உள்ளடக்கம்
1.பாலுணர்வை தூண்டும் சருமங்கள்
2.குளிங்க சார்/மேடம் குளிங்க..
3. மூன்று தோஷ சருமங்கள்
4.மனம் மணக்கும் தெரபி
5. அழகுக்கு அழகு சேர்க்க..
அழகற்றவரையும் அழகாக்க..
6. மேக்கப்பில் 4 ஸ்டெப்ஸ்
7.பவுண்டேஷன் முக்கியம்
8.மேலும் 3 விஷயங்கள்
9.ஃபேஷியல் மாஸ்க்
10.மூலிகை ஃபேஸ் பேக்ஸ்
11.குளிர் காலத்திலும் சரும பாதுகாப்பு
12.சரும பாதுகாப்புக்கு ஏற்ற உணவு
13.முகச்சுருக்கத்தை முறியடிக்கலாம்
14.கரும்புள்ளிகள் அகல எளிய வழி
15.பருக்கள் தொல்லை இனி இல்லை
16.வீட்டிலேயே பியூட்டி பார்லர்
17.வயசுக்கு ஏத்த மேக்அப்
18.குறைகளை நீக்கும்: நிறைகளை அதிகரிக்கும்
19.புருவம் தரும் கர்வம்
20.கருவளையம் காணாமல் போகும்
21.கூந்தலில் மேகம் வந்து குடி புக..
22.விரலில் காட்டலாம் வித்தைகள்
23.சருமம் சிறக்க அருமையான வழிகள்
24. சருமப் பாதுகாப்பில் மூலிகைகளின் சக்தி
25.முக அழகைத் தரும் முல்தானி மட்டி
26.பருவகால ஒப்பனைகள்
27. ஒப்பனைக் கலையில் புதுசு
28.ரோஜா இதழ்களுக்கு..
29.சரும பாதிப்புகள் பலவிதம்:
30.புண்களால் வரும் தொல்லை
31.பாலியல் மருக்கள்
32.சருமத்தை தாக்கும் எட்டு வைரஸ்கள்
33.ஆயுர்வேதத்தில் சோரியாசிஸ்சுக்கு அற்புத தீர்வு
34.எக்சிமாவுக்கு எளிய வைத்தியம்
35.அலர்ஜியை விரட்டலாம்
36.பித்த வெடிப்பை போக்கலாம்
37. விக் அழகா! ஆபத்தா?
முன்னுரை
கையோடு இருக்க வேண்டிய கையேடு
சருமம் அழகாக இருப்பதை விரும்பாதவர்கள் இருக்கவே மாட்டார்கள். சரும அழகைத்தான் அனைவரும் விரும்புவார்கள். ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்டா’ என்று வடிவேலு படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி வரும். வெள்ளையாக இருப்பது மட்டுமா அழகு..? இல்லை.. சருமம் ஆரோக்கியமாக இருப்பதுதான் அழகு.
முகப்பருவில் ஆரம்பித்து, உள்ளங்கால் அரிப்பு வரை எல்லாமே சரும பிரச்சனைதான். இந்தப் பிரச்சனைகளால் பாதிக்கப்படாதவர்கள் இருக்கவே மாட்டார்கள் எனலாம்.
பாலுணர்வை தூண்டும் சருமங்களில் ஆரம்பித்து, குளியல் முறைகள்.. எண்ணெய் குளியலின் போது உடலுறவில் ஈடுபடலாமா?, மேக்அப் கலைகள், சரும பாதுகாப்புக்கு ஏற்ற உணவு, அழகு சாதன பொருட்களை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?, சருமம் சிறக்க அருமையான வழிகள், சருமப் பாதுகாப்பில் மூலிகைகளின் சக்தி என அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்து, சருமம் அழகாக மட்டுமல்ல ஆரோக்கியமாக திகழவும் வழிகாட்டுகிறது இந்த நூல்.
மருத்துவம் சம்பந்தப்பட்ட நிறைய நூல்கள் வெளிவந்தாலும், சரும பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள் என்று அனைவரும் படிக்க.. பாதுகாக்க.. பயன்பெற வெளிவந்திருக்கிறது இந்நூல். ஆரோக்கிய சருமத்திற்கு.. அழகு சருமத்திற்கு ஒரு கைடைப் போல வழிகாட்டிக் கொண்டே இருப்பது இந்நூலின் சிறப்பு.
படித்து பயன் பெறுங்கள்!
ஆயுர்வேதம் டாக்டர். எஸ். செந்தில் குமார்