எப்பொழுதும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவரா நீங்கள்?
அடிக்கடி நாற்காலியிலிருந்து எழுந்து ஒரு சின்ன நடைப் பயிற்சி அல்லது கை, கால்களை நீட்டி மடக்க சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பிராஸ்டேட் சுரப்பி சார்ந்த இடங்களுக்கு ஒரு ஆற்றலை, இரத்த ஓட்டத்தை, சத்துக்களைத் தரும்.
உங்கள் உடல் வெப்பநிலையை சரியான அளவில் வைத்துக்கொள்ளுங்கள். உடல் வெப்பநிலையில் ஓரிரு டிகிரி குறைந்தாலும் சிறுநீர் கழித்தல் சிரமம் தரும்.
ரெகுலராக, தடையின்றி காலைக்கடன்களை முடிப்பதை உறுதிபடுத்துங்கள்.
மாதம் ஒரு முறை எண்ணெய் மூலம் மசாஜ் செய்துகொள்வது நல்லது. ஒவ்வொரு இரவும் ஆழ்ந்த தூக்கம் வருவதை உறுதி செய்யவும்.
மிகவும் உலர்ந்துபோன அல்லது அளவுக்கு மீறிய எண்ணெய் அளவு உள்ள, மிதமிஞ்சிய குளிர்ச்சி அல்லது சூடான, மிதமிஞ்சிய காரம் அல்லது தேவையானஅளவு காரமே இல்லாத உணவுகளை தவிர்த்துவிடுங்கள். அளவுக்கு மீறிப் பயன்படுததுவதையும் தவிர்க்க வேண்டும்.