சருமத்தை காக்க ஒரு எளிய டிப்ஸ்….!

Spread the love

சருமம் பொதுவாக சூரிய ஒளி, காற்று, கெமிக்கல் காஸ்மெடிக்ஸ் இதனால் மட்டும்ஆரோக்கியத்தைஇழக்காது. அது நமது உடலின் இரத்த ஓட்டம், செரிமானம் மற்றும் மலச்சிக்கல் இவையெல்லாம்அடிப்படை காரணம். பிரட்சனைக்கு தீர்வை தேடி போவதற்கு முன்னால், பிரட்சனையை வரவிடாமல்தவிர்ப்பது புத்திசாலிதனம்.ஒன்று, Junk வகை உணவுகளை தவிர்க்கவும். இதில் எண்ணெய் மற்றும் சர்க்கரைநிறைந்திருப்பதனால் செரிக்காமல் கொழுப்பு சேர்ந்து தோல் ஆரோக்கியத்திற்கு பிரட்சனையைஉண்டாக்கும்.

Junk வகை உணவிற்கு பதிலாக Nuts வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து தண்ணீர் தெரப்பி, தினமும் 8 தம்ளர்க்கும் அதிகமான தண்ணீரை குடித்து வாருங்கள். இதனால்உடலில் இருக்கும் நச்சுக்கள் எளிதில் வெளியேறுகிறது. நார்சத்து, நீர்சத்து நிறைந்த உணவுகளைஅடிக்கடி சாப்பிட்டு வாருங்கள். இதனால் செரிமான பாதிப்பு வரவே வராது. தோலிற்கும் தொந்தரவுஇருக்காது. முகம் பொலிவுடன் இருக்கும்.

உடற்பயிற்சி செய்வது உடல் கட்டுடன் இருப்பதற்கு மட்டும் அல்ல, நமது தோலும் நன்குஆரோக்கியமாக இருப்பதற்கு தான். உடற்பயிற்சியினால் உடலில் இரத்த ஓட்டம் சீராகும். இதனால்தோல் வாடாமல், நல்ல glowing கிடைக்கும். சூரியனில் இருந்து நமது தோல் மூலமாக வைட்டமின் டி,உருவாகும். ஆனாலும் அதிக வெப்பம் நமது தோலிற்கு ஆபத்து தான். அதனால் வெளியில் போகும்போது குறிப்பாக கோடைகாலத்தில், முகத்திற்கு Sun Cream பயன்படுத்துவது நல்லது.


Spread the love