.


Spread the love
error: Content is protected !!