பூமியின் இயக்கம் என்பது மனித வாழ்க்கை. ஆனால் இது மேம்போக்கான விஷயம். இவற்றைத் தாண்டி ஒரு இடத்திற்கு மனிதர்கள் போகமுடியும்.(சிந்திக்க முடியும்) என்று வேதமே கூறுகிறது. வேதம் என்பது வாழ்வுக்கான வழிகாட்டி. எனவே, அது ஒருகாலமும் புறக்ககணிக்கக்ககூடியது அல்ல.
ஒரேவிதமான சரீர மன அமைப்புகளுடைய மனிதருக்கு நடுவே போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டியால் எப்படியும் மேன்மையடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தர்ம காரியங்களில் அந்தணர்கள் அதிகம் ஈடுபடுகிறார்கள். இங்கேயே இந்த விஷயத்தை தெளிந்து ஆன்ம தரிசனம் பெற்று தெளிவு என்கிற உந்த லோகத்தை அடைகிறார்கள். தர்மத்தை பஹிர் முகமாக பேசுபவன் உயிர்த்தவன் இல்லை. தர்மத்தை பேசியும், தான் இருப்பதாகக் சொல்லியும், வாழ்வதில் வெற்றி கிடைப்பதில்லை. மாறாக தர்மம் அந்தர்முகமாகிய விடவேண்டும். அவனே தர்மமாகிவிடவேண்டும். இது மிகபெரிய சாதனை. ஓரளவுக்கு மேல் இதைச் சொல்லித்தர முடியாது.
அப்படி தர்மத்தை அந்தர்முகமாக்கிக் கொண்டவனுக்கு, அதுவாகவே வாழ்கின்றவனுக்கு மரணம் பயம் தருவதில்லை. அவனைத் தீண்டுவதே இல்லை. தன்னைப் பற்றிய பெருமையை வெளியேசொல்லி தன்னை மிக உத்தமன் என்று சொல்லிக் கொள்கிறவன் அப்படி வாழ்வது உண்மையாயினும், நாயிக்கு ஒப்பானவான். நாய் கக்கியதை மறுபடி தின்பதுபோல தான் வாழ்வதைச் சொல்லி அதனால் மறுபடியும் பராபல்யம் அடைய முயற்ரசிக்கிறான்.
இவன் எப்பொழுதும் வேண்டுமானாலும் விழிச்சியடைவான். எவன் தன் குடும்பத்து மக்களாலும் தன் பிற பாவத்தை மறைத்துக் கொள்கிறானோ, தன்னை சாதாரணமாகக் காட்டிவலம் வருகிறானோ,உலக குணங்கள் பார்த்து உள்ளே நகைத்தபடி இருக்கிறானோ, அவனை மரணம் தீண்டுவதில்லை. அவனை காலம் நினைவில்கொள்கிறது. அவன் வாழ்பவனாக ஆகிறான்.
சரீரம் உகுத்தப் பிறகும் கௌரவிக்கைப்படுகிறான். இருப்பதாக உணரப்படுகிறான். இவனை ஞாணி என்றும் அழைக்கிறார்கள. இந்த ஞாணிக்கு மரணம் இல்லையென்றுயம் சொல்கிறார்கள்.எவன் இந்த ஒரு விஷயத்தை வழங்க தானம் பெறுவதில்லையோ, எவன் நல்லோர்களால் மதிக்கப்படுகிறானோ, எவனால் இந்த பூமிக்கு உபத்திரவம் இல்லையோ எவன் இந்த விஷயத்திற்கு சீடனாக இருக்கிறானோ அவனே உயர்ந்தவனாவான்.