உடல் ஆரோக்கிய டிப்ஸ்!

Spread the love

உங்களுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக அமைய கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

பொதுவாக நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் எளிதில் நோய்வாய்ப்படுவதற்கோ, ஆரோக்கியமான உடலைப் பெற்று இருப்பதற்கோ அவர்கள் கடைபிடிக்கும் பழக்கங்கள் தான் காரணமாக அமைகின்றன.

தேவையான உணவு, அதற்கேற்ப உடற்பயிற்சி, போதுமான உறக்கம், மன நலம் பெற்றிருக்கும் மனிதனுக்கு நோய் என்றுமே அருகில் வருவதில்லை. ஆரோக்கியம் தரும் உணவுகள் தாவர வகைகளிலிருந்தும், விலங்குகள் வகைகளிலிருந்தும் சத்துக்களைப் பெறுகிறோம்.எலும்புகள், தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிக்கும் சத்துக்கள் உதவுகின்றன. மேற்கூறிய இருவகை உணவுகள், உடலுக்குத் தேவையான ஆற்றலையும் செயல்படுத்துவதற்குரிய நிலையையும் வழங்குகிறது. உணவுப் பட்டியலின் பிரமீடு ஒன்றை ஊட்டச் சத்து நிபுணர்கள் விளக்கி எந்தெந்த உணவுகளை நாம் சாப்பாட்டில் எந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பரிந்துரைக்கிறார்கள்.

இதன்படி ஆரோக்கியம் தரும் உணவுகள், பிரமீடு பட்டியலில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் புரதம், கொழுப்பு, கார்போ ஹைட்ரேட்டுகள் மற்றும் இனிப்புகள் என்று ஒவ்வொரு வகை உணவுக் குழுவில் இருந்தும் எந்த அளவு நாம் சாப்பாட்டில் எடுத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்கிறோம்.இவ்வாறு ஆரோக்கியமான உணவு தேர்ந்தெடுத்தல் முறையினால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கவும், சில வகையான புற்று நோய்கள் அதிகரிப்பதை குறைக்கவும் உதவுவதுடன் ஆரோக்கியமான, உடல் பருமனை பராமரிக்கவும் முக்கியமானதாக அமைகின்றன.

மத்திய தரைக் கடல் நாடுகளில் பொதுவாக செயல்படுத்தப்படும் உணவுக் கட்டுப்பாடுகள், உண்ணும் உணவுகளின் பலவகை வேதிப் பொருட்களினால் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கின்றன.மத்திய தரைக் கடல் நாடுகளின் உணவுப் பழக்கங்கள் எப்படி அமைகிறது என்று பார்ப்போம்.

புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட பசுமையான காய்கறிகளும் பழங்களும், அதனைத் தொடர்ந்து தானியங்கள் மற்றும் பருப்பு வகை உணவுகளுடன், ஆலிவ் எண்ணெயை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். போதுமான அளவு மீன் அல்லது கோழி இறைச்சி, மிகக் குறைந்த அளவு, பெரும்பாலும் கெட்டித் தயிர் மற்றும் பாலாடைக் கட்டியை உணவில் சேர்க்கின்றனர். சிவப்பு மாமிசம் அல்லது பதப்படுத்தப்பட்ட மாமிச உணவுகளுடன் இனிப்பு, மீடியமான அளவு ஒயின் அருந்துவது, இவை தான் அவர்களின் அன்றாட உணவுகள்.மேற்கூறிய உணவு வகைகளிலிருந்து மனிதனுக்கு ஆரோக்கியமான உடலுக்குப் பெற வேண்டிய சத்துக்கள் கிடைத்து விடுகிறது என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து நோயின்றி மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.

உடற்பயிற்சி

எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உழைத்தாலும் உடலும் மனதும் புத்துணர்ச்சி பெற வேண்டும் எனில் எப்பொழுதெல்லாம் இயலுமோ அப்பொழுதெல்லாம் சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்து வர வேண்டும். இதன் மூலம் உடல் வலுவாக அமைவதுடன் ஆரோக்கியம் பெறும்.மனிதனின் தசை நார்களை பலப்படுத்தும்.இதயம் சார்ந்த இயக்கங்கள் மேம்படும்.சில வகை உடற்பயிற்சிகள் குறிப்பாக நடைப் பயிற்சி, மெது ஓட்டம், ஓட்டம், தாண்டும் பயிற்சி போன்றவை இதயத்தை வலிமைப்படுத்தும்.வயதுக்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ப உடற்பயிற்சிகளை தினசரி ஓரிரு மணி நேரங்கள் என வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் செய்து வந்தாலே போதுமானது.

ஆழ்ந்த உறக்கமும் அவசியம்

ஆரோக்கியமான உடலை தக்க வைத்துக் கொள்ள உறக்கமும் மிகுந்த பங்கு வகிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் உடல் வளர்ச்சி மற்றும் மன வலிமைக்கு தூக்கம் முக்கியமான பங்கு வகிக்கிறது. சரியான தூக்கம் அமையாத நிலை நீண்ட கால ஆரோக்கிய கெடுதலுக்குக் கொண்டு செல்லும். அது போல அதிக உடல் நலமின்மைக்கும், குறைவான உடல் நிலை குணம் பெறுவதற்கும் தொடர்பு இருப்பதை தூக்கமின்மை ஒரு காரணம் என்று கூறுகிறது. போதுமான அளவு தூக்கம் வராமல் அல்லது தூங்காமல் உள்ள மனிதர்கள் அதாவது ஒரு இரவுக்கு ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக உறக்கம் கொள்பவர்கள், ஏழு மணி நேரம் மற்றும் அதற்கும் மேலாக உறக்கம் கொள்ளும் மனிதர்களை விட நான்கு மடங்கு ஜலதோஷத்தினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி ஒன்றில் அறியப்பட்டுள்ளது. வளர்சிதை மாற்றங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் உடல் பருமன் மற்றும் உடல் எடை குறைத்தல் போன்ற உடலியக்கங்களில் தூக்கமின்மை மிகப் பெரிய தாக்கத்தை விளைவிக்கிறது.

மிக நீண்ட நாட்களாக/வருடங்களாக இரவுப் பணியில் பணி புரிபவர்களுக்கு புற்று நோய்க் காரணிகள் ஏற்படும் வாய்ப்புகள் தூக்கமின்மையால் ஏற்படலாம் என்று ஐக்கிய நாடுகளின் உலக புற்று நோய் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.தூக்கம் சார்ந்த ஆராய்ச்சிகள் நடத்தும் தேசியக் கழகமானது, ஒரு மனிதனின் வயதுக்கு ஏற்ற தினசரி தூக்கம் எவ்வளவு இருத்தல் ஆரோக்கியமானது, அவசியமானது என்று பரிந்துரை செய்துள்ளதை நாம் கடைபிடித்தால் பலவித ஆரோக்கியக் கெடுதல்களை தவிர்க்க இயலும்.

வயது     தூக்க அளவுகள் (மணி நேரங்களில்)

0&3மாதங்கள்    14&17

4&11மாதங்கள்   12&15

1&2வருடங்கள்  11&14

3&5வருடங்கள்  10&13

6&13வயதினர்   9&11 

14&17வயதினர்   8&10 

18&64 வயதினர்  7&9 

65மற்றும்அதற்கு மேல் உள்ளவர்கள்  7&8 

கா. ராகவேந்திரன்


Spread the love