வேண்டாமே சுயமருத்துவம்!

Spread the love

உயிருக்கு உலை வைக்கும்

மேலைநாடுகளில் டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு மருந்தையும் வாங்க முடியாது. ஆனால், இந்தியாவில் வீரியமுள்ள மருந்தையும் டாக்டர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல், மருந்துக் கடைகளில் தாராளமாக வாங்க முடியும். சில இடங்களில் மருந்துக் கடைக்காரர்களே டாக்டராக மாறி சிகிச்சை அளிக்கின்றனர். இது மருந்து மாத்திரை தருவதில் ஆரம்பித்து ஊசி போடுவது வரை தொடர்கிறது. இன்னும் அறுவை சிகிச்சை தான் அவர்கள் செய்யவில்லை. காரணம் அதற்கு பார்மசியில் இடம் இல்லை. இருந்தால், அதையும் முயற்சித்திருப்பார்கள். இந்த சுய மருத்துவம் உயிருக்கே உலை வைக்கும் என்பது பல பேருக்கு தெரிவதில்லை. 

மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களும் விற்பனையைக் கூட்டுவதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு மருந்துகளின் விற்பனையை ஊக்குவிக்கின்றன. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்டோர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே ஆன்டிபயாடிக் மருந்துகளை கூட பயன்படுத்துகிறார்கள் என்கிறது உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரம் ஒன்று.

இந்த நிலைமை நீடித்தால், எந்த ஒரு மருந்துக்கும் கட்டுப்படாத நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது சாதாரண சளி, இருமல் கூட உயிரிழப்பில் முடியக்கூடும் என்று எச்சரிக்கிறது அந்த நிறுவனம். வேண்டாம் சுய மருத்துவம். சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது சரியா..? கொஞ்சம் யோசியுங்கள்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love
error: Content is protected !!