இதோட மருத்துவத்தை சொல்லவா வேணும்..? நீங்களே பாருங்கள்….

Spread the love

இயற்கை மூலிகையை பற்றி நாம் அதிகமாக தெரிந்து கொண்டு வருகிறோம். இன்றைக்கு இந்த வீடியோவில் பார்க்க போவது என்னவென்றால், பூமிக்கு அடியில்  புதைந்திருக்கும் தங்கம்,வைரத்திற்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதோ அதேபோல் மண்ணிற்குள் புதைந்திருக்கும் நன்னாரி வேருக்கும் அவ்வளவு மதிப்பு இருக்கின்றது. 

நன்னாரி வேரில் செய்ய கூடிய கஷாயத்தில் மூன்று சொட்டு தேன் கலந்து குடித்து வர மஞ்சள் காமாலையில் இருந்து தப்பிக்கலாம். இயற்கை வைத்தியத்தில் நன்னாரியின் வேர், உடல் உஷ்ணத்தை குறைத்து, சிறுநீரில் ஏற்படும் அனைத்து பிரட்சனையையும் குணப்படுத்த பயன்படுகிறது. 

ஆண்மை குறைவு, பித்தம், வாதம், ஒற்றை தலைவலி  இவையெல்லாவற்றிற்கும் நன்னாரி வேர் தலை சிறந்த மருந்து.நன்னாரியின் பச்சையான வேரை அரைத்து அதை 15௦ மி.லி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து வடிகட்டி காலை, மாலை என பாதியாக குடித்து வந்தால் சர்க்கரை நோய், சிறுநீர் தொற்று, வயிற்று கோளாறு, சொறிசிரங்கு, மேகநோய் போன்றவை குணமாகும். 

ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க, நன்னாரி வேரை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து அதை லேசான சூட்டில் குடித்து வர ஆண்மை வீரியம் ஏற்படும். நன்னாரி சர்பத் இந்தியாவில் பல பகுதிகளில் கிடைக்கும். இந்த வேர் கிடைக்காதவர்கள் இப்படி சர்பத் ஆக குடிக்கலாம். இதனால் மூலைச்சூடு, நீர் கடுப்பு, நீர் சுருக்கு போன்ற பிரட்சனைகள் தீர வலி வகுக்கும். இந்த வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றோடு கலந்து சாப்பிட்டால் விஷ கடி, பூச்சி கடி, அதனால் ஏற்படும் தொற்று இவையெல்லாம் குணமாகும். 

இதனால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. பொதுவாக வெயில் காலத்தில் நன்னாரி சர்பத் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கிடைக்கின்ற இடத்தை தெரிந்துவிட்டு வெயில் காலத்தில் ஏற்படும் உஷ்ணத்திற்கும் பலவித பிரட்சனைக்கும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். இரத்தத்தை சுத்தப்படுத்த நன்னாரி வேர் காரணம், காலம் காலமாக சித்த வைத்தியத்தில் பெரிய பங்களிப்பாக இருந்து வருகிறது.    Spread the love