உப்பு, மிளகு, எலுமிச்சைச்சாறு கலவை தீர்க்கும் நோய்கள்

Spread the love

நாம் சாப்பிடும் சாலட் டின் சுவையைக் கூட்டுவதற்கு அல்லது சமைக்கும் உணவின் ருசியை அதிகரிப்பதற்கு, உப்பு, மிளகு, எலுமிச்சைச் சாறை சேர்த்துக் கொள்வோம் என்பது தெரியும். ஆனால் இதுமட்டுமின்றி பல நோய்களை தடுக்கும் அல்லது குணப்படுத்தும் எளிய வகை மருந்தாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருக்கும் மனிதர்கள் குணம் பெற உப்பு, மிளகு, எலுமிச்சம் பழச்சாறு எவ்வாறு  உதவுகிறது என்று பார்க்கலாம். மேற்கூறிய முன்று பொருட்களும் கிராமம் முதல் மாநகரம் வரை தேவையான அளவும், எளிதாகவும் கிடைக்கக் கூடியது என்பதுடன் நமது வீட்டுச் சமயலறையில் எப்போதும் இருக்க கூடியது.

உப்பு, மிளகு, எலுமிச்சைச்சாறு குணப்படுத்தும் நோய்கள்:

தொண்டைப்புண் சாதாரண சளி, காய்ச்சலினால் ஏற்படும் தொண்டைப் புண்ணில் இருந்து நிவாரணம் பெற வேண்டுமா? கீழ்க்கண்ட முறையில் இயற்கையான மருந்தை தயார் செய்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

 எலுமிச்சைச்சாறு_ஒரு மேஜைக் கரண்டி இரு மிளகு பவுடர்_அரை தேக்கரண்டி; தண்ணீர்_ஒரு டம்ளர்; கடல் உப்பு_ ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறில் மிளகு பவுடர் சேர்த்து நன்றாக கலக்கிக் கொண்ட பின்னர் அதில் நீர் மற்றும் கடல் உப்பைச் சேர்த்துக் கொண்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும் மேற்கூறிய கஷாயம் போல உள்ள திரவத்தை வாயில் விட்டு குதப்பி, வாய்க் கொப்பளிக்க வேண்டும். தினசரி குறைந்த பட்சம் 2, 3, முறைகளாவது வாயிலிட்டு இக்கலவையை வாயில் இட்டு கொப்பளித்து வர, வாய்ப் புண்ணில் இருந்து நிவாரணம் பெறலாம். இம்முறையை கடைபிடிக்க இருமல் தொந்தரவு வராமலும் தடுக்கலாம்.

மூச்சு விட சிரமப்படுதல் (மூக்கடைப்பு):

மூக்கடைப்பு இருந்தால் ஒரு தும்மல் போட்டால் போதும் இது தான் சிறந்த வழி இயற்கையாக தயாரிக்கும் மருந்துவ விபரம் தெரிந்து கொள்ளுங்கள் கருமிளகு, சீரகம், இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் விதைகள் ஓவ்வொன்றிலும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து உலர் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய கலவைப் பொடியை, பருத்தித் துணி ஒன்றில் வைத்துக் கொண்டு மூக்கின் அருகே வைத்து வாசம் பிடிக்க வேண்டும். இதன் மூலம் உங்களது மூக்கில் தும்மல் வரும் உணர்வு து£ண்டப்பட்டு, தும்மல் ஏற்படும் மேற்கூறிய தும்மல் காரணமாக மூச்சு விட முடியாமல் திணறச் செய்த மூக்கடைப்பை சரி செய்ய முடிகிறது.

பித்த கற்கள்:

பித்தக் கற்கள் பித்தப் பையில் உருவாகின்றன. கடினமான உணவு வகைகள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகும். அத்துடன் செரிமான இயக்கத்தில் ஈடுபடும் உள்ளுறுப்புகளுக்கு சிரமத்தைத் தரும். சிரமப்பட்டு செரிமானம் ஆகும் உணவுகளின் அமிலங்கள் தான் பித்தப் பையில் கற்களாக உருவாகி தங்கி விடுகின்றன. மிகுந்த வலியையும் வேதனையையும் தரும். செரிமான இயக்கத்தையும் தடைப்படுத்தும். பித்தக்கற்களை அறுவைச் சிகிச்சை செய்து தான் நீக்க வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

இருப்பினும் இயற்கை வைத்திய முறையில், உடலில் காணப்படும் பித்தக்கற்களை எளிதாக நீக்கி விடாமல். எளிமையானதாகவும், குணப்படுத்துவதில் திறன் அதிகமாகவும் உள்ளது. எலுமிச்சைச்சாறு மற்றும் கருமிளகு ஒவ்வொன்றிலும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவும். இதனை 3 தேக்கரண்டி அளவு ஆயில் எண்ணெயை கிண்ணத்தில் இட்டு, எலுமிச்சைச்சாறு, கருமிளகையும் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவும். உடலில் காணப்படும் பித்தக்கற்கள் நீங்குவதற்கு, தினம் தோறும் தவறாமல் மேற்கூறிய மருந்தை உட்கொண்டு வர வேண்டும்.

கேன்கெர் புண்:

இப்புண் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட ஒரு சில நோயாளிகளினால் பேசவோ, உணவை சாப்பிடவோ மிகவும் வலியும், சிரமமும் படுவார்கள் வாய்ப்பகுதியில் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற படலத்தில் தோன்றும் இப்புண்ணை எளிதாக குணப்படுத்தலாம். ஒரு மேஜை கரண்டி உப்பை ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரிலிட்டு கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய் உட்பகுதியில் உள்ள பாக்டிரியாக் கிருமிகளை வெளியேற்ற இயலும் என்பதுடன் மேற்கூறிய புண் விரைவில் குணமாக செயல்படும்.

உடல் பருமன் குறைத்தல்:

எந்த வித கடினமான செய்முறைகளினாலோ, அதிக நேரம், அதிக பணம் செலவழித்து, உடல் எடையைக் குறைக்க வேண்டுமே என்ற கவலையை விட்டு விடுங்கள். இங்கு நாம் கூறிய மூன்று பொருட்கான உப்பு, மிளகு, எலுமிச்சை மூலமே மிகவும் எளிய முறையில் உடல் எடையைக் குறைக்கலாம். மேற்கூறிய பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பானத்தை தினசரி தவறாமல் அருந்தி வர வேண்டும். அவ்வளவு தான் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் எடுத்துக்கொண்டு, அதில் 2 மேஜைக் கரண்டி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கொள்ளவும். மை போல அரைக்கப்பட்ட கருமிளகை (ஒரு மேஜைக் கரண்டி அளவு)யும் ஒ-ரு மேஜைக்கரண்டி அளவு தேனையும் கலந்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி தினசரி காலை வெறும் வயிற்றில் அருந்தி வர வேண்டும். எலுமிச்சைச் சாறும், கரு மிளகும் உடலில் வளர்ச்சிதை மாற்ற இயக்கத்தை மேம்படுத்தும். எலுமிச்சைச் சாறில் உள்ள பாலிபெனால் என்ற வேதிப்பொருள் உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலின் இன்சுலின் சுரப்பைத் து£ண்டி, கொழுப்பை எரிக்கும் செயலுக்கு உதவி புரிகிறது.

வாந்தி:

உங்களுக்கு வயிறு சரியில்லாதது போல ஒரு உணர்வு ஏற்படுகிறதா? கரு மிளகு கையில் இருந்தால் போதும். கரு மிளகு பயன்படுத்தி வயிறு சரியின்மையால் வரும் வாந்தி உணர்வை தடுக்கலாம். எலுமிச்சைப் பழத்தினை முகர்ந்து பார்ப்பது வாந்தி உணர்வை தடுக்கக்கூடியது. நெடுந்து£ர பிரயாணங்களில் பேருந்தில் செல்லும் பொழுது வாந்தி, குமட்டலைத் தவிர்க்க எலுமிச்சம் பழத்தை கையில் வைத்திருப்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள்.

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி கருமிளகுப் பொடியும் சேர்த்து அதை ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கலக்கியபின் உடனடியாக அருந்திவிட வேண்டும். சிறிது நேரத்தில் வாந்தி உணர்வானது மறைந்து போகும். மனதிற்கும், உடலிற்கும் ஒரு ரிலாக்ஸ் கிடைக்கும்

ஆஸ்துமா:

உங்கள் குடும்பத்தில் நீங்களோ, அல்லது யாராவது ஆஸ்துமா நோயினால் அவதிப்படுபவர்களாக இருந்தால், உங்கள் சமயலறையில் மிளகு, பேசில் இலைகள், கிராம்பு போன்ற நறுமணப் பொ-ருட்கள் அவசியம் இருக்க வேண்டும். மேற்கூறிய பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொள்வதன் மூலம் ஆஸ்துமா தொந்தரவுகளை தவிர்க்கலாம். 10 கிரெய்ன்ஸ் மிளகு, பேசில் இலைகள் 15 எண்ணம் மற்றும் இரண்டு கிராம்புத் துண்டுகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு கோப்பை  கொதிக்கும் நீரில் இட வேண்டும். சுமார் 15 நிமிடங்கள் வரை மிதமான வெப்பநிலையில் வைத்து, அடுப்பிலிருந்து எடுத்து ஒரு கண்ணாடி ஜாரில் வடிகட்டி சேமித்துக் கொள்ளவும். இதில் 2 டிஸ்பூன் தேன் கலந்த பின்பு குளிர வைத்து விடவும். மேற்கூறிய முறையில் தயாரிக்கப்பட்ட கலவையை பிரிட்ஜில் வைத்து 2 வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் பால் சேர்த்து தொடர்ச்சியாக அருந்தி வர ஆஸ்துமா தொல்லைகள் குறையும்

பல் வலி:

 பல் வலி வேதனையை வீட்டிலேயே மருந்து தயாரித்து குணப்படுத்திவிடலாம். மிகவும் எளிதான முறை இது. மைபோல அரைக்கப்பட்ட மிளகுடன் ஒரு தேக்கரண்டி சிறீஷீஸ்மீ  ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு இதனை பற்பசைபோல தினசரி இரண்டு வேளை என காலை, மாலையில் பற்களில் வைத்து, பிரஷ் கொண்டு துலக்கி வரவும். இதனைச் செய்து வரும் பொழுது புளிப்பான, இனிப்பான உணவு வகைகளைச் சாப்பிடுவதை, பல் வலி முற்றிலும் குணமாகும வரை தவிர்த்து விட வேண்டும்.

ஜலதோஷம் மற்றும் ஃப்ளுசுரம்:

 சாதாரண காய்ச்சலுக்கும், சுரம் காரணமாக அவதிப்படும் பொழுது மருந்துவ மனைக்கே செல்ல வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையானதெல்லாம் அதை எலுமிச்சம் பழத்தினைப் பிழிந்தெடுக்கப்பட்ட சாறு மட்டும் தான். அந்த சாறுடன் ஒரு கோப்பை சூடான நீருடன் கலந்து கொள்ள வேண்டும். எலுமிச்சைப்பழத்தின் தோல் மற்றும் அதன் அடர்த்தியான சதையை நீரில் 10 நிமிடம் அமிழ்த்தி ஊற வைக்க வேண்டும். எலுமிச்சைப் பழத்தை எடுத்து விட்டு, நீரை வடிகட்டி வேண்டும். வடிகட்டிய நீருடன் ஒரு மேஜைக் கரண்டி தேன் கலந்து கொண்டு தினசரி இரு வேளை அருந்தி வர காய்ச்சல், ஜலதோஷம் பறந்து விடும்.

மூக்கில் இரத்தம் ஒழுகுதல்:

வெயில் காலத்தில், ஒரு சிலருக்கு மூக்கில் இருந்து இரத்தம் வடியும். இதைக் கண்டு நாம் பயப்பட அவசியமில்லை எலுமிச்சைச்சாறில் 5 அல்லது 6 துளிகள் எடுத்து பருத்தித் துணியில் நனைத்து மூக்குத் துவாரத்தில் வைக்க வேண்டும். மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகுவது நிற்கும் வரை மூக்குத்துவாரத்தில் வைத்திருத்தல் அவசியம். இது மேலும் வாந்தியைத் தவிர்க்கும். தலைவலிக்கும் மருந்தாகும். சிறுசிறு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரை ஊசி என்று கொண்டு போவது நல்லதல்ல. இயற்கை முறையில் மேற்கூறிய நோய்களை எளிதில் குணப்படுத்தி விடலாம். இதில் பக்க விளைவுகள் ஏதுமில்லை என்பது குறிப்பிடத் தக்க ஒன்று. ஆகவே இயற்கை முறை மருந்துவ சிகிச்சையை நாம் மேற்கொள்வோம்.


Spread the love
error: Content is protected !!