நம்முடைய உலகம் என்னதான் மனிதர்களின் படைப்பால் சூழப்பட்டாலும், இயற்கையோடுஒப்பிடவே முடியாது. பல்வேறு அதிசயங்களை கொண்ட இந்த பூமியில், இன்னும் நாம் அறிந்திடாதஅதிசயங்கள் இருந்துதான் வருகின்றது. அந்த வகையில் அறிவியலுக்கே சவாலாக இருக்ககூடிய ஒரு அருவி புனே மாவட்டம், சின்காநெட் மலைபகுதியில் உள்ளது.
புவி ஈர்ப்பு விசையை பொருத்த வரைக்கும், எந்த ஒரு பொருளையும் எடுத்துவீசும் போது அது தரையை நோக்கிதான் விழும். ஆனால் இந்த அருவி தரை தளத்தில் இருந்துமேல் நோக்கி பாய்கின்றது. இந்த மாதிரியான நிகழ்விற்கு காற்றின் அழுத்தம் தான் காரணம்என கூறுகிறார்கள். குறிப்பாக இந்த மலைபகுதியில் ஜீன், ஜீலை மாதங்கள் தான் பருவ மழைதொடங்கும்.
அந்த சீசனில், சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகம். இயற்கை பேரழகும்அதிசயமும் நிறைந்த இந்த அருவியை பார்க்க, Sinhagad பகுதிக்கு வரும் மக்கள்,கவல்செட் பாய்ன்டில் இருந்து, இந்த அருவியை பார்க்க முடியும். இந்த எழில் மிகுந்த காட்சியை,நீங்களும் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோஷப்படுங்கள்.