சத்துள்ள சாமை!

Spread the love

சிறுதானியங்களில் மிக முக்கியமானது சாமை. இதை தற்போது நவீன உணவுமுறையில், புகுத்தி மாற்றத்துக்கான உணவு தயாரிக்கின்றனர். சாமை புல் இனத்தைச் சார்ந்த பயிராகும். மலை கிராமங்களில் உள்ள மலை கிராம மக்கள் சாமையினை உணவு பொருளாக பயன்படுத்தி வந்தனர். அனைத்து மக்களும் சாமையின் உணவாக சாப்பிட்டு வருகின்றனர். பொதுவாக மக்கள் உணவு பொருளாக பயன்படுத்தி வரும் தானிய வகைகளை பெருவகை தானியம், சிறுவகை தானியம் என இரண்டாகப் பிரிக்கலாம்.

பெருவகைதானியம் அதாவது கம்பு, சோளம், மக்காசோளம், நெல் உள்ளிட்டவைகளாகும். சிறுவகை தானியங்கள் அதாவது சாமை, பனிவரகு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். உற்பத்தி செய்யபட்ட சாமையினை அரிசியாக்க கைகுத்தல், அரவை மிஷின் மூலம் அரைத்து அரிசியாக்கலாம். கைகுத்தல்,அரவைமிஷின் மூலம் தயாரிக்கப்படும் சாமை அரிசியில் சத்துக்கள் அதிகம் இருக்கும். பொதுவாக அரிசிகள் கரும்பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த சாமை அரிசியை பாலீஸ் போட்டும் அரிசியாக்கி சமைத்து உணவாக பயன்படுத்தலாம். அப்படி பாலிஸ் செய்யப்படும் சாமையில் குறைந்த அளவுள்ள சத்துக்கள் தான் இருக்கும். சாமையில் அதிக புரத சத்துக்கள் மற்றும் மருத்துவக்குணங்கள் உள்ளன. ஆகவே தான் சாமையினை பலர் உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மலை கிராம மக்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய உணவாகும். சாமை உணவு விரைவில் பசிக்காது. இதனை சோறு போன்றும் கஞ்சி, களி போன்றும் உணவாக உட்கொள்ளலாம். பொதுவாக கொழுப்பு சத்து குறைந்த உணவாக சொல்லப்படுகிறது.

ஆயுர்வேதம்.காம்


Spread the love