ஆரோக்கித்திற்கான எளிய சத்தான சமையல்

Spread the love

கீரை குருமா

தேவையான பொருட்கள்

முளைக்கீரை  –1கட்டு

தேங்காய்      –1/4மூடி

பச்சைமிளகாய் –3

சீரகம்          –1டீஸ்பூன்

முந்திரி        –10

சின்னவெங்காயம்-10

இஞ்சி          –1சிறுதுண்டு

பூண்டு          –2பல்

எண்ணெய்      –3டீஸ்பூன்

உப்பு            -தேவையானஅளவு

செய்முறை

முளைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், முந்திரிப்பருப்பு, தேங்காய் போட்டு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மீதியுள்ள 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கீரையைப் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். பாதி வெந்தவுடன் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி முழுவதும் வெந்தவுடன் இறக்கி சாதம், சப்பாத்தி, தோசை இவற்றுடன் பரிமாறவும்

மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள்

மஷ்ரூம்          –200கி

சின்னவெங்காயம்  –20

மிளகுத்தூள்        –1டீஸ்பூன்

உப்பு               -தேவையான அளவு

கறிவேப்பிலை      -சிறிது

எண்ணெய்          –3டீஸ்பூன்

சீரகம்               –1/2டீஸ்பூன்

செய்முறை

சின்ன வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மஷ்ரூமை கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சீரகம் போட்டு தாளித்து பின் கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு வதக்கி, மஷ்ரூமையும் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும். சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.

பரங்கிக்காய் போண்டா

தேவையான பொருட்கள்

பரங்கிக்காய்  –1கப்துருவியது

கடலைமாவு  –2கப்

வெங்காயம்   –1

பச்சைமிளகாய் –1

கொத்தமல்லி  -சிறிது

கறிவேப்பிலை -சிறிது

உப்பு          -தேவையான அளவு

தயிர்          –1டே.ஸ்பூன்

எண்ணெய்     -பொரிக்க

செய்முறை

பரங்கிக்காயை தோலை சீவி, நடுவில் உள்ளதை எடுத்து விட்டு துருவி 1 கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவுடன் பரங்கிக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, தயிர் தண்ணீர் சேர்த்து சிறிது தளர்த்தியாகப் பிசைந்து, ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் போண்டாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும். தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

வாழைப் பூ வடை

தேவையான பொருட்கள்

வாழைப்பூ        –1

துவரம்பருப்பு     –2கப்

பெரியவெங்காயம் –1

மிளகாய்வற்றல்   –4

சோம்பு            –1டீஸ்பூன்

பூண்டு             –2பல்

உப்பு               -தேவையான அளவு

எண்ணெய்          -பொரிக்க

செய்முறை

வாழைப் பூவை உரித்து நடுவில், உள்ள நரம்பை நீக்கவும். துவரம் பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸியில் மிளகாய், சோம்பு, பூண்டு, உப்பு, துவரம் பருப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வாழைப் பூவையும் சேர்த்து ஒரு அடி அடிக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி இந்த மாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பின்னர் இதனை வடைகளாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும். (வாழைப்பூவை பொடிப் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்). சாதத்துடன் சேர்த்து பரிமாறவும்.

உணவு நலம் அக்டோபர் 2011

ஆரோக்கித்திற்கான, எளிய சத்தான சமையல், கீரை குருமா, கீரை குருமா செய்முறை, மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை, மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை செய்முறை,

பரங்கிக்காய் போண்டா, பரங்கிக்காய் போண்டா செய்முறை, வாழைப் பூ வடை,

வாழைப் பூ வடை செய்முறை,


Spread the love