மகப்பேறு முதல் சர்க்கரை வியாதி வரை சுகமளிக்கும் நம்ம ஊரு மூலிகை…

Spread the love

ஆவாரை ஒரு செடி வகையை சேர்ந்த தாவரம்… இந்த செடியோட இல்லை, பூ, பட்டை, வேர், பிசின் மற்றும் இதன் காற்று கூட உடலுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கிறது.. உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியூட்ட கூடிய தன்மை இந்த செடியில் இருக்கின்றது..

ஆவாரை பூவை பறித்து அதை பசை போல் தயார் செய்து அதை மோரில் கலந்து குடித்து வர, சர்க்கரையை கட்டுபாட்டுக்குள் வைக்கலாம்..   ஆவாரை இலை, வயிற்றுப் பூச்சிகளை முற்றிலுமாக வெளியேற்ற உதவும். அதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்…

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலையும் போக்கும்…வீக்கத்தை குணபடுத்த பண்டைய காலத்தில் இருந்தே ஆவாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது… ஆவாரம் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த ஒரு தாவரம், இதோடு இலைகள் மூலமாக தயார் செய்து வரும் டீயை குடித்து வந்தால், வயிற்றில் இருக்கும் நுண் கிருமிகள் நீங்கி, அதனால் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கலாம்… அதோடு பல்வேறு நோய்கள் உண்டாக காரணமாயிருக்கின்ற,   ஸ்டேப்பிலோகக்கஸ் ஆரியஸ், என்ட்ரோ காக்கஸ்   போன்ற நோய் கிருமிகளை அழிக்கிற வேதி பொருட்கள் ஆவாரையில் இருக்கின்றது…


குழந்தையின்மைக்கு பொதுவாக இருக்கும் காரணங்கள், ஒன்று விந்தணு குறைபாடு, மற்றொன்று இயலாமை இதனால் பல பேர் மகப்பேறு இல்லாமல் இருப்பார்கள்… இதற்கு ஆவாரம் பூவோடு, கருப்பட்டியை சேர்த்து சாப்பிட்டு வந்தால், குழந்தை பாக்கியம் நிச்சயம்.. ஆவாரம் பூக்களை பரித்து வந்து அதை கூட்டு போல் சமைத்தோ அல்லது அதை வெயிலில் காய வைத்தோ டீ செய்து குடித்தால், உடல் சூடு, உடல் துர்நாற்றம் நீங்குவதோடு உடலுக்கு பலத்தையும் கொடுக்கிறது.. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, சருமமும் பொலிவு பெருகிறது.ஆவாரம் பூ, இலை இவை இரண்டையும் சேர்த்து காய வைத்து பொடியாக்கி, அதோடு மஞ்சள் சேர்த்து அரைத்து, உடலில் தேய்த்து குளித்து வந்தால் சருமத்திற்கு மிகவும் நல்லது… அதிகப்படியான வியர்வை தடைபடும்… 

அதோடு தோலும் மென்மையாகும்…  ஆவாரம் பூவை இரவு தூங்குவதற்கு முன்னால், ஒரு தம்ளர் தண்ணீரில் போட்டு ஊற வைத்து…காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து வந்தால், தோல் பிரச்சனையான சொறி, சிரங்கு, தேமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.  

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப் போக்கை  கட்டுப்படுத்த, 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, அதை 200 மிலி ஆக  சுண்டக் காய்த்து, 50 மிலி அளவு காலை, மாலை என இரு வேலையும் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.Spread the love