சித்தர்கள் பயன்படுத்திய மூலிகைகள்

Spread the love

இந்த பூமியில் நிறைந்துள்ள பலவித மூலிகையின் பயன்களை நம் முன்னோர்கள் தெளிவாக விளக்கி சென்றுள்ளனர். மூலிகை என்றாலே சித்தர்கள் தான் என்கிற அளவிற்கு அதிக நெருக்கம் உள்ளது. நமக்கு தெரிந்த மூலிகையின் பெயர்கள் மிக சில தான். ஆனால், நமக்கு தெரியாத மூலிகையின் பெயர்கள் ஏராளம். ஒவ்வொரு மூலிகைக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. அவற்றை நாம் பயன்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்பட கூடிய பலவித நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். இன்றும் எண்ணற்ற விஞ்ஞானிகள் இந்த பூமியில் உள்ள மூலிகைகளை அதிகம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். பலவித மருந்துகள் இந்த மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வாங்க, இந்த மூலிகைகளின் முழு பயன்பாட்டையும் தெரிஞ்சிக்கலாம்.

மூலிகைகளுக்கும் சித்தர்களுக்கும் எப்போதும் ஒரு வித மர்ம தொடர்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதே போல மூலிகைகளின் மகத்துவம் பற்றிய மர்மமும் இன்றுவரை விலகவில்லை. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு மூலிகைக்குள்ளும் எண்ணற்ற மருத்துவ தன்மைகள் மறைந்துள்ளன. அவை அனைத்துமே நம்மை நீண்ட ஆயுளுடன் வைத்து கொள்ள உதவுகிறது.

பெருங்காஞ்சொறி

இதன் பெயர் சற்றே வித்தியாசம் கொண்டதுதான். அதே போல இவற்றின் பயன்களும் வித்தியாசமான முறையில் நமக்கு உதவுகிறது. முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வை தர இந்த மூலிகை உதவுகிறது. குறிப்பாக, பொடுகு தொல்லையை நிறுத்தி முடி உதிராமல் பார்த்து கொள்கிறது.

அஸ்வகந்தா

“மூலிகைகளின் அரசன்” என்றே இதனை சித்தர்கள் கூறுகின்றனர். அவ்வளவு மகத்துவங்களை இது தனக்குள்ளே மறைத்து வைத்துள்ளது. கொலஸ்ட்ரால், சீரற்ற ரத்த ஓட்டம், ஆண்மை குறைவு, சர்க்கரை நோய் போன்ற பல பிரச்சனைகளுக்கு இது தீர்வை தருகிறது.

கண்டங்கத்திரி

இந்த மூலிகையின் பூ, காய், வேர் என எல்லாமே மூலிகை தன்மை வாய்ந்தவை. சிறுநீர் பிரச்சனை, நுரையீரல் கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கு உதவும். இந்த மூலிகை அதிக ஆற்றலை கொண்டது என்றே சித்தர்களும் குறிப்பிடுகின்றனர்.

அமுக்கரா கிழங்கு

நரம்பு தளர்ச்சிக்கு அற்புத மூலிகையாக இது விளங்குகிறது. அத்துடன் அதிக உடல் உழைப்பால் சோர்வு ஏற்பட்டாலும் இது குணப்படுத்தி விடும். இதனை பாலில் கலந்து குடித்தால் பலன் அதிகம் கிடைக்கும்.

அதிமதுரம்

அதிமதுரம் சிறந்த மூலிகை தன்மை கொண்டது. இவை தொண்டையில் ஏற்பட கூடிய பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். அத்துடன் உடலில் ஏற்பட கூடிய வீக்கங்களையும் இது குணப்படுத்த கூடும். இதன் வேரை டீ போட்டு குடித்தால் பலன் அதிகம்.

ஜின்செங்

ஏராளமான மகத்துவம் இந்த மூலிகையில் ஒளிந்துள்ளது. மன அழுத்தம், ஆற்றல் குறைவு, சோர்வு, எதிர்ப்பு சக்தி குறைபாடு, விந்தணு பிரச்சனை ஆகியவற்றிற்கு இந்த மூலிகை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பிரண்டை

ரத்த ஓட்ட பிரச்சனை, சர்க்கரை நோய், செரிமான கோளாறு, நரம்பு தளர்ச்சி போன்ற பல நோய்களுக்கு தீர்வை இந்த அருமருந்து தருகிறது. இதனை துவையலாகவோ அல்லது பொடி போன்றோ செய்து சாப்பிட்டால் உடலில் நோய்கள் வராமல் பார்த்து கொள்ளலாம்.

பூனைக்காலி

ஆண்களின் அனைத்துவித பிரச்சனைகளுக்கு தீர்வை தரும் குணம் கொண்டது இந்த பூனைக்காலி விதை. இன்று பல ஆண்கள் ஆண்மை குறைவால் அவதிப்படுகின்றனர். இவர்களின் குறைபாட்டை சரி செய்ய இந்த மூலிகை உதவுகிறதாம்.

ஆடாதோடை

நமது உடலின் தசைகளில் ஏற்பட கூடிய வலிகளை காணாமல் போய்விட செய்யும் மகத்துவம் இந்த மூலிகையில் உள்ளதாம். அத்துடன் சுவாச பிரச்சனைக்கும் இது நல்ல தீர்வை தரும். மேலும், ஆஸ்துமா, இரும்பல், சளி போன்றவற்றை விரட்டி அடிக்க கூடியது.

சத்யா


Spread the love