சரும பாதுகாப்பு ஆண்களுக்கு

Spread the love

சரும பாதுகாப்பு ( ஆண்களுக்கு ):

சருமப் பாதுகாப்பு என்பது பெண்கள் சமாச்சாரம் என்று நினைக்கும் ஆண்கள் தான் அதிகம் உள்ளனர். தினசரி குளித்து விடுவதும், முகம் சவரம் செய்து கொள்வதுடன் தங்கள் கடமை முடிந்து விடுகிறது என்று தான் நினைக்கிறார்கள். உடலுக்கு நறுமணம் தர பாடிஸ்ப்ரே சென்டும், கிரிமும் தடவி விட்டால் போதுமென்று நினைப்பது தவறு.

ஆண்களின் சருமம் பெண்களின் சருமத்தை விட 20 முதல் 30 சதவீதம் தடிமன் கொண்டது. இதனால் சுருக்கம் விழுவது குறைவு. உடலில் முடி அதிகம் இருப்பதால் அதிக எண்ணெய் சுரக்கிறது. எனவே ஆண்களின் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் இருக்கும். இதனால் பெண்கள் அளவு ஆண்களின் முகம் முதிர்ச்சி அடைவதில்லை. மேலும் முக சவரம் செய்வதனால் இறந்த சரும செல்களினை உடனே நீக்கி விடுகிறது. இதன் காரணமாக முகம் இளமைத் தோற்றம் அமைகிறது.

இந்த அனுகூலங்கள் இருந்தும் ஆண்களின் சருமம் பருக்கள், மருக்களால் பாதிப்படைகின்றன. சருமப் புற்று நோய்களும் ஏற்படுகின்றன. ஆண்கள் சரும பாதிப்புகளை எளிய முறைகளில் சமாளிக்கலாம். வெயிலில் அலைவதை அவர்கள் தவிர்க்க வேண்டும். சூரிய ஒளியின் அல்ட்ரா கதிர்கள் தோலுக்கு பாதிப்பை உண்டாக்கும். தோல் புற்று நோய்க்கும் அல்ட்ரா வயலட் கதிர்கள் தான் பெரும்பான்மையான காரணங்கள் ஆகும். வெயிலில் அலைவதைத் தவிர்க்க முடியாவிட்டால், பெண்களைப் போல ஆண்களும் சன் ஸ்கிரின் கிரிம்   (Sun Screen Cream) அல்லது லோஷனைப் பயன்படுத்த வேண்டும். இந்த கிரிம்களில் SPF &-ன் அளவு 15 (Sun Protection Factor) என்று இருத்தல் அவசியம். SPF 15 என்றால் 75 நிமிடம்  (15ஜ்5 ) நமது தோலை வெயிலிருந்து பாதுகாக்கும். தொப்பி அணிந்து கொள்வது நல்லது.

ஆண்கள் சரும பாதுகாப்பிற்கு சோப்பு ஒன்றே போதுமானது. மிகவும் எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் வேண்டுமானால் Astringent லோஷன்களை பயன்படுத்தலாம். முக ஷவரம் செய்த பின் ஆண்கள் பயன்படுத்தும் After- Shave  லோஷன்களால் பெரிதாக பலன்கள் ஏதுமில்லை என்று சரும நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுவது நல்லது.


Spread the love