சப்போட்டா பழம், முதன் முதலில் ஸ்பானிஷ் நாட்டுல் தான் வளர்க்கப்பட்டிருந்தது. 19– வது நூற்றாண்டில் இருந்து இந்தியாவில் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் தான் அதிகமாக சப்போட்டா பழம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்குள்ள பழத்திற்கு இனிப்பு அதிகம்.
சப்போட்டா ஒரு வெப்ப மண்டல பழப்பயிர் ஆகும். சப்போட்டா மரம் எந்த வகை மண்ணிலும் வளர கூடியது. சப்போட்டா மரத்தை நம் வீட்டிலே கூட வளர்க்கலாம்.
சப்போட்டா என்பது ஆங்கில பெயர் அதையே நாம் நடைமுறையிலும் பயன்படுத்துகின்றோம். ஆனால், சப்போட்டவின் உண்மையான தமிழ் பெயர் “சீமை இலுப்பை” என்பது ஆகும்.
சப்போட்டாவின் நன்மைகள்
கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரண்டு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வர வேண்டும், அவர்களுக்கு இது ஒரு இயற்கை மருந்தாகும்.
சப்போட்டா பழத்தை சாறு செய்து அதனுடன் தேயிலை சாறை சேர்த்து குடித்து வந்தால் இரத்த பேதி குணமாகும்.
கோடை காலத்தில் தினமும் சப்போட்டா பழ சாறு குடித்து வந்தால் உடலில் ஏற்படும் உஷ்ணம் குறையும், அதுமட்டுமல்லாமல் தாகத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.
இரவில் உறக்கம் இல்லையா? சப்போட்டா பழ சாறை குடித்து விட்டு, உறங்க சென்றால் ஆழ்ந்த உறக்கம் வரும்.
சப்போட்டா பழத்தில் விட்டமின் கி உள்ளது. தினமும் ஒரு சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வருவதால் நம் கண்ணிற்கு மிகவும் நல்லது. அத்துடன், வயதானாலும் உங்கள் கண் பார்வைக்கு எந்த குறைபாடும் வராது.
சத்து இல்லையா? சப்போட்டா சாப்பிடுவோம் வாங்க, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே உடலில் சத்து குறைபாடு இருக்கலாம், இனி கவலை வேண்டாம். தினம் ஒரு சப்போட்டா சாப்பிடுங்கள் போதும், ஏன்னென்றால் சப்போட்டா பழத்தில் அதிக அளவு குளுக்கோஸ் உள்ளதால் சத்து குறைபாட்டை சப்போட்டா தீர்த்து விடும்.
சப்போட்டா பழத்தில் கால்சியம், இரும்பு சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளதால் எலும்பிற்கு அதிக வலுக்கிடைக்கிறது.
கர்ப்பகாலத்தில் பெண்கள் சப்போட்டா பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம், அவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்றவற்றை குறைக்க உதவுகிறது.
சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது, தினமும் ஒரு சப்போட்டா சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு பளபளப்பை தருவதுடன், அழகை மேம்படுத்த உதவுகிறது.
சப்போட்டா பழ விதையில் இருந்து பிரித்தெடுக்கும் எண்ணெய்யை முடியில் தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் கூந்தலின் பளபளப்பு அதிகரிப்பதுடன், கூந்தலின் மென்மை தன்மையும் அதிகரிக்கிறது.
சப்போட்டா பழத்தை, தினம் ஒன்று சாப்பிட்டு வந்தால் குடல் புற்று நோயில் இருந்து தப்பிக்கலாம்.
சளி அதிகமாக உள்ளவர்கள் சப்போட்டவை ஜுஸ் செய்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து குடிப்பதன் மூலம் சளி குணமாகும்.
சப்போட்டா பழத்தை சாப்பிட்ட பிறகு சீரகத்தை நன்கு மென்று சாப்பிட்டால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கு இது நல்ல மருந்து.
குறிப்பு
சர்க்கரை நோய் உள்ளவர்கள் சப்போட்டா பழத்தை தவிர்ப்பது நல்லது.
சப்போட்டா ஜுஸ்
தேவையான பொருட்கள்
பால் – அரை கப்
தேன் – தேவையான அளவு
சப்போட்டா – 5
செய்முறை
சப்போட்டா பழத்தை தோல் நீக்கி விதைகளை எடுத்து விட்டு அதனுடன் லு கப் தண்ணீர், அரை கப் பால் மற்றும் தேன் ஊற்றி மிக்சியில் அரைக்கவும். பின்பு, ஒரு கப்பில் பரிமாறினால், சுவையான சப்போட்டா பழ ஜுஸ் தயார்.
எச்சரிக்கை
சப்போட்டாவை காயாக உண்ணும் போது கசப்பு சுவையை உணரலாம். சப்போட்டா காயை சாப்பிடுவதினால், வாய் புண், வாய் அழற்சி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படக்கூடும். அதிக அளவு சப்போட்டாவினை சாப்பிடுவதனால் வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால், அளவோடு உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம்.
கீ..பி