ஆண்களுக்கு அலோபதி ஆபத்தா?

Spread the love

ஆண்மைக் குறைவு ஆண்களை உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் பாதிக்கும் பெரும் கோளாறு. இந்த பெரும் கோளாறில் தலையாய கோளாறு ஆணுறுப்பு விரைப்புத்தன்மையை இழப்பது. இது உலகளவில் ஆண்களை தாக்கும் பிரச்சனை. எனவே இதற்கான தீர்வை தந்த “வயாகரா” போன்ற சில்டெனாஃபில் மாத்திரைகள் ஆண்களிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றன. இந்த மருந்துகளின் உதவியால் அறுபது வயது முதியவரும் இருபது வயது இளைஞராக செயல்பட முடியும், சொல்லப் போனால் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இந்த மாத்திரைகளை வரவேற்றனர்! ஆனால் இந்த மாத்திரைகளால் சில பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

வயாகராவில் உள்ள சில்டெனாஃபில், உட்கொண்டவுடன் 30 லிருந்து 60 நிமிடங்களில் விரைப்புத்தன்மையை உண்டாக்குகிறது. விரைப்புத்தன்மை 10 லிருந்து 30 நிமிடங்கள் வரை நீடித்து இருக்கும்.

பல அலோபதி மருந்துகளைப் போல வயாகராவும் பக்க விளைவுகளை உண்டாக்கும். அவை

ஆணுறுப்பில் உள்ள கார்பஸ் காவர்நோசம் பகுதிக்கு இரத்தம் சரியாக பாயாவிட்டால் விரைப்பு நிலைக்காது. இதற்கான இரத்த நாளங்களை பாதிக்கும் றிஞிணி – 5 என்ற என்ஸைம்களை தடுக்கும் வயாகரா, றிஞிணி – 6 என்றவற்றையும் பாதிக்கும். இந்த றிஞிணி – 6  கண்களில் உள்ள விழித்திரையான ரெடினா வில் உள்ள கூம்பு செல்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றை வயாகரா பாதிப்பதால் பார்வை கோளாறுகள் ஏற்படும். குறிப்பாக வர்ண பேதங்களை கண்களால் கண்டறியாமல் போகலாம். பச்சை மற்றும் நீல வண்ணங்கள் வயாகரா உட்கொண்டவர்களுக்கு வித்தியாசமாக தெரியும். அல்லது சில மணி நேரங்களுக்கு, வயாகரா சாப்பிட்டவர்களுக்கு உலகமே நீலமாக தெரியும்! எனவே விமானிகள், வாகனம் ஒட்டுபவர்கள், 12 மணி நேரத்திற்கு வயாகராவை உட்கொள்ளக் கூடாது.

அடுத்த பிரச்சனை – இதய நோயாளிகளுக்கு வயாகரா ஏற்றது அல்ல. குறிப்பாக நைட்ரோ கிளிசரின் அல்லது அமில் நைட்ரைட் மருந்துகளை உட்கொள்ளும் இதய நோயாளிகள் டாக்டரின் அனுமதி இன்றி வயாகராவை எடுத்து கொள்ளக்கூடாது. வயாகராவையும், நைட்ரோ கிளிசரினையும் சேர்ந்து எடுத்துக் கொண்டால், நைட்ரிக் ஆக்ஸைட் அதிகமாகி பிரச்சனைகள் உருவாகும். இதனால் “ஹார்ட் அட்டாக்” (மாரடைப்பு) ஏற்படலாம்.

இதர பக்க விளைவுகள் – தலை வலி, சளி நிறைந்த ஜலதோஷம், வயிறு பாதிப்புகள்.

சில இளைஞர்கள் தேவையில்லாமல் வயாகராவை உட்கொள்ளுகின்றனர். இதனால் பழகிப்போய், வயாகரா இல்லாமல் ஆணுறுப்பு விறைக்காமல் போய்விடும்.

வயாகரா ஃபிஸர்) கம்பெனி, தற்செயலாக கண்டுபிடித்த மருந்தாகும். அதற்கு ஏற்பட்ட “டிமாண்டினால்”, அயர்லாந்தில் வயாகரா தயாரிப்புக்கென்றே தனி  ஃபேக்டரியை ஏற்படுத்தியது. வயாகராவுக்கு ஏற்பட்ட வரவேற்பை கண்ட இதர கம்பெனிகளும் ஆண்மை பெருக்கி மருந்துகளை தயாரிக்க போட்டி போட்டு களத்தில் இறங்கின. புதியதாக, வயாகரா போன்ற சியாலிஸ் மற்றும் லெவிட்ரா என்ற மருந்துகள் உருவாகின. இவையும் வயாகராவைப் போல பாலுணர்வு தூண்டுதல் உள்ளவர்களுக்கே உதவும். இந்த இரண்டு மருந்துகளும் வயாகராவைப் போல் பார்வை கோளாறுகளை உருவாக்காது. ஆனால் சியாலிஸ், உபயோகிப்பவர்களில் 5 சதவிகிதம் நபர்களுக்கு தசை வலிகளை உண்டாக்கும்.

வயாகராவும், லெவிட்ராவும் 4 மணி நேரம் இரத்தத்தில் தங்கியிருக்கும். சியாலிஸ் அதிக நேரம் தங்கியிருப்பதால் அது ஒரு நாள் முழுவதும் பயனளிக்கும்.

சத்யா


Spread the love