சாதாரண பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய சூப்பர் மார்க்கட்டுகள் வரை கோக், பெப்ஸி, ஸ்ப்ரைட் என்று பலவித கம்பெனிகளின் குளிர்பானங்கள் அலங்கரித்துக் கொண்டு இருக்கும். கட்டிட வேலை பார்ப்பவர்களில் இருந்து கனவான்கள் வரை அருந்தும் பானங்கள் குளிர்பானங்கள்தான்; கூலித் தொழிலாளிகள் முதல் குபேரன் வரை குளிர் பானங்களைத்தான் அருந்துகிறார்கள்.
கோடைகாலமோ, குளிர்காலமோ ஒரு சிலருக்கு உணவின் போதோ, உற்சாகமாக இருக்கும்போதோ ஒரு குளிர்பானத்தை அருந்தாமல் இருக்க இயலாது. பிரயாணத்தின்போது தண்ணீருக்குப் பதிலாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பனங்களை கையில் எடுத்துச் செல்வது ஒரு சிலரின் பழக்கமாகும். இவர்கள் எல்லோரும் சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை.
குளிர்பானங்கள் அருந்துவதால் நமக்கு நன்மையா என்று ஆராய்ந்தால் கெடுதல்கள்தான் மொத்தத்தில் உள்ளன. குளிர்பானங்கள் அருந்துபவர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே சர்க்கரை நோய் உட்பட பல உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகி விடுகின்றனர். குறிப்பாக தினமும் பாட்டில் குளிர்பானம் அருந்துவதால் சென்ற ஆண்டுகளில் ரத்த சர்க்கரை அளவு 450 முதல் 500 மில்லி கிராம் என்ற அளவிற்குச் சென்று இறுதியில் மயக்க நிலையான ‘கோமா’ நிலைக்கு குளிர்பானங்கள் கொண்டு சென்றுவிடும். இவ்வாறு அபாய நிலையை உருவாக்குவதால் சர்க்கரை நோய் மருத்துவத்தில் குளிர்பானங்களுக்கு சாஃப்ட் டிரிங்க் கீடோஸிஸ் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.
குளிர்பானங்களில் உள்ள மூலப்பொருட்கள் என்னென்ன?
குளிர்பானங்கள் தயாரிப்பில் குளுக்காஸ், பிரக்டாஸ், காஃபின், நிறம் தருவதற்கான ரசாயனப் பொருள் மூலப்பொருட்களாக சேர்க்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட குளிர்பானத்தை கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கும் முன்பு கேஸ் (கார்பனேட்டட) சேர்க்கப்படுகிறது. இதுவும் ஒரு ரசாயனம்தான். காஃபின் எனப்படுவது ஊக்கமூட்டும் ஒரு பொருளாகும். இதனைத் தொடர்ந்து பயன்படுத்தும்பொழுது வயிறு தொந்தி ஏற்படுகிறது. பல் சொத்தையாகிறது. ஊட்டச்சத்து குறைகிறது என்று உலகக் கண்காணிப்பு நிறுவனம் கூறுகிறது. மேற்கூறிய இரசாயனங்கள் உடலில் செல்லும்பொழுது உடலில் உள்ள பொட்டாசியத்தின் அளவு குறைந்து உடல் தசைகள் வலுவிழக்கிறது. சிறுநீரகங்களைப் பாதிக்கிறது.
தேனீர், பாலுக்கு அடுத்து உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது குளிர்பானங்கள்தான் எனினும் குளிர்பானங்களை அதிகம் அருந்துவதில் முதலாவதாக அமெரிக்கர்கள்தான் உள்ளனர். மூன்றில் ஒரு பங்கு இவர்கள்தான் குளிர்பானங்களை அருந்துகின்றனர். மக்கள் தொகையில் 20 சதவீதம் பேரைக் கொண்டு முதலிடத்தில் இருக்கும் சீனா நாட்டினர் குளிர்பானங்கள் அதிகம் அருந்துபவர்களில் 4 மிடம் பெற்றுள்ளனர். குளிர்பானங்கள் அருந்தி உயிரிழப்பவர்களில் 78 சதவீதம் பேர், குறைவான, நடுத்தர வருமானம் உள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
பழச்சாறுகள், பாலில் வைட்டமின்கள், கால்சியம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. உடலுக்கு ஊட்டச் சத்தையும், ஊக்கத்தையும் அளிக்கின்றன. ஆனால் கேஸ் ஏற்றப்பட்ட குளிர்பானங்களில் தண்ணீர், அஸ்பர்டமி என்னும் செயற்கை இனிப்பு பெழருள், தனி மணமூட்டும் இரசாயனப் காஃபின்தான் உள்ளது. உடலுக்கு ஊக்கமூட்டும் செயலைச் செய்யும் காஃபினை ஒரு நாளைக்கு 100 மி.கி வீதம் பயன்படுத்தினால் அதற்கு மனிதன் அடிமையாகிவிடுவான. 80 சதவீத குளிர்பானங்களில் காஃபின் சேர்க்கப்பட்டுள்ளது. குளிர்பானங்களில் அஸ்பர்டமி என்றும் செயற்கை இனிப்பட்டிப் பொருள் சர்க்கரைக்குப் பதில் இனிப்புச் சுவைத் தர பயன்படுத்தப்படுகிறது. அஸ்பர்டமி குறைந்த கலோரி உடையது. வெண்மை நிறமும், மணமற்ற பவுடராகும். சர்க்கரையை விட 200 மடங்கு இனிப்பைத் தருகிறது. இது அதிக அளவில் உடலில் சேர்ந்தால மூளை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குளிர்பானங்களில் காணப்படும் சோடியம் பென்சோனைட் போன்றவை மனித உடலில் குறிப்பாக குழந்தைகளுக்கு டி.என்.ஏ வைப் பாதிக்கும். டி.என்.ஏ பாதிப்பு என்பது தலைமுறை தலைமுறையாக அடுத்தடுத்து தலைமுறையினரை நோயாளியாக்கும் தன்மையுடையவை. இது பர்கின்சன், குடல் சார்ந்த புற்று நோயை உருவாக்கும் அபாயம் கொண்டது.
சோடியம் பென்சோடைட், பென்சோயிக் அமிலம் உணவுப் பொருட்களில் அனுமதிக்கப்படக் கூடாது என்று மருத்துவத் துறையினர் கூறினாலும் குளிர்பான நிறுவனங்கள் அலட்சியப்படுத்திவிடுகின்றனர். புற்று நோயை உருவாக்கும் லிண்டேன் என்னும் விஷத்தன்மை கொண்ட பொருள் குறிப்பிட்ட அளவைவிட 140 மடங்கு அதிகமாக குளிர்பானங்களில் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவு / குறைபாடான ஒஸ்டியே போராஸிஸ் என்னும் நோய்க்கு குளிர்பானங்கள்தான் முக்கியக் காரணமாக உள்ளன. உடலில் உள்ள கால்சியம் சத்துக் குறைந்து, பாஸ்பரஸ் அளவு உயரவும் குளிர்பானங்கள் காரணமாக இருப்பதால் இந்நோய் ஏற்படுகிறது. குளிர்பானங்களில் உள்ள மீத்தைல் என்னும் பொருள் அதிக அளவில் உடலில் சேர்வதால் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது. மலச்சிக்கல், கால்சியம் குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், சிறுநீரகம் பாதிப்புக்கு காரணமாகிவிடும் வாய்ப்புள்ளது.
மேலும் சில பாதிப்புகள்
தொடர்கிறது குளிர்பானங்களைக் குடித்துவரும் நிலையில், கணையத்தில் இன்சுலினை உற்பத்தி செய்யும் பீட்டா செல்களின் செயல்திறன் குறைந்து கொண்டே வரும். இதனால் இன்சுலின் உற்பத்தி குறைந்து போய் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுகிறது. குளிர் பானங்கள் அருந்துவதனால் ஏற்படும் அபாயநிலையை, உணவுக்கட்டுப்பாடு, மருந்துகள் மூலம் மீண்டும் சர்க்கரை நோய் இல்லாத நிலைக்கு கொண்டுவர இயலும். சில குளிர்பானங்களில் சுவை கூட்டுவதற்காக சிட்ரிக் அமிலம், பாஸ்போரிக் அமிலம் சேர்க்கப்படும். இந்தப் பானங்களை நாம் அருந்தும்பொழுது பற்களின் பாதுகாப்பு பூச்சான எனாமலை மெல்ல மெல்ல அரித்துவிடும். அருந்திய ஒரு மணி நேரம் வரை இந்த அரிப்பு நீடிக்கும் உங்கள் பற்கள் கூசுவதுபோல இருக்கும் உணர்வுக்கு காரணம் இதுதான் சில குளிர்பானங்களில் சேர்க்கப்படும் நிறமூட்டிகள் கடும் நோய்களை ஏற்படுத்தக்கூடியது. தார்ட்ராசின் எனப்படும் செம்மஞ்சள் நிறச்சாயம் சருமத்தில் அரிப்பு, எரிச்சலைத் தோற்றுவிக்கும். கார்மொசின் எனப்படும் சிவப்பு நிறம் உணவில் நச்சுத் தன்மையை தோற்றுவிக்கும். புற்று நோயையும் உண்டாக்கும். பிரிட்ஜில் குளிர்பானங்கள் வைத்குரல் உறைந்து போய் விடக்கூடாது என்பதற்காக சில குளிர்பானங்களில் ’எதிலீன் கிளைக்கால்’ என்னும் இரசாயனப் பொருள் சிறிதளவு கலக்கப்படுகிறது. இது சிறிதளவுதான் கலக்கப்படுகிறது எனினும் இந்த இரசாயனப் பொருள் கலக்கப்பட்ட பானத்தை ஒருவர் ஒரு மணி நேரத்தில் நான்கு லிட்டர் அருந்துவார் எனில் அவர் மரணமடைந்துவிட வாய்ப்புண்டு.
இவ்வளவு கெடுதல்கள் மறைந்திருககும் குளிர்பானங்களை இனிமேலும் நாம் அருந்த வேண்டுமா? இயற்கையில் கிடைக்கும் இளநீர், மோர், தயிர், மூலிகைப் பானங்கள் குறைவான விலையில் கிடைக்கும்பொழுது உடலுக்கும் பலம் தரும் இயற்கை தரும் பானங்களை அருந்துவோம். நோய் வராமல் பாதுகாத்துக்காள்வோம்.