அலர்ஜி:
உடலுக்கு ஒத்துக் கொள்ளாத பொருட்களை உடல் எதிர்ப்பதின் வெளிப்பாடு தான் ஒவ்வாமை எனப்படுகிறது.
காரணங்கள்:
1. வீட்டுத் தூசி, ஒட்டடை, மகரந்தப் பொடி, சீகைக்காய், வீட்டில் வளர்க்கும் பூனை, நாய், முயல் போன்றவற்றின் முடிகள், பறவை இறகுகள்.
2. சில வகை மருந்துகள் ( பென்சிலின் போன்றவை ) குறிப்பாக ஸ்டிராய்டுகள், ஆன்டிபயாடிக் மருந்துகள்.
3. சருமத்தில் தடவப்படும் சில களிம்புகள், சாயப்பொடி, மருதாணி, செண்ட், நைலான் உடைகள், காலணிகள்.
ஓவ்வாமையினால் முதலில் பாதிக்கப்படுவதும், அறிகுறிகளை முதலில் வெளிப்படுத்துவதும் சருமம் தான்.
1. செம்மை படர்வது (Rashes)
2. டெர்மடைடீஸ் (Dermatitis)
3. அரிப்பு,தடிப்பு (Urticaria) மற்றும்
4. கரப்பான் (Eczema)
அலர்ஜி குணம் பெற வழிகள்:
1. காய்கறிகளின் சாறுகள், வாழைப்பழம் இவற்றை உட்கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும்.
2. வேப்பிலை சிறந்த இரத்த சுத்திகரிப்பு மற்றும் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் சிறந்த மூலிகையாகும். எக்சிமா, முகப்பரு, உணவு ஒவ்வாமை இவற்றுக்கு வேப்பிலை மிகச் சிறந்த மருந்து.
3. உடலின் எதிர்ப்புச் சக்தியில் ஒரு அங்கமான இரத்தத்தில் உள்ள லிம்போசைட்ஸ் (Lymphocytes) வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க கற்றாழை பயன்படுகிறது. மேலும் இதர வெள்ளை அணுவான மானோசைட் டி செல்கள் (T- Cells) மற்றும் பாக்டீரியாவை ஒழிக்கும் “மாக்ரேபேஜஸ்” (Macrophages) இவற்றையும் கற்றாழை ஊக்குவிக்கும்.
4. தோலில் ஏற்படும் அலர்ஜியால் உண்டாகும் அரிப்பு, தடிப்புகளுக்கு மணத்தக்காளி (Black Night Shade) இலைகளின் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம்.
5. மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. மஞ்சள் சேர்ந்த பல ஆயுர்வேத மருந்துகள் மூலம் அலர்ஜிகளை தவிர்க்கலாம்.
கால்களையும் கொஞ்சம் கவனியுங்கள்:
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது கால்களை பிரத்யேகமாக பராமரிக்க வேண்டும். ஒரு தொட்டியில் (Tub) வெதுவெதுப்பான நீருடன், ஷாம்பூ அல்லது தாவர எண்ணெய் கலந்து அதில் உங்கள் கால்களை குறைந்தது 15 நிமிடங்கள் அமிழ்த்தி வைக்கவும். மூலிகைகள், மூலிகை எண்ணெய்களையும் கால்களை அமிழ்த்தும் நீருடன் சேர்க்கலாம். இல்லையெனில், 10 மி.லி. டெட்டால் உடன் 10 மி.லி. ஷாம்பூவையும் சேர்க்கலாம்.
கால்களில் இரத்த ஓட்டம் சரியாக வந்தடைய, ஒரு முறையாவது கால்களை மாறி, மாறி குளிர்ந்த நீரிலும், வெந்நீரிலும் அமிழ்த்தி வைக்கலாம். இதற்கு இரண்டு டப்கள் தேவை. ஒன்றில் வெந்நீர் உடன் 20 மி.லி. நல்லெண்ணெயினை கலந்து வைக்கவும். மற்றொன்றில் குளிர்ந்த நீர் இருக்கட்டும். கால்களை வெந்நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என்று மாற்றி, மாற்றி அமிழ்த்தி வைக்கவும். இதை 5 அல்லது 6 முறை செய்யலாம்.
கால்கள் “இறந்த” செல்களை நீக்குவதற்கு றிuனீவீநீமீ கல்லால் தேய்க்கவும். பாதங்களில் ஈரப்பசை தரும் லோஷன்களை தேய்க்கலாம். குளிப்பதற்கு முன் உள்ளங்கால்,கால் விரல் இடுக்குகள், நகங்கள், கணுக்கால், குதிகால் சதை இவற்றில் எண்ணெய் தேய்த்துக் கொள்வது அவசியம்.