சாமை பிடிகொழுக்கட்டை

Spread the love

தேவையான பொருட்கள்

சாமை               1 கப்

தண்ணீர்              3 கப்

கடுகு                1/4 டீஸ்பூன்

சிவப்புமிளகாய்        2

பெருங்காயம்         1/4 டீஸ்பூன்

கறிவேப்பிலை        சிறிது

தேங்காய்             1/4 கப்

எண்ணெய்            2 டேபிள்ஸ்பூன்

உப்பு                 தேவையானஅளவு

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் மூன்று கப் தண்ணீர், உப்பு, தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன் சாமையை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை குறைத்து வைத்து வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். வெந்தவுடன் அதனை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும். ஆறியவுடன் கையில் பிடிகொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வேக வைக்கவும். வெந்தவுடன் எடுத்து காரச் சட்னியுடன் பரிமாறவும்.

ஆயுர்வேதம்.காம்


Spread the love