பாலுறவு விருப்பம் அல்லது இச்சையில் (Sexual Desire) உள்ள ஒரு பெரிய முரண்பாடு என்ன வென்றால் ஒருவரை முதலில் சந்திக்கின்றபோது முழுக்க முழுக்க மனதை நிறைக்கின்ற விருப்பம் அவர்களுடன் தொடர்ந்து வாழுகின்ற போது குறைய ஆரம்பிப்பதுதான். ஆனால் பாலியல் வல்லுநர்கள் இதை ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். நீண்ட உறவின் போது வேட்கை குறைந்து அன்பு மிகுதியாகிறது என்கிறார்கள். அளமையில் உடற் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டாலும் ஆண்டுகள் செல்லச் செல்ல அன்புப் பிணைப்பு அதிகரித்து உறவு வலுப்படுகிறது என்பது இவர்கள் கருத்து. ஆண்டுகள் செல்லச் செல்ல ஆசை குறைவது வாழ்க்கையின் நியதி என்று ஆகும் போது அன்பு வளருகிறது என்று சொடலவது ஒரு சிறு ஆறுதல்.
என்றாலும் சில தம்பதியர்கள், ஆண்டுகள் பல ஆன பின்னரும் தங்களுக்கிடையேயுள்ள பாலுறவு வேட்கை குறையாமல் இருக்கினறனர். இவர்கள் ஒருவரை ஒருவர் மனதார நேசிக்கின்றனர். உள்ளப்பிடிப்பும், பிணைப்பும் குறையாதிருக்கின்றனர். இவர்களது உள்ளார்ந்த உறவு நிலையால் இவர்களிடையே வேட்கையும் இச்சையும் விரவித்தென்படுகிறது.
நம்மில் பெரும்பாலோர்க்கு நெருங்கிய பழக்கம் என்பதற்கும் உள்ளார்ந்த உறவு நிலை என்பதற்கும் வேறுபாடு தெரிவ்தில்லை. “ஆண்டுக்கணக்கில் ஒரேவிதமான வாழ்க்கை அலுத்துப் போய்விட்டது. புதுமை எதுவுமில்லை” என்று சிலர் சொல்கிறார்கள். இவர்களில் பலர் தங்கள் வாழ்க்கைத் துணைவர் / துணைவியோடு உள்ளம் ஒன்றிப்பேசியது இல்லையென்று தெரிகிறது. அவ்வாறிருக்க உள்ளார்ந்த உறவு நிலை எவ்வாறு ஏற்படும்.
உடல்கள் சேர்வதால் மட்டும் அன்பு வளராது. உண்மையான அன்பும் பிணைப்பும் உடற்சேர்க்கைக்கு வெளியே நிகழ்வது. அதிர்ஷ்ட வசமாக விருப்பம் என்பது மூளையின் ஆளுகைக்குட்பட்டது. விரும்பினால் அதை வளர்த்துக்கொள்ள முடியும். எனவே முதலில் நீங்கள் செய்யவேண்டியது விருப்பத்தை வளர்த்துக்கொள்ள விரும்புவது. இரண்டாவது உங்களது புலன் நுகர் இன்பம் எவையென அறிந்து உணர்ந்து கொள்வது. மூன்றாவது காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்பதை உணர்ந்து கொள்வது.
மூன்று விதமான இன்ப நுகர்ச்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. இதற்காக விடைகளை நீங்கள் தனித்தோ அல்லது உங்கள் துணைவி /துணைவர் சேர்ந்தோ தேர்ந்தெடுக்கலாம். இதில் 0_1_2_3 என நான்கு படி நிலைகள் உள்ளன. மகிழ்ச்சி தரக்கூடியதில்லை என்று கருதுவதற்கு _0வும் சிறிது மகிழ்ச்சி தரக்கூடியது என்று கருதுவதற்கு _2வும் பெரிதும் மகிழ்ச்சி தரக்கூடியது என்று கருதுவதற்கு _3வும் என்ற கணக்கில் மதிப்பெண்கள் கொடுத்துப் பின்னர் கூட்டிப்பாருங்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச மதிப்பெண் 30. இதில் 15க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அதை உயரளவு என்றும் 15 க்கு குறைவாக எடுத்தால் குறையளவு என்றும் எடுத்துக் கொண்டு விளக்கத்தைப் படிக்கவும்.
புலனுகர் இன்பங்கள் (A)
மெலிதாகப் பாடுதல்
விரைந்து உடற்பயிற்சி செய்தல்
மணம்மிக்க சோப்பு மற்றும் வாசனைத் திரவியங்களுடன் நெடுநேரம் குளித்தல்.
தொலைக்காட்சி பார்த்தல்
தனிமையில் இருப்பினும் வாசனைப் பொருள்களைப் பூசிக் கொள்ளுதல்
இலேசான தூற்றலில் நடத்தல்
அன்பரை ஆரத்தழுவிக் கொள்ளுதல்.
கடற்கரையில் அமர்ந்து அலையையும் அதன் ஓசையையும் ரசித்தல்.
பிடித்தமான நிறம் கொண்ட பொருளைத் தேர்வு செய்தல்.
தோட்டத்தில் உலாவுதல்.
கிளர்ச்சியூட்டும் செய்கைகள் (B)
மெல்லிய உடை அணிந்து படுக்கைக்கு செல்லுதல்.
படுக்கையறையில் மெல்லிசை இசைக்கவைத்தல்
காமம் செறிந்த கதைகள் படித்தல்
கிளர்ச்சியூட்டும் படங்களை டிவியில் பார்த்தல்.
உடலைப் பிடித்து விடுதல்.
துணையோடு இணைந்து நடத்தல்
இருவரும் ஒன்றாய்க் குளித்தல்
துணைவியர்/துணையின் வாசனைப் பொருளைப் பயன்படுத்தல்
இரவில் நெடுநேரம் துணையோடு பேசிக்கொண்டிருத்தல்.
ஆரத் தழுவிக் கொள்ளுதல்.
காதற்காவிய உணர்வுகள்(C)
அன்புக்குரியவரிடமிருந்து மலர்கொத்துப் பெறுவது.
அன்புடையவருக்குக் கடிதம் அல்லது கவிதை எழுதுவது.
அன்புமிக்கவர்களிடம் பாராட்டுப் பெறுவது.
அன்புடையோருடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது.
அன்புக்குரியவரோடு தொலைபேசியில் பேசுவது.
பிரியமுள்ளவருக்குப் பரிசுப் பொருள் தேர்ந்தெடுத்தல்
சிந்தை கவர்ந்தவரைச் செல்லப் பெயரிட்டு அழைத்தல்.
அன்புக்குரியவரோடு சேர்ந்து பணி செய்தல்.
ஆசையுள்ள ஒருவரின் விருப்பத்திற்கேற்ப உடை அணிதல்
மனதிற்குப் பிடித்தவர் உங்களை நேசிக்கிறேன் என்று சொல்வது.
விளக்கம்
உயர் (A) உயர் (B) உயர் (C)
உங்கள் வாழ்வில் பாலுறவிற்கு முதலிடம் தருகிறீர்கள். உங்கள் தாம்பத்திய உறவில் ஒரு சிறு குறை இருந்தாலும் அது உங்களுக்குப் பெரிதாகத் தோன்றக் கூடும். உங்களுக்கு உதவ உங்கள் துணைவர் / துணைவிக்கு உதவுங்கள்.
உயர் – (A) உயர் (B) குறை (C)
உடலுறவைப் பெரிதும் விரும்பும் நீங்கள் உடல் சாராத விஷயங்களில் அன்புகாட்டக் கஷ்டப்படுகிறீர்கள்குப் பிரச்சனை என்று எதுவும் இருந்தால் உங்கள் துணைவியர்/ துணைவி படுக்கையறைக்கு வெளியேயும் அன்புகாட்டக் கூடாதா என்று கேட்பதுவாகத்தான் இருக்கும்
உயர் (A) உயர் (B) உயர் (C)
இயல்பாகவே உங்கள் துணைவர் / துணைவியை நேசிப்பதை வெளிக்காட்டக்கூடியவர். உடலுறவில் விருப்பமுள்ளவராக இருப்பினும் சிறு வயது போதனை சிலவற்றால் படுக்கையறையில் முற்றிலுமாக மனம் விட்டுப் பேசுவது மதிப்புக் குறைச்சல் என்று கருதுகிறீர்கள்.
குறை (A) உயர் – (B) உயர் (C)
உங்களுக்கு ஆசை போதாது என்று உங்கள் துணைவர் / துணைவி கூறினால் அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நல்ல ஆசையுடன் தான் இருக்கிறேன் என்று கூறுவீர்கள். இருந்த போதிலும் ஆசை போதாது. உங்கள் காதற்காவிய உணர்வுகளைக் கொஞ்சம் தாம்பத்திய உறவில் காட்டுங்கள்.
உயர் – ( A) குறை (B) குறை (C)
புலனுகர் இன்பங்களில் ஆர்வமிருந்தாலும் அதைப் பகிர்ந்து கொள்ளச் சிரமப் படுகிறீர்கள், நீங்கள் தனித்து இருக்கும் போது உலக இன்பங்களை எளிதாக உணர்ந்து அனுபவிக்கிறீர்கள். துணையோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் போது சிறிது பதட்டத்துடன் நடந்து கொள்கிறீர்கள். உங்கள் இன்ப நுகர்ச்சிகளில் உங்கள் இணையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.
குறை – (A) உயர் (B) குறை (C)
உங்களுக்கு பாலுறவு வேட்கை மிகுதியும் உள்ளது. இருப்பினும் மற்றவரது உணர்வுகளையும் மதிக்க வேண்டியது அவசியம். தாம்பத்தியத்தில் சிக்கல் எதுவும் இல்லாதவரை தொல்லை இல்லை, சிக்கல் ஏற்பட்டால் அடியும் பிடியும் தான் மிஞ்சும்.
குறை – (A) குறை (B) உயர் (C)
நிங்கள் தாம்பத்திய உறவில் காவிய உணர்வுகள் மேம்பட்டுத் தெரியலாம். இருப்பினும் உடலுறவில் விருப்பம் குறைவது சில பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். கவனத்துடன் செயல்பட வேண்டும்.
குறை – (A) குறை (B) குறை (C)
பாலுறவு என்பது ஏதோ ஒரு தவறான பழக்கம் என்று நினைப்பது போல் நடந்து கொள்கிறீர்கள். உடலுறவில் ஈடுபடுவதென்பது மற்றவருக்காகச் செய்வதைப்போல் எண்ணிச் செயல்படுகிறீர்கள். உங்கள் மனதில் மாற்றம் தேவை.
உணவுநலம் ஜனவரி 2014