தாய்ப்பால் அதிகம் சுரக்க

Spread the love

நம்ம உடலுக்கு ரத்தம் எந்த அளவுக்கு முக்கியமோ அதேமாதிரி பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது மிகவும் முக்கியம். தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதனால் தாய்ப்பால், குடித்து வளர்ந்த பிள்ளைகள், எந்த நோய்க்கும் சீக்கிரம் ஆளாக மாட்டார்கள். அதுமட்டுமில்லாமல், தாய்ப்பால் கொடுத்து வரும் பெண்களுக்கு, மார்பக புற்று நோயும் ஏற்படாது.

புரதசத்து, தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்த உதவி செய்கிறது. அதனால் முலை கட்டின பயிர், தானியங்களை டெய்லி எடுத்துக்கலாம். கொழுப்பில்லாத, அல்லது கொழுப்பு நீக்கிய அசைவ உணவுகளை சாப்பிடலாம். இரும்பு சத்தான, பேரீச்சை, வெள்ளம் போன்றதை உணவில் சேர்த்து கொள்ளலாம். தினமும், 10 ல் இருந்து 12 டம்ளர் தண்ணீ குடிப்பது நல்லது.

அதோட, தாய்மார்களுக்கு, தாய்ப்பால் அதிகமாக சுரக்க, சில அதிநிறைந்த, இயற்கையான லேகியங்களும், மருந்துகளும், நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெண் பூசணி லேகியம், தேத்தான் கோட்டை லேகியம், சதாவரி லேகியம், அயக்காந்த செந்தூரம், பவளபற்பம், சிலா சத்து பற்பம், மான் கொம்பு பற்பம், இவையெல்லாம் தாய்ப்பால் நன்கு சுரக்க தாய்மார்களுக்கு, கொடுக்கப்பட்டு வருகிறது,  இதை சம்மந்தப்பட்ட மருந்தாளுநரோட அறிவுரை படி எடுத்து வந்தா நல்ல பயன் கிடைக்கும்.

சித்த மருத்துவத்திலும், தாய்ப்பால் அதிகமாக சுரக்க, வெள்ளை பூண்டு, காட்டாமணக்கு, வெள்ளரி, தாலியிலை, நெல்லி இவையெல்லாம் சாப்பிடலாம். வெள்ளை பூண்டை உறித்து, 30 பற்களை எடுத்து பாலுடன் வேக வைக்கவும். இரவு தூங்குவதற்கு முன்னால், இந்த வேக வைத்த பாலையும், வெந்த பூண்டு பற்களையும் சாப்பிடவும். அதிக பால் சுரக்க நினைக்கும் தாய்மார்கள், இதை பயன்படுத்துவதன் மூலம், நல்ல பயன் பெறலாம்.

மேலும் தெரிந்து கொள்ள…


Spread the love