ஆபத்து மிகுந்த அஜினமோட்டோ

Spread the love

உடைகளில் மட்டுமன்றி உணவு வகைகளிலும் மக்கள் தங்கள் பாரம்பரியப் பழக்கவழக்கங்களிலிருந்து விலகிப் புதிய முறைகளைப் பின்பற்ற முன் வந்துள்ளனர். அவற்றில் ஒன்றுதான் சீன உணவு (Chinese food) மோகம். சீன உணவுகளுக்கும், ருசிக்கும் ஆட்பட்ட ஒரு பெரிய ர(ரு)சிகர் வட்டாரமே உண்டு.

உணவுகளில் புலால் மணம் நிறைந்நிருக்கவும், சுவையை அதிகரிக்கவும் சீன உணவில் சிலவகை உணவுச் சேர்ப்பிகள் (food additives) சேர்க்கப்படுவதுண்டு. அவற்றில் ஒன்று தான் அஜினமோட்டோ (Ajinomotto) என்றழைக்கப்படும் சோடியம் குளுட்டாமேட் (sodium glutamate) இந்த அஜினமோட்டோ கணயத்தைத் தூண்டி விட்டு இன்சுலின் சுரப்பை அதிகரித்து விடுகிறது. இதனால் இரத்த குளுகோஸ் அளவு பாதிக்கப்படுவதுடன் டயபெடிஸ் (Diabetes) எனப்படும் நீரிழிவு நோயையும் எவருக்கும் தெரியாமல் ஏற்படுத்திவிடுகிறது.

சோடியம் குளுட்டாமேட் மைய நரம்புமண்டலத்தில் காணப்படும் நியுட்ரல் ட்ரான்ஸ் மீட்டர்களைத் தூண்டக்கூடியவை என்று பல அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இருந்த போதிலும் இதனால் ஏற்படும் பின்விளைவுகள் தாமதமாகவே ஏற்பட்டதால் இது தொடர்ந்து பயன் படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

குளுட்டாமேட் (glutamate) கணயத்திலுள்ள ஏற்புச் செல்களுடன் (receptor cells) பிணைந்து கணயத்தைத் தூண்டி இன்சுலின் அதிக அளவில் சுரக்கும் படி செய்கிறது. அதனால் இயல்பான அரத்தக் குளுகோஸ் (normal glucose level) சிதைவுற்றுப் போகிறது என்று பிரான்சிலுள்ள மருந்தியல் மற்றும் அகச் சுரப்பியியல் மையத்தைச் (cenre for pharmacology and endocrinology) சேர்ந்த டாக்டர். ஜோயஸ் போக்கேர்டு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஸான்டார் எர்டோ (sandor erdo) எனும் ஹங்கேரிய அறிவியலாரின் ஆய்வுகளின்படி குளுட்டாமேட் கணயம் மட்டுமன்றி, ஹார்மோன்கள் சுரக்கும் பீனியல் சுரப்பி, அட்ரீனல் போன்றவைகளுடன் இணைந்து வினைபுரிந்து பலதீங்குகளை உண்டு பண்ணுகிறது என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

எனவே சுவையை மட்டும் பெரிதென்று எண்ணித் தொல்லைக்கு ஆட்படாமல் தொல்லைதரும் அஜின மோட்டோவைத் தொடாமல் இருப்பது தான் அறிவார்ந்த செயல்.

“சூப்பர் முட்டைகள்”

எல்லோரும் தடையின்றி உண்ணக்கூடிய வகையில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவான “சூப்பர் முட்டைகள்” (Super Eggs) ஆஸ்திரேலியாவிலுள்ள நியூ இங்கிலாந்து பல்கலைக் கழகத்தினர் உருவாக்கியுள்ளனர். மற்ற முட்டைகளைக் காட்டிலும் இம்முட்டைகளில் கொழுப்பும், பிற சத்துக்களும் சரியான விகிதத்தில் அமைக்கப்பெற்றுள்ளன. இந்தச் சத்துக்களின் சமச்சீர் கலவை இதயத் தமனி நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமன்றி, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது.

இந்த சூப்பர் முட்டைகளை மேலும் ஆய்வுக்கு உட்படுத்திப் பின்னர் விற்பனைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ளனர். இவ்வகை முட்டைகள் இடுவதற்கென்றே இம் முட்டையிடும் கோழிகளுக்கு மீன், மீன் எண்ணெய் (Codliver oil) கனோலா உண்ணெய் (Canola oil) தானியங்கள், எலும்பு, இறைச்சித் துணுக்ககள், வைட்டமின்கள் மணிச்சத்து போன்றவைகளைச் சரிவிகிதத்தில் கலந்த கலவையை உணவாக இடுகின்றனர்.

மீன்களில் காணப்படும் ஓமேகா _3 வரிசைச் செறிவுறாக் கொழுப்பு அமிலங்கள், தமனிகளில் படிந்துள்ள கடினமான திசு scar கரைத்து அடைப்புகளை நீக்கிச் சமன் செய்வதால் (neutralise) உணவில் மீன் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது என்று உடல் நலவியலார்கள் கருதுகிறார்கள்.

இயல்பான முட்டைகளைக் காட்டிலும் பெரிய அளவில் இருக்கும் இந்த சூப்பர் முட்டைகளை நாளொன்றிறிகு இரண்டு முட்டைகள் வீதம் 45 பேர்களுக்குத் தொடர்ந்து ஏழு வாரங்களுக்குக் கொடுத்துப் பரிசோதித்ததில் நுணுக்கமான சில முடிவுகள் தெரியாது போனாலும், அவகைளது இரத்தக் கொலஸ்ட்ரால் அளவு உயரவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிய விந்துள்ளது.

இது குறித்து ஆய்வுகள் தொடர்கின்றன.

கைக்குழந்தைக்குப் பசும்பால்

தாய்ப்பாலைப் போன்றே பசும்பாலை மாற்றக் கூடிய ஒரு புதிய உத்தியை அமெரிக்க ஐக்கிய நாட்டு விவசாயத்துறை (US agriculture department) கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளால் எளிதா ஜீரணிக்கக் கூடிய வகையிலிருக்கும் இப்புதிய கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, தாய்ப்பாலின் குணங்களனைத்தும் அடங்கிய குழந்தைகள் பால் தயாரிப்புகள் (Infant milk formulas) பல தோன்றுவதற்கு வாய்ப்புள்ளது.

தங்கள் முதல் ஆண்டுப் பருவத்தில் பசும்பாலை மட்டும் குடித்துவந்த குழந்தைகளுக்கு இரும்புத்தாது, வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் உடலில் குறைந்தும், சோடியம், புரதம் போன்றவைகள் அதிகமாகவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு முதல் வருடம் முழுவதற்கும் தாய்ப்பாலோ அல்லது இரும்புத்தாது அடங்கிய பாலுணவுகளையோ கொடுத்து வரலாம் என அமெரிக்கக் குழந்தைகள் அகாடமி தெரிவித்திருக்கிறது.

பசும்பாலும், தாய்ப்பாலும் அவற்றில் காணப்படும் புரதத்தின் அளவு மற்றும் அடர்த்தியைப் பொறுத்தே ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபடுகின்றன. இந்த இரண்டு முக்கிய வேறுபாடுகளினால் தான் தாய்ப்பால், பிறபால் வகைகளைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்துடனும், எளிதாகச் செரிமானம் அடையக்கூடியதாகவும் இருக்கிறது. மேலும் குழந்தைகளில் பால் புரத ஒவ்வாமையை உண்டாக்கும் புரோட்டீன் பீட்டா லாக்டோகுளோபுலின் (Protein beta lacto globulin) பசும் பாலில்தான் இரக்கிறதே தவிர தாய்ப்பாலில் இல்லை.

பெட்ரோல் ஆவி புற்று நோய் ஏற்படுத்துமா?

மோட்டார், கார் எஞ்ஜின்களிலிருந்தும் பெட்ரோல் பம்புகளிலிருந்தும் வெளிவரும் பெட்ரோல் ஆவி இதத்தப்புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது எனக் கருதப்படுகிறது. பெட்ரோலில் பாணப்படும் பென்சீன் எனப்படும் வேதியே இர்த்தப்புற்றினை ஏற்படுத்தலாம் என லண்டன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர். சைமன் வுல்ஃப் (Dr. Simon Wolff) 1984 முதல் 1988 வரை தொடர்ச்சியாக இருபத்தியிரண்டு நாடுகளில் நடத்திய ஆய்வுகள் மூலம் கண்டு பிடித்துள்ளார்.

இதையடுத்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெட்ரோலில் பென்சீனின் அளவு 0.8 சதவிகிதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதோடன்றி, பெட்ரோல் பம்புகளின் மேற்புறம், பெட்ரோல் ஆவி (Petrol fumes) களில் இருந்து வரக்கூடிய இடர்வரவுக் கூறுகள் குறித்த எச்சரிக்கை வாசகங்கள் சிலவற்றையும் எழுதியும்  வருகின்றனர்.

நெருக்கடியான சாலைகளில், எஞ்ஜினில் இருந்து எழகின்ற இந்த ஆவி, பயணிகள் இருப்பிடத்தை நோக்கியே உறிஞ்சி இழுக்கப்படுவதால், சாலையில் உள்ள பேன்சீன் அளவைக் காட்டிலும், வாகனங்களின் உட்புறம் பென்சீன் அளவு அதிகமாக இருக்கும்.

இந்த பெட்ரோல் ஆவிகளால் (petrol fumes) சிறுகுழந்தைகள் எளிதாக பாதிக்கப்படலாம், என்றாலும் இதன் விளைவு பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

ஹாலஜன் விளக்குகளால் ஆபத்து (Halogen)

வீடுகளிலும், அலுவலகங்களிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் ஹாலஜன் விளக்குகளால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

எலிகளில் இதற்கான பரிசோதனை ஆக்ஸ்போர்டு இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எலிகளை A, B, C என்று மூன்று பிரிவாகப் பிரித்து, வகைக்கு நான்கு எலிகளைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது.

A பிரிவு எலிகளை சாதாரண ஹாலஜன் விளக்கொளியிலும், B பிரிவு எலிகளை தினமும் பன்னிரண்டு மணி நேரம் 50 வாட் ஹாலஜன் விளக்கின் கீழிலும், C பிரிவு எலிகளை மெல்லிய பிளாஸ்டிக்காலான மூடியால் மூடி சாதாரண விளக்கு ஒளியிலும் ஏறத்தாழ 12 மாதங்கள் வைத்து ஆய்வு செய்ததில் மூடி யிடப்படாது, நேரடியான ஹாலஜன் சிளக்கொளியில் இருந்த கி,ஙி பிரிவு எலிகளில் லேசான, ஆனால் வலி அதிகமற்ற (non malignant) தோல் புற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

எனினும், “புற்றுநோய்க்கும், 100,000 ஹெர்ட்ஸீக்குக் குறைவான ஒளியை உமிழும் மின்சாதனங்களுக்கும் இடையே (ஹாலஜன் விளக்குகள்) தொடர்பு இருப்பதற்கான மூல ஆதாரம் எதுவும் காணப்படவில்லை என்று அதே இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்ச¬டு தெரிவித்துள்ளார்.


Spread the love
error: Content is protected !!