தினமும் உணவில் 100 கிராம் தேனை பால் அல்லது தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம்.
இரண்டு (அ) மூன்று பூண்டு பற்களின் சாற்றுடன், 2 தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை குடித்து வரவும். பூண்டு கிருமி நாசினி. பீனிச வலிகளை குறைக்கும்.
பூண்டைப் போலவே, வெங்காய சாறு எடுத்து தேனுடன் குடிக்கலாம்.
கருமிளகு 5 கிராம் அளவில் எடுத்து பொடிக்கவும். ஒரு கப் சூடான பாலுடன் கலந்து குடிக்கவும்.
‘நீராவி’ பிடித்தல் சைனுசைடீஸின் பாதிப்புகளை குறைக்கும். மூக்கடைப்பு குறையும்.
நீராவி பிடிக்கும் நீரில் யூகலிப்டஸ் தைலம், பூண்டு சாறுகளை சேர்க்கலாம்.
வசம்பை சிறிது நீருடன் அரைத்த களிம்பை இரவில் மூக்கின் இரு பக்கங்களிலும் மற்றும் நெற்றியிலும் தடவி மறுநாள் காலை வரை விடவும்.
மஞ்சள் துண்டு ஒன்றை எடுத்து, நெய் தடவி நெருப்பில் காட்டவும். எழும்பி வரும் புகையை, மூக்கின் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தால் உள்ளிழுக்கவும்.
இதை மூக்கின் இரு பக்கங்களிலும் மாற்றி, மாற்றி செய்யவும்.
மேலும் தெரிந்து கொள்ள…