சருமத்தை பாதுகாப்பதற்கு, இயற்கையான முறையில், ஸ்கிரப் பயன்படுத்தலாம். இயற்கையான முறையில் ஸ்கிரப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்வோம்..
1.உலர்ந்த எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சுத் தோலை பொடி செய்து, அதை, பால், தேன் அல்லது எலுமிச்சைச் சாறுடன் கலந்து சருமத்தில் தேய்த்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் விட்டு கழுவி விடவும். இதை வாரத்திற்கு இரு முறை செய்யலாம்.
2.பார்லி மாவும் பாலுடன், எலுமிச்சைச் சாறு சேர்த்து கெட்டியாக களிம்பு தயார் செய்து, நேரடியாக முகம், கழுத்து, கைகளில் தடவலாம். பின்பு, 15 நிமிடம் வைத்திருந்து கழுவி விடலாம்.
3.வேப்ப இலைகளை நீரில் போட்டு கொதிக்க விடவும். முகம், கழுத்து, கைகள் இவற்றை கழுவ இந்த நீரை உபயோகிக்கவும்.
4.கொதிக்க வைத்த பாலுடன் பொடித்த வெந்தய களிம்பு சேர்த்து முகத்திலும், கைகளிலும் தடவிக் கொள்ளவும். இதனால் சருமம் மிருதுவாகும்.
5.ஒரு தேக்கரண்டி மஞ்சள் பொடி, பாலேடு, சந்தன பொடி, கடலை மாவு இவற்றை கலந்து களிம்பாக செய்து கொள்ளவும். இதை, முகத்தில் தடவி அரை மணி வைத்து பிறகு குளிக்கவும்.