உங்களுக்கு பால் பிடிக்காதா?

Spread the love

பிறந்த குழைந்தைகளுக்கு நாம் முதன் முதலில் கொடுக்கிறது தாய் பால் தான். அப்பொழுது இருந்தே நமக்கு பால் அவசியமான ஒரு உணவாகிறது. நம் உடலுக்கு முக்கியமாக தேவையான மூணு சத்துகள் பாலில் உள்ளன. அது என்னவென்றால் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட் இதனுடன் கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் ஙி ஆகிய அனைத்தும்  இருக்கிறது. பாலில் இதெல்லாம் இருக்கிறது, பால் இப்படி தான் குடிக்க வேண்டும் அப்படி என்று சில கதைகள் இருக்கிறது. அதெல்லாம் உண்மை தானா என்பதை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.       

பால் தான் அதிக கால்சியம் நிறைந்த உணவு என்று நம்பப்படுகிறது. ஆனால், உண்மை அப்படி இல்லை. பாலில் இருக்கின்ற கால்சியத்தை விட சியா விதைகளில் அதிக கால்சியம் இருக்கிறது. அதே போல ராகியிலும் பாலை விட அதிக கால்சியம் உள்ளது. கால்சியத்தில் பால் இருந்து உறிஞ்சுவதக்கு நம்ம உடலில் புரோட்டீன்ஸ் பிரேக் செய்ய வேண்டும். ஆனால் 3 வயதுக்கு பிறகு நம் உடம்பில் புரோட்டீன்ஸ் பிரேக் பண்ண முடியாது என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.

பாலை அதிக நேரம் காய்ச்சினால் பாலில் இருக்கின்ற சத்துக்கள் குறைந்து விடும் என்று சொல்கிறார்கள். ஆனால் பசு மாட்டில் இருந்து புதியதாக கறந்த பாலை காய்ச்சினால் தான் பாக்டீரியாக்கள் இறந்து போகும், அதனுடன் நம் பாக்கெட் பால் எல்லாம் ஏற்கனவே பேஸ்சுரைஸ் செய்யப்பட்ட பால் அதாவது ஏற்கனவே காய்ச்சி பதப்படுத்தப்பட்ட பால் தான். இந்த பாலை எத்தனை தடவை காய்ச்சினாலும் சத்துகள் குறையாது.

நாம் காலையில் முதலில் எழுந்ததும் குடிக்கிறது பாலாக தான் இருக்கும். ஆனால் செரிமான பிரச்சனை இருக்கின்றவர்களும் வாயு தொல்லை இருக்கின்றவர்களும் காலையில் வெறும் வயிற்றில் பால் குடிக்க கூடாது. ஏனென்றால் பால் செரிமானம் ஆக நேரம் ஆகும்.

தினமும் 2 டம்ளர் பால் குடித்தால் கால்சியம், புரோடீன்ஸ் எல்லாம் நமக்கு கிடைக்கும் என்பதற்காக தான். பால் குடிக்க பிடிக்காதவர்கள் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிற தயிர், பன்னீர் இது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

பால் குடித்தால் செரிமானம் ஆகாது என்று சிலர் சொல்கிறார்கள். அதற்கு காரணம் பால் கூட நாம் சேர்த்து உண்ணும் உணவாகவும் இருக்கலாம். இப்படி இருக்கிறவர்கள் பாலில் கொஞ்சம் மஞ்சள் தூள் போட்டு சூடான பாலை குடிக்கலாம். இல்லை என்றால், பாலுடன் துளசி சேர்த்து சாப்பிட்டால் செரிமானம் ஆவதற்கு நல்லது.

குழந்தைகள் “சாப்பிடவில்லை என்றாலும் பரவாயில்லை பால் மட்டுமாவது குடித்தால் போதும்” என்று இனிமேல் கூறாதீர்கள். ஏனென்றால் பாலில் நிறைய புரோடீன்ஸ் இருந்தாலும் இரும்பு, நார் இதெல்லாம் இல்லை. அதனால் பாலுடன் சேர்த்து மற்ற உணவும் வளர்கின்ற குழந்தைகள் எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம்.


Spread the love