அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
`டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், நீண்ட நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் `ஆசனபகுதியை’ ஸ்கேன் செய்தார்கள். அந்த ஆய்வில் ஆண்களை விட பெண்களுக்கே ஆசனப் பகுதியில் தொற்றுக்கள் அதிகமாக வரக்கூடிய சாத்தியமுண்டு.
ஏனென்றால் மலவாசல், கருப்பைவாய்க் குழாய், சிறுநீர் வடிகுழாய் என்பன நெருக்கமாக இருப்பதுடன் பெண்களின் சிறுநீர்வடிகுழாய் சிறியதாகவும் காணப்படுவதால் மலவாய், கருப்பை வாய், சிறுநீர்வடி குழாய்க்கு மிக இலகுவாக பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. அதுபோல் ஆண்களுக்கு சுக்கில சுரப்பி போன்றன மூலம் தொற்றலாம். எவ்வாறாயினும் இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவான ஒரு பிரச்சனையாகும்.
சிறுநீர்த் தொற்று விருத்தியடைந்தால் அது பலவகையான பிரச்சனைகளுக்கு காரணமாகின்றது. உதாரணமாக மகப்பேறு, பாலியல் உறவு, உதரவிதானப் பயன்பாடு போன்றவற்றை பாதிக்கவும் வாய்ப்புண்டு. இவை மேலும் விருத்தியடைந்தால் சுக்கிலவழற்சி உருவாக்கும். சிறுநீர் பாதையில் ஏதேனும் அடைப்புகள் இருப்பின், சிறுநீர்வடி குழாயில் பழைய தொற்றுக்கள் விளைவாக ஏதும் சுருக்கங்கள் இருத்தல், போன்றவற்றாலும் இது ஏற்படலாம்.
சிறுநீர்த் தொற்றை கண்டறிவது எப்படி?
அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழித்தபின் சிறுநீர்ப்பை வெறுமையாக இருப்பினும் மீண்டும் சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுதல், அது போல் சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படல், விரும்பத்தகாத மணத்துடன் மேகமூட்டம் போல் தெளிவற்றுக்காணப்படும். இவ்வாறான அறிகுறிகளை வைத்து தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம். குழந்தைகளுக்கு சிறுநீர்ப்பை தொற்று இருப்பின் சிறுநீர் கழிக்கும் வேளைகளில் அடிவயிற்றில் வலி ஏற்படும். சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் வெளியேறும் தன்மையும் காணப்படும். இத் தொற்றை சரிவர குணப்படுத்தாத நிலையில் அது வேறு சில நோய்க்கும் வழிவகுக்கும்.
இந்நிலை அடிக்கடி ஏற்படுமாயின் (அதாவது 2 மாதங்களுக்கு ஒரு முறை) மூலிகை வைத்தியரை நாடவும்.