சைனஸ்

Spread the love

1. நமது முகத்தில் மூக்கு ஒரு ‘முக்கிய’ பாகம். வாசனைகளை அறியவும், காற்றை நுரையீரலுக்கு அனுப்பி திரும்பி வெளியேற்றும் பாதை மூக்கு. சுவாசிக்கும் காற்றை சிறிது சூடாக்கி, சிறிது ஈரமாக்கி, சுத்தீகரித்து நுரையீரலுக்கு மூக்கு அனுப்புகிறது.

2. மூக்கை சுற்றி உள்ள முக எலும்புகளில் வெற்றிடங்கள் உள்ளன. மூக்கின் வலது, இடது பக்கங்களில் நான்கு ஜோடியாக, எட்டு சைனஸ் ‘அறைகள்’ இருக்கின்றன. அவை இருக்கும் இடத்தைப் பொருத்து சைனஸ்கள் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படுகின்றன.

3. எத்மாயிட் நெற்றிப் பகுதிக்கு சிறிது கீழே, இரண்டு கண்களின் குழிகளிடையே பிறவியிலிருந்தே அமைந்திருக்கும் ஜோடி.

4. மேக்ஸிலரி முகத்தின் கன்னப்பகுதியில் அமைந்திருக்கும். இந்த சைனஸ் குழிகளும் பிறவியிலிருந்தே இருக்கும்.

5. ப்ரன்டல் நெற்றிப்பகுதியில் அமைந்திருக்கும். ஏழு வயதுக்கு பிறகு தான் இவை உண்டாகும்.

6. ஸ்பீனாயிட் மூக்குக்கு பின்னால் அமையும் இந்த ஜோடி சைனஸ்கள் இளம் பருவத்தில் (13 லிருந்து 19 வயதுக்குள்) தான் உருவாகும்.

சைனஸ்களின் அமைப்பு

மூக்கைப் போலவே சைனஸ் அறைகளின் சுவர்கள், ஈரமான ஜவ்வுப்படலத்தால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர சிலீயா எனப்படும் நுண்ணிய ரோமங்களும் சைனஸ் அறைகளின் சுவர்களில் உள்ளன. சைனஸ் அறைகளிலிருந்து மூக்குக்கு செல்லும் குறுகிய, நுண்ணிய குழாய்கள் (வடிகால்கள்) உள்ளன. இதனால் மூக்கும் சைனஸ் அறைகளும், காற்றையும் சளியையும் பரிமாறிக் கொள்ளும். மூக்கும் சைனஸ்களும் சிறு குழாய்களின் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால், பாதிப்புகளின் சிகிச்சை இவை இரண்டுக்கும் சேர்த்தே செய்யப்படுகிறது.

சைனஸால் என்ன பயன்?

• மூக்கின் செயல்பாடுகள் அனைத்துக்கும் சைனஸ் அறைகள் உதவுகின்றன.

• மூக்கைப் போலவே, அதன் வழியே வரும் காற்றின் தூசி, அழுக்குகளை வடிகட்டி, நீரில் படகை தள்ளும் துடுப்புகள் போல, சீலியா ரோமங்களால் மூக்குக் குழியில் காற்றை தள்ளுகின்றன.

• நமது குரலுக்கு நல்ல ஒலி வடிவத்தை கொடுக்கின்றன.

• காற்றடங்கிய சைனஸ் வெற்றிடங்கள் இல்லாமலிருந்து அங்கு எலும்புகளே இருந்தால், தலையின் பாரம் அதிகமாகிவிடும். முக எலும்புகளின் வலிமையையும், வடிவத்தையும் பாதிக்காமல் அவற்றின் எடையை சைனஸ் அறைகள் குறைக்கின்றன.

• சைனஸின் சளிப்படலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும். பாக்டீரியா, வைரஸ்களை தாக்கும் பொருட்கள் சளிப்படலத்தில் உருவாகின்றன.

• கண்களுக்கும், மூளைக்கும் நடுவிலே ஒரு ‘குஷன்’ மெத்தை போல, சைனஸ்கள் அமைந்திருக்கின்றன.

சைனசிடிஸ் (ஷிவீஸீusவீtவீs)

சாதாரணமாக அடிக்கடி பரவலாக காணப்படும் தொற்று சைனுசைட்டிஸ். சைனுசைட்டீஸ் தொற்று, நான்கு சைனஸ்களில் எதை வேண்டுமானாலும் தாக்கலாம். ரைனீடீஸ் எனும் மூக்கடைப்பு பாதிப்புடன் தான் சாதாரணமாக சைனுசைடீஸ் தோன்றுகிறது. சைனுசைடீஸ் இருவகைப்படும்.

1. தீவிர சைனுசைடீஸ்

2. நாட்பட்ட சைனுசைடீஸ்

முக்கிய காரணம் ஜலதோஷம் – அதுவும் நாட்பட்ட ஜலதோஷம். ஜலதோஷத்தால் ஏற்படும் கபம், சளி, சைனஸ்களின் அறைகளில் தேங்கி நின்று விடும். இவற்றினால் கிருமிகள் தோன்றி, சளி, சீழாக உருவாகி விடும். சுவாச மண்டலம் பாதிக்கப்படும்.

பாக்டீரியா (அ) வைரஸ் கிருமிகளும் சைனுசைடீஸை உண்டாக்கும். ஏன், பூஞ்சன தொற்று கூட மூக்கடைப்பு, சைனஸ் பாதிப்புகளை உண்டாக்கும்.

சைனுசைடீஸ் ஏற்படும் இன்னொரு காரணம் சைனஸ்களில் ஏற்படும் அடைப்பு. எட்டு சைனஸ்களிலிருந்து மூக்குக்கு செல்லும் “குழாய்கள்” நுண்ணியவை.

எனவே சுலபமாக அடைப்புகள் ஏற்படுகின்றன. அடைப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. மூக்கின் நடுவில் ஷிமீஜீtuனீ என்ற தடுப்புச்சுவர், பிறவியிலிருந்தே சிலருக்கு வளைந்து இருக்கும். இதனால் மூக்கின் அருகிலிருக்கும் சைனஸ் அறைகளின் வாசலை அடைத்து விடும்.

காற்றுப் போக்குவரத்து தடைப்படும். சுற்றுப்புற சூழ்நிலையுள்ள மாசுகளும், தூசிகளும் அடைப்பு ஏற்பட காரணங்களாகலாம். சைனஸ் அறைகளின் வாசலில் ‘பாலிப்’ என்ற சதை வளர்ச்சியும் வாயிலை மூடி விடும்.

முன்பே சொன்னபடி, ஜலதோஷத்தினால் மூக்கின் ஈரமான ஜவ்வுகள் வீங்கி புடைத்து விடும். இந்த வீங்கிய ஜவ்வுகள் சைனஸ்கள் திறப்பு துவாரங்களை அடைத்து விடும். இதனால் சைனஸ்களில் உள்ள காற்று ரத்தத்தால் உட்கிரகிக்கப்படுகிறது. சைனஸ் அறைகளின் காற்றழுத்தம் குறைந்து, கபம், சளி திரவங்கள் காற்று போன இடங்களில் புகுந்து விடும். இந்த கபச்சளி திரவம் பாக்டீரியாக்கள் குடி புகுந்து இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடம். இதனால் சைனஸ் வலி ஏற்படும். அடினாய்டு சுரப்பியின் வீக்கத்தினாலும் சைனுசைடீஸ் (குறிப்பாக குழந்தைகளுக்கு) ஏற்படும்.

அலர்ஜி, அதாவது ஒவ்வாமையும் காரணமாகும்.

பற்சொத்தையும் சைனஸ் தொல்லைகளை உண்டாக்கலாம். பற்களின் வேர்களின் அருகாமையில் தான் மாக்ஸீலரி சைனஸ் அறைகள் உள்ளன. தீவிரமான, ஆழமான பற்சொத்தை வேர் வரை பரவும் போது, பக்கத்தில் இருக்கும் சைனஸ் அறைகளையும் தாக்கும்.

பொதுக்குளங்களில் நீச்சலடிப்பது, குளிப்பது. சைனஸ் தொற்றை உண்டாக்கலாம்.

ஆயுர்வேத அணுகு முறை

ஆயுர்வேதத்தில் சைனுசைடீஸ் ‘பீனிசம்‘ (அ) துஷ்ட பிரதிச்சயா எனப்படுகிறது. வாதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான பிரானவாதம், தலை, மூளை, மனம் இவற்றை கட்டுப்படுத்தும். கபத்தின் உட்பிரிவில் ஒன்றான ‘ஸ்லேசக’ கபமும் இந்த பிரான வாதமும் ஏறுமாறானால் பீனிசம் ஏற்படும் என்பது ஆயுர்வேத கருத்து. உடலின் கழிவுப்பொருள் (ஆமம்), சைனஸ் பிரதேசங்களில் உள்ள சிலேசக கபத்துடன் கலந்து விடுகிறது. இதனால் ‘சிலேச்மா’ என்ற கெட்டி கோழை உருவாகி, சைனஸ்களை அடைத்து விடுகிறது. பித்ததோஷமும் சீர் குலைந்து அழற்சியை உண்டாக்கும்.

காற்றின் வழியே பரவும் கிருமிகள், தவறான வாழ்க்கை முறை, குளிர்ச்சியான உணவுகள், இனிப்புகளை உண்பது, தூக்கமின்மை, உடலுழைப்பு, உடற்பயிற்சியின்மை இவைகளும் திரிதோஷங்களின் சமநிலையை பாதிக்கும்.

ஆயுர்வேத சிகிச்சைகள்

1. மஞ்சள் – 2 பாகம், சீரகம் – 4 பாகம், தனியா – 4 பாகம், கருஞ்சீரகம் – 4 பாகம், இஞ்சி – 1 பாகம், கருமிளகு -1 பாகம் இவற்றையெல்லாம் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியை சமைத்த காய்கறிகளின் மேல் தூவி சாப்பிடலாம். “சூப்”புடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

2. மூலிகை கஷாயங்கள் நல்ல நிவாரணமளிக்கும். இரண்டு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் இரு துளசி இலைகள், இரு சிறிய இஞ்சித் துண்டுகள், 4 புதினா இலைகள், 2 கிராம்பு / இலவங்கம் சேர்த்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

3. மலச்சிக்கலை போக்கவும். 4. ‘சோதன் நஸ்யம்‘ என்ற சிகிச்சை முறையில், மூக்கைச் சுற்றி ஒத்தடம் கொடுக்கப்படும். மருத்துவ மூலிகைகள் கலந்த தைலம், மூக்கில் விடப்படும்.


Spread the love
error: Content is protected !!