தேன் சருமத்தை பளிச்சென்று வைக்கும்.பாதாம் பருப்பு சருமத்தை ஈரப்பதம் கொண்டதாக மாற்றும், தக்காளி இறந்த செல்களை அகற்றி உடலை பளபளக்கச் செய்யும். தர்பூசணி வைட்டமின் எ, பி, சி, நிறைந்தது. தோல் பிரகாசம் இழக்காது.
பப்பாளி சருமத்தின் செல்களை புதுப்பிக்கும். கருமை குறையும்.
எலுமிச்சை பாக்டீரியாவை அழிக்கும். பொடுகு மறையும். சருமம் இறுகும். வெள்ளரி உடலுக்கு குளிர்ச்சியை சேர்க்கும். மாம்பழம் முதுமையை தாமதப்படுத்தும்.
மஞ்சள் சருமத்தை மினுமினுப்படையச் செய்யும். வாழைப்பழம் சத்தானது. இரும்புச் சத்து, சோடியம், பொட்டாசியம் கொண்டது. இதை தோலில் தடவ இளமை, ஆரோக்யம் நிலைப்படுத்தப்படும்.
பால் தோலை சுத்தப்படுத்தி செல்கள் விரைவாக உருவாகும். கோதுமை மாவு கடலை மாவு போன்றது உடலில் இதைத் தேய்த்துக் குளித்தால் அழுக்குகள் நீங்கும்.