பாலியல் வன்கொடுமை மருத்துவ தீர்வு என்ன?

Spread the love

தற்போது நமது சமூகத்தில் நடைபெறுகின்ற அவலங்களில் ஒன்று பாலியல் வன்கொடுமை. இந்த பாலியல் வன்கொடுமையால் பெண்களும் சிறுமிகளும் அநியாயமாகப் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் எண்ணிக்கையில் ஐந்து பெண்களில் ஒருவர் கற்பழிப்பு முயற்சிகளுக்கு உள்ளாகிறார். மூன்றில் ஒரு பெண் தங்கள் வாழ் நாளில் தங்களின் விருப்பத்திற்கு மாறாக உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்தப்படுகிறார்கள்.

வன்முறை மற்றும் நலம் சார்ந்த உலக ஆய்வின்படி பின்வரும் செயல்கள் பாலியல் பலாத்காரங்களாகக் கருதப்படுகின்றன.

1.    விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் வைத்துக் கொள்ள வலியுறுத்தும் முயற்சிகள்.

2.    தேவையில்லாத செக்ஸ் வாசனையுடன் இருக்கும் ‘கீமெண்டுகள்’

3.    உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்தி, செக்ஸ் வைத்துக் கொள்ளுதல்.

பெரும்பாலும் (50 சதவிகிதம்) பாலியல் பலாத்காரம் மிக மிகத் தெரிந்தவர்களால் நிகழ்த்தப்படுவதால், தெரிந்தவர்களிடம் இருக்க வேண்டிய நம்பகத் தன்மை மறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. உடல் மற்றும் மனதை வற்புறுத்தி அச் செயல் நிகழ்த்தப்படுவதால் தாழ்வு மனப்பான்மையும், சுயமதிப்பீடுகள் குறையும் சிலரிடையே காணப்படுகின்றன.

இக் கொடுமையின் காரணமாக ஏற்பட்ட மனக் காயங்கள் மேம்போக்காக ஆறினாலும், ரணங்களின் வேதனை மறைவதற்கு வெகு நாளாகிறது. நாளடைவில் 51 சதவிகிதத்தினர், பேரழிவு இடர் துயரப் பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். 80 சதவிகிதத்தினர், ‘ஹிஸ்டரிக்கல் மன மயக்கங்களுக்கு உள்ளாகின்றனர். வேறு ஒரு ஆய்வின்படி, 44 முதல் 73 சதவிகிதத்தினர், எந்தவித பிரச்சனைகள் இல்லாமலிருந்தாலும், சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர்.

2001 ல் ஃப்ரெஷ்வாட்டர் மற்றும் 2004 ல் மில்லர் போன்றவர்களின் ஆய்வின்படி, நாளடைவில் இவர்களுக்கு மன வருத்தமும், தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுகிறது. 2001 ல் இந்தியாவில் துபே என்ற அறிஞரின் ஆய்வின்படி, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் போதைப் பழக்கங்களுக்கும், தற்கொலை முயற்சிகளுக்கும் ஆளாவதாகத் தெரிய வருகிறது. சில குழந்தைகள் பின்னாளில், கவனச் சிதறல் பிரச்சனைகளுக்கும், மன நெறி முரண் நோய்களுக்கும் உள்ளாகின்றனர்.

திரும்பத் திரும்ப பலாத்காரங்களுக்கு உள்ளாவோர், உடற் காயங்களுக்குள்ளாவோர், தெரிந்த மனிதர்களால் சீரழிக்கப்படுவோர், குடும்ப ஆதரவில்லாதோர், ஒன்றுக்கு மேல் மனிதர்களால் பாதிக்கப்பட்டோர் இவர்களுக்கெல்லாம். பின்னாளில் மனநலப் பிரச்சனைகள் அதிக அளவில் வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தீர்வு என்ன?

பாலியல் பலாத்காரத்துக்குள்ளான குழந்தைகளை விசாரிக்கும்போது, இரண்டு மருத்துவர்கள் விசாரிப்பது பலனளிக்கும். ஒருவர் அந்தக் குழந்தையினையும் மற்றவர் அந்தக் குழந்தை சார்ந்த குடும்பத்தினரையும விசாரிக்கலாம். கற்பழிப்புக்கு உள்ளான பெண்ணை ஆண் மற்றும் பெண் மருத்துவர் இருவரும் விசாரிப்பது நல்லது.

நடந்ததை விசாரிக்கும்போது சில தகவல்களை பாதிக்கப்பட்டவர்கள் மறந்திருக்கக் கூடும் அல்லது மறைக்க முற்படலாம். குடும்ப விசாரிப்புகளில், ஆதரவின் எல்லைகளை உணர்ந்து கொள்ளலாம். விசாரணைகள், பாதிக்கப்பட்டவரின் மனதில், இவர் நமக்கு உதவும் நோக்கில் கேள்விகளைத் தொடுக்கிறார். இவரை நம்பலாம் என்ற நம்பிக்கைன உருவாக்க வேண்டும். கேள்விகள் பன்முகத் தன்மையுடையதாக இருக்க வேண்டும் ‘ஆம் & இல்லை’ பதில்களை வரவழைக்கும் கேள்விகள் முதலில் இருக்க வேண்டும்.

மிகவும் சென்ஸிட்டிவ்வான விஷயங்களை அணுகும்போது, எண்ணற்ற விடைகளில் சரியான விடையைத் தேடும் கேள்விகள் இருப்பதே நல்லது.

எண்ணம் மற்றும் நடத்தை மாற்று சிகிச்சை முறை இவர்களுக்குப் பெரிதளவில் பலனளிக்கிறது. எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பாலியல் வன்முறை ஏற்படுத்திய உணர்வுகள் மனதின் மொத்த உணர்வுகளோடு பொருந்தாமல் ஒரு ஒட்டுத்தாடி போன்ற நிலையில் இருக்கும். மோசமான அனுபவம் ஏற்படுத்திய எதிர்மறை எண்ணங்கள் மேலும் குழப்பத்தினை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்டவரை மறுபடியும் அந்த அனுபவத்தினை பேப்பரில் எழுதச் சொல்ல வேண்டும். பின் அவர் அதனை உரத்துப்படிக்க வேண்டும். அப்போது அவர் அனுபவத்தின் முழு பரிணாமத்தினை மறுபடியும் உணருகிறார்.

முழுமையான உணர்வுகளின் தாக்கத்தில் இருக்கும் போது, எண்ணங்கள் செயல்களாக, தனி மனித நடத்தையாக சில விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று எடுத்துச் சொல்ல வேண்டும். தவறுதலாக உள்வாங்கியிருந்த எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பய உணர்வுகள் குறைந்து மறுபடி அந்த அனுபவத்தினை நினைத்துப் பார்க்கும்போது மிக இயல்பாக இருக்கும்வரை இந்த சிகிச்சை தொடர்கிறது.

குழந்தைகளைப் பொறுத்தவரை ‘விளையாட்டு சிகிச்சை’ மூலமாக அவர்களின் பிரச்சனைகளை அணுகுவது நல்லது. ஒதுங்கியிருந்த அந்த குழந்தைக்கு விளையாட்டு, மற்றவர்களோடு பழகுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தினை அளிக்கிறது. கோப உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாக மட்டுமில்லாமல், அர்த்தமுள்ள உறவுகளுக்கு அது வாசற்படியாகவும் அமைந்து விடுகிறது.

தற்காலிக துக்க பாதிப்புகளுக்கும், தொடரும் துக்க நிலைகளுக்கும், பதட்டம், வருத்தம் மற்றும் மற்ற மனப் பிரச்சனைகளுக்கும் சில நாட்கள் மாத்திரைகள் சாப்பிடுவதும் நல்லது. ஆனால், இதையே தொடர்ந்து கடைபிடித்தால் ஆபத்தில் முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Spread the love