சருமத்திற்கு ஏற்ப உணவு:
சருமப் பாதுகாப்புக்காக கணக்கிலடங்காத கிரிம்களும், தைலங்களும், லோஷன்களும் சந்தையில் குவிந்து கிடக்கின்றன. ஆனால் நமது வாழ்நாள் முழுவதும் சருமம் மாசு, மருவின்றி ஒளிர வேண்டும் என்று விரும்பினால் வெளித்தோலுக்கு மட்டுமின்றி உடலுக்குள்ளேயும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். இதற்கு சமச்சீர் உணவு, சரியாக செரிமானம் ஆகுதல் மற்றும் கழிவுப் பொருட்களின் வெளியேற்றம் போன்றவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். கோடை காலம், குளிர்காலம் என்றும் வாத, பித்த, கபம் தோஷம் உள்ள சருமத்தினருக்கு ஏற்ற உணவுகள் முன்புள்ள பகுதிகளில் நாம் கூறியிருந்தாலும் இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகளை நாம் தேர்தெடுக்கும் முன்பு வாத, பித்த, கபம் வகைகளில் நாம் எந்த வகைச் சருமத்தை உடையவர்கள் எனத் தெரிந்து கொள்வது அவசியம்.
வாத சருமப் பாதுகாப்பு:
வாத வகைச் சருமம் பெற்றவர்கள் சருமத்தினை நன்கு பராமரிக்கப்பட வேண்டும். சருமத்தைப் பராமரிக்க, அடிப்படை எண்ணெய்களும்,மூலிகைகளும் கலந்து உபயோகிக்க வேண்டும். இல்லையெனில், இந்த வகைச் சருமம் சீக்கிரமே சுருக்கங்கள் ஏற்பட்டு முதுமை அடைந்து விடும். சரியான உணவு, நல்ல உறக்கம் அமைத்துக் கொள்ள வேண்டும். சாதாரண வாத சருமம் உள்ளவர்கள் விரும்புவது எண்ணெய்ப் பசையுள்ள உணவுகள், இனிப்புகள், புளிப்பு, உப்புள்ள உணவுகள், பால், முழுத் தானியங்கள், பச்சைக் காய்கறிகள், கீரைகள் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழச்சாறுகள் வயிற்றைச் சுத்தம் செய்யும். பசுவின் நெய் முடிந்தால் ஆலிவ் எண்ணெயினை உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஈரத்தைக் காக்கும் மூலிகைகளை (Moisturiser) சேர்த்துக் கொள்ளவும். முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவவும். குடிக்க தினமும் வெந்நீரைப் பயன்படுத்தவும். கருமிளகு, இஞ்சி, மஞ்சள் இவற்றை அளவோடு உபயோகிக்கவும்.
பித்த சருமப் பாதுகாப்பு:
இந்த டைப் சருமமும் நன்கு பராமரிக்கப்பட போஷாக்கு தேவை. உடலை குளிர்விப்பதும் தேவையான ஒன்று. இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, ருசியுள்ள உணவுகள் இவர்களுக்குப் பிடிக்கும். காரசார உணவுகளைத் தவிர்க்கவும். பழ ரசங்கள், ரோஜா, குல்கந்து ( பாலுடன் ) முதலியவற்றை உட்கொள்ளவும். பித்த சருமம் மிகவும் மென்மையானதால் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். காரமான மசாலா கலந்த உணவுகளை தவிர்க்கவும்.
கப சருமப் பாதுகாப்பு:
பெருஞ்சீரகம், அதிமதுரம் பயனளிக்கும். குடிப்பதற்கு சாதாரண குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும். இவர்களுக்கு எண்ணெய்ப் பசை குறைந்த உணவுகள் ஏற்றது. கசப்பு,துவர்ப்பு, கார சுவையுள்ள உணவுகள் உண்ணலாம். இஞ்சி, மஞ்சள், இலவங்கம், கருமிளகு உணவில் இடம் பெறலாம். தினசரி உடற்பயிற்சி அவசயம். இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து உணவுக்கு முன்பு அருந்தவும். குடிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தவும்.
மூன்று வகை தோஷங்களுக்கும் பொதுவான உணவுகள்:
1. கீரை எல்லா விதமான சருமத்திற்கும் நல்லது. நீராவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கீரைகள் போலவே கேரட்டும் எல்லாவித சருமத்திற்கும் ஏற்றது.
2. பசுவின் பால், நெய், குங்குமப்பூ, ஏலக்காய் இவற்றை தினசரி இரவில் சேர்த்துக் கொள்ளலாம்.
3. பழரசங்கள் அனைத்துச் சருமங்களுக்கும் நல்லது. அவை தோலுக்கு ஈரப்பசையை உண்டாக்குகின்றன.
4. தனியா, சீரகம் எல்லா சருமத்திற்கும் ஏற்றது.
ஆரோக்கிய சருமத்திற்கு தவிர்க்க வேண்டியவை:
1. மைதா போன்ற ரொட்டி சார்ந்த உணவுகள்.
2. டின்னில் அடைக்கப்பட்ட ரெடிமேட் உணவுகள், கெட்டுப் போன உணவுகள்.
3. ஜவ்வரிசி, வினிகர்,ஈஸ்ட், பாட்டில் குளிர்பானங்கள்.
4. ராகி, மிளகாய், புளி, அதிகமான எள்.
5. எருமை மாட்டு மாமிசம், ஒட்டக மாமிசம், இறால்
6. வறுத்த, பெரித்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள்.
சருமத்திற்கு ஏற்ற வீட்டுத் தயாரிப்புகள்:
1. புதிய கேரட் சாறு ஒரு கோப்பையுடன் அரைஸ்பூன் மஞ்கள் பொடி மற்றும் கால் தேக்கரண்டி ஏலக்காய்ப் பவுடர் தினமும் காலை, மாலை 2 அல்லது 3 வாரங்களுக்கு அருந்தி வரவும்.
2. தக்காளிக் கதுப்பை வெளிப்பூச்சாக முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்துக் குளிக்கவும். முகம் பொலிவடையும். தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடலாம். அல்லது சாறு பிழிந்து அதனுடன் தேன் கலந்து பருக ரத்தம் சுத்தமடையும்.
3. அவ்வப்போது சம அளவு கோதுமை மாவுடன், பார்லி மாவு சேர்த்து செய்த சப்பாத்தியை சாப்பிடலாம். இதை பசுவின் நெய்யில் தயார் செய்தல் நல்லது.
4. இரண்டு தேக்கரண்டி ஓமம், இரண்டு தேக்கரண்டி துளசி இத்துடன் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வயிற்றுப் பூச்சிகளும் நீங்கும்.
5. தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன், எலுமிச்சைச் சாறு ( பாதி பழம் ) கலந்து குடித்து வந்தால் சருமம் பொலிவாகும்.
6. நுண்ணுயிர் ஊக்கி உள்ள தயிர் (Pro-biotic yoghurt) சருமத்திற்கு உகந்தது. எக்சிமா தினமும் சாப்பிடலாம்.
7. ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் உள்ள மீன்களை உண்பது சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரும்.
சருமத்திற்கு ஏற்ற உணவுப் பட்டியல்:
தானியங்கள் -& அரிசி, பார்லி, கோதுமைப் பார்லி, ஓட்ஸ், சோளம்
காய்கறிகள் -& புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய், பசலைக்கீரை, தாமரைத் தண்டு, காலிஃபிளவர், பாகற்காய், கேரட், வெள்ளரிக்காய், ஜாதிக்காய், தக்காளி.
பழங்கள் -& மாம்பழம், பலாப்பழம், மாதுளம், திராட்சை, நெல்லிக்கனி.
பால் சார்ந்த உணவுகள் &- பசுவின் பால், மோர், லஸ்ஸி, பசுவின் நெய்
மாமிசம் -& ஆடு, கோழி, முயல்
இதர உணவுகள் &- பாதாம் பருப்பு, குங்குமப்பூ, தேன், சர்க்கரை, தனியா, இலவங்கப்பட்டை, இலவங்கம், பூண்டு, இஞ்சி, மஞ்சள், மோர், கடுகு எண்ணெய்.