சர்ப்பகந்தா மூலிகை

Spread the love

Sarpagandha medicinal uses

சர்ப்பகந்தி மரமானது மூன்று ஆண்டுகளில் முதிர்வடையும் தன்மையுடையது. இது மருந்துக்காக தோண்டி எடுக்கப்படுகிறது. இது இந்தியா, அந்தமான், தென்கிழக்கு ஆசியா, துணை ஆசியாக் கண்டம், பங்களாதேஷ், பர்மா, இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் பரவி வளர்க்கப்படுகின்றது.

இது விதைக்குச்சி, வேர் துண்டுகள் மற்றும் விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காய்கள் பூங்கொத்துடன் ஊதா கலந்த கருப்பு நிறத்துடன் காணப்படும். ஒவ்வொரு காயிலும் இரண்டு முதல் மூன்று விதைகள் காணப்படும். இதன் சுவையானது துவர்ப்பு கார்ப்பு மற்றும் கசப்புத் தன்மை உடையது.

சர்ப்பகந்தி வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையதாகும். இதற்கு அதிக குளிர் அதிக மழை தகாது. இதன் வேரானது 400 வருடங்களாக மூலிகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தாவர விபரம்

மூலிகையின் பெயர்சர்ப்பகந்தி
தாவரப்பெயர்RAUVOLFIA SERPENTINA
தாவரக்குடும்பம்APOCYNACEAE
வேறு பெயர்கள்சிவன் அமல் பொடி, பாம்புக்களா
பயன் தரும் பாகங்கள்ராவுன்பாயா டெட்ராபில்லர், ராவுன்பியா செர்பென்டினா, ஆர்.எஸ்.1

மருத்துவ பயன்கள்

இது உயர் இரத்த அழுத்தம், தூக்கமின்மை, மன அழுத்தம், இரத்த ஓட்டம் சீர்படும். மாரடைப்பு, திக்குவாய், மூளைக் கோளாறு, புற்றுநோய், முகப்பரு, நரம்பு வியாதிகள் போன்ற பலவற்றிற்கு குணப்படுத்தும் மருந்தாக பயன்படுத்தப்படுகின்றது.

தூக்கமின்மைக்கு

சர்பகந்தா பொடியை தேன் அல்லது பாலில் கலந்து சிறிதளவு எடுத்து அதனை காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர  இரத்த அழுத்தம் நீங்கும். இரவில் நல்ல தூக்கம் உண்டாகும். மனச் சோர்வு நீங்கும்.

சர்ப்பகந்தி பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து, அதனை  நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தூக்கமின்மைக்கு நல்ல மருந்தாகும்.

குடல் கோளாறுகள் நீங்க

பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் கர்ப்பப்பை  எளிதில் சுருங்கி விரிய சர்ப்பகந்தி வேரை  கஷாயம் செய்து குடிக்கலாம். இது குடல் கோளாறுகள் மற்றும் காய்ச்சல் போன்றவற்றை  நீக்கக் கூடியதாகும்.

இதன் இலையின் சாறு கண்விழி படலத்தின் ஒளிப்புகாத் தன்மையை போக்க வல்லது.

சர்ப்பகந்தி பொடியினை  சிறிதளவு நீர் அல்லது பாலுடன் கலந்து சாப்பிட்டு வர வயிற்று சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும்.

வெள்ளைப்படுதல் நீங்க

சர்பகந்தா பொடியினை அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதனை நீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறாக தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வர வெள்ளைப்படுதலில் இருந்து விடுபடலாம். இது நம் முழு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உயர் இரத்த அழுத்தம் குறைய

சர்ப்பகந்தி செடியின் வேரை நன்கு உலர்த்திப் பொடி செய்யவும். பின் இதனை ஒரு கிராம் அளவில் சம அளவு எடுத்து நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி மற்றும் தான்றிக்காய் பொடி ஆகியவற்றை சம அளவு கலந்து காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு வரலாம்.

பருக்கள் நீங்க

சர்ப்பகந்தி மூலிகையை நீரில் கலந்து அதனை பருக்கள் உள்ள இடத்தில் நன்கு தடவவும்.  இது எண்ணெய் தன்மையை  குறைத்து, பருக்களை நீக்குகிறது.

பாம்பு கடிக்கு

சர்பகந்தா வேரை பொடி செய்து அதனை பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டலாம். இது விரைவில் விஷம் முறிய உதவுகிறது.

குறிப்பு

சர்பகந்தா மூலிகையை  பயன்படுத்தும் முன் மருத்துவ ஆலோசனைப்படி நம் உடலின் இரத்த அளவு, சர்க்கரை அளவு, கொழுப்பின்  அளவு ஆகியவற்றை பரிசோதிக்கவும்.  பின் இதனை சாப்பிடலாமா, வேண்டாமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

சர்பகந்தா மாத்திரை வடிவிலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதனை மருத்துவ ஆலோசனைப்படி வாங்கி உபயோகிக்கலாம்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love