உங்கள் முக அழகை கெடுக்கும் 6 விஷயங்கள்.. அவசியம் தெரிஞ்சிக்க வேண்டியவை…

Spread the love

நமது உடலில் இருக்க கூடிய முக்கியமான organs தான் தோல்… உடல் இயக்கத்திற்கான முக்கிய பங்கு தோலிற்கு உள்ளது… தெரியாமல் செய்யக்கூடிய தவறுகளால், எதிர்பார்க்காத விபரீதம் தோலிற்கு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.. சில விஷயங்களை செய்வதற்கு முன்னால், அதை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்….

முதலில் உங்களின் சருமம் எப்படிபட்டது என தெரிந்து கொள்வது முக்கியம்… ஏனென்றால்? அதற்கேற்ற மாதிரியான காஸ்மெட்டிக் ப்ராடக்ட்ஸ் உங்கள் தோலிற்கு சிங்க் ஆகும்… ஒரு வேளை உங்கள் தோல் எந்த வகையைச் சார்ந்தது என தெரிந்து கொள்ளாமல் சம்மந்தமான ப்ராடக்ட்டா வாங்கி பயன்படுத்தும் போது சொந்த காசில் சூனியம் வைக்கின்ற கதையாக மாறிவிடும். அதனால் உங்களுக்கு தெரிந்த dermatologist இடம் உங்கள் சருமத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

அடுத்தது, வெயிலின் தாக்கத்தில் இருந்து முகத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது நல்ல விஷயம் தான்… ஆனால் அதை வாங்கும் போது வியர்வைக்கு பயன்படுத்தும் சான்ஸ்கிரீனா என பார்த்து வாங்குவது அவசியம்.. குறிப்பாக sun protection factor குறிப்பிட்ட சதவீதம் வரை இருக்கும், குறைந்த பட்சம் 15 அல்லது அதற்கும் மேலான செயல் தன்மையை  கூடுதலாக பார்த்து வாங்குவது அவசியம்..

பொதுவாக, சாப்பாட்டின் அளவை குறைத்துவிட்டு, தண்ணீரின் அளவை அதிகப்படுத்துவது எப்போதோ, உணவு நலத்தில் சொல்லக்கூடிய விஷயம்.. நாம் ஒரு நாளைக்கு குறைந்தது 8 தம்ளர் தண்ணீரை குடிப்பது மிகவும் நல்லது.. இது, நமது தோலிற்கு புத்துணர்ச்சியை தருவதோடு, தோலின் ஆரோக்கியத்தை சீராக வைக்கவும் உதவும்..

தோலிற்கு ஒய்வு கொடுப்பது மிகவும் அவசியம். அதோடு மனித தோலானது எப்போதும் இயற்கையை மட்டுமே சார்ந்து இருக்கும்… அடிக்கடி மேக்கப் போடுவது பெரும்பாலோரின் வழக்கம்… அதிலும் சில நபர் தூங்குவதற்கு முன்பும் மேக்கப் போடுவது வழக்கம். எனவே அந்த நேரத்திலாவது தோலிற்கு ஒய்வு கொடுப்பது அவசியம்.. இதனால் மேக்கப்பால் ஏற்படும் விளைவுகளை சிறிது நாளைக்கு தள்ளி போடலாம்.. 

ஒரு நாளைக்கு இண்டு முறை முகத்தை நன்கு கழுவி வருவது நல்லது.. முடிந்த அளவிற்கு சோப்பு போட்டு கழுவுவதை தவிர்ப்பது நல்லது…. அல்லது கடினமான சோப்பை தவிர்த்து, மென்மையான சோப்பை பயன்படுத்தலாம்.. குளிக்கும் போது அதிக நேரம் முகத்தில் தண்ணீர் படக்கூடாது..

வறண்ட சருமம் உள்ளவர்கள், தவறாமல் moisturizer பயன்படுத்தி வருவது நல்லது.. எப்பொழுதும் குளித்த உடன், முகத்திற்கு moisturize பண்ணவும்.. வெளியில் சென்று வரும்போது, அல்லது எந்த பொருட்களை பயன்படுத்தின பின் கை கழுவ மறக்க வேண்டாம்.


Spread the love